போனவாரம் காரைக்குடி பயணம். அங்க என்கூட படிச்ச கூட்டாளிகளை பாக்கறதுக்கு 14 வருசம் கழிச்சு போனேன்னு ஆரம்பிச்சன்னா “இவங்கூட இந்த கொசுவத்தி தொல்ல தாங்கமுடியலடா!”ன்னு நீங்க எஸ்ஸாக வாய்ப்புகள் அதிகமிருப்பதால், நண்பரது வீட்டில் காலை டிபனே முழுவாழையிலையில் பால்பணியாரம் தொடங்கி 12 ஐட்டங்களுடன் சாப்பிட்டதையோ, மதியத்துக்கு மட்டனிலே மூனுவகையும் சிக்கனிலே நாலு வகையுமாக ”முழு” இலையில் பிரண்டு எழுந்ததையோ (நண்டு சாப்ட்டு பழக்கமில்லாத்தால தொடலை! ) அப்பறமா சாயந்தரம் கமுக்கமாக லாட்ஜ்ல ரூம்போட்டு பயக எல்லாம் ஃபுல் அடிச்சும் ஸ்டெடியாக நின்னு பழய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய காலேஜ் லவ்வு பஞ்சாயத்தையெல்லாம் பேசி தீர்த்துக்கினதையோ இங்கே சொல்லப்போவதில்லை! :) ஆனால் சில படங்கள் மட்டும் போட்டால் பார்க்காம போக மாட்டீங்கன்னு... சுட்ட கருத்துக்கள் அனைத்தும் படத்தைப்பார்த்ததும் (தொடர்பிருக்கோ இல்லையோ.. ) நினைவில் வந்த படித்துப்பிடித்ததன் குறிச்சொற்களை கூகிளிட்டு கிட்டியவை. ”ஒவ்வொரு புனிதனுக்கும் ஓர் இறந்தகாலம் உண்டு. ஒவ்வொரு பாவிக்கும் ஒரு வருங்காலம் உண்டு” - வி. ஆர். கிருஷ்ணய்யர் இன்றைய பிரபலமும் அன்றைய புதுமுகமும் - இசைஞானி...
www.ilavanji.com