என்ன்ன்னக் கொடுமைங்க இது? கலிஞரு, சன்னு, ராஜு, கேடிவின்னு எப்ப எந்த சேனலை திருப்புனாலும் ஆடறாய்ங்க ஆடறாய்ங்க... ஆடிக்கினேக்கீறாங்க... லிட்டில் ஜீப்பரு கண்ணீரு விட்டப்பக்கூட இத்தெல்லாம் ஒரு ட்ரெண்டு.. கொஞ்ச நாளைக்குள்ள காணாமப்பூடும்னு மன்சத் தேத்திக்கினுதான் இருந்தேன். ஆனா நாளாக நாளாக யாரும் அடங்கறமாதிரி தெரியலை! ஜிகினா ட்ரெஸ்ஸு, மாறுவேசம், அன்ராயர் லுங்கி, இலைதலைன்னு ஒன்னுவிடாம ஆடையலங்கோலம் செஞ்சுக்கிட்டு வராத ஆட்டத்தை ஆடியே காட்டுவேன்னு கெட்ட அலப்பரை! சின்னத்திரை பெரபலங்க எல்லாம் காசுக்கு காசாச்சு ஒடம்பும் எளைச்சாச்சுங்கற கணக்கா ஆடற குத்தாட்டாம் அவிங்களுக்கு நல்லதுதான். ஆனா அதைச்சுத்தி தோத்தா அழுகை, கெளிச்சா அலம்பல்னு ரியாலிட்டி ஷோன்னு எப்பப்பாரு அடிக்கற கூத்தைப் பார்த்தா தமிழனுங்க அத்தனைப்பேரு வீட்டுலயும் நாலு விஜய், மூனு ரம்பாக்களை உருவாக்காம விடமாட்டானுவ போல! நாமெல்லாம் வீட்டுல திங்கறது, தூங்கறது, பேசறது, சமைக்கறதுன்னு எல்லாத்தையும் டான்சுலயே செய்யறதுன்னு ஆகற வரைக்கும் இது ஓயாது போல! தமிழருங்களே! நெலமை அந்த அளவுக்கு ஆயிடுச்சுன்னாலும் பார்த்துங்கப்பு... ”ஆய்” போறாப்பயாவது டான்சுக்கு கொஞ்சம் ரெஸ்ட்டு குடுங்க... இல்லைன்னா...
*****
சமீபத்தில் ( அது என்ன சமீபத்தில்..?! இந்த வார்த்தைய கேட்டாவே எரிச்சலா இருக்கு! இதுக்கு முந்தைய எரிச்சல் வார்த்தை “இடையறாது...” ) பெசண்ட்நகர் பக்கத்துல பஸ்ஸுக்காக நிக்கறப்பதான் அவங்களை கவனிச்சேன். பெர்ர்ரீய நெத்தியும் 42 சைசு பேண்ட்டு தொப்பைக்கு கீழுமாக அவரும், கருப்பு பூப்போட்ட டாப்ஸ்சும் பத்தாத தொளபொல ஜீன்ஸ்சு 4 டன்லப் லாரிடயர்களை இடுப்பில் அமிழ்த்திய பாடுமாக அந்த அம்மிணியும். அந்த ஆம்பளைக்கு 45 இருக்கும். அந்த பொம்பளையாளுக்கு எப்படியும் 38. கடைகளை ஒட்டிய பார்க்கிங்லயே ஒரே லவ்ஸ்சும் கொஜ்சல்ஸ்சுமாக இருந்தாய்ங்க. என்னடா இது இப்படி ஒரு அல்பைக்காதலா இருக்கேன்னு நினைச்சுக்கிட்டு (அப்பறம் தமிழ்நாட்டுல எங்க இந்த வயசு ”தம்பதி”ங்க பப்ளிக்ல கொஞ்சறாய்ங்க?! ) வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சேன். கொஞ்ச நேரத்துல அந்த அம்மணி கைனடிக்கையும் அந்த ஆளு பைக்கையிம் எடுத்துக்கிட்டு கெளம்புனாய்ங்க. ரோட்டோரமே சிக்னல். அந்த ஆளு அம்மணி பின்னாடி நின்னுக்கிட்டு அந்த செத்துப்போன ஹீரோஹோண்டாவை டர்ர்ர் டர்ர்ர்னு முறுக்கி படம் காட்டிக்கிட்டு இருந்தாரு. சிக்னல் விழுந்ததும் வண்டிங்க நகர, நம்ப ஆளுக்கு இளமை திமிர ஸ்பீடாக அம்மணீ வண்டிய க்ளோஸ் கட்டடிச்சு ஓவர் டேக்குனாரு! அம்புட்டுத்தேன். பேலன்ஸ் தவறி திருகி விழ வண்டி அவரு மேலயே எக்குத்தப்பாக எகிறி விழ அம்மணீ வண்டிய அங்கனயே நிறுத்தி அய்யோன்னு கத்திக்கிட்டு முகத்தைப் பொத்திக்கிட்டு உறைஞ்சிருச்சு.. நான் என்னையும் அறியாம ”..க்காளி விழுடா அப்படி!”ன்னு வாய்விட்டே கத்திட்டேன்!
அப்பறம் என்ன நடந்ததா? ரெண்டுபேரும் தத்தம் வண்டிகளை பொறுக்கிக்கொண்டு தள்ளிக்கிட்டே பக்கத்து ஜீஸ்கடைக்குபோய் தண்ணி வாங்கி கை சிராய்ப்பையெல்லாம் கழுவி, ஐஸ் கட்டி வாங்கி ரத்த விளாருல எல்லாம் தடவிக்கிட்டே கண்ணுல தண்ணியோட “வலிக்குதா.. வலிக்குதா..”ன்னு மீண்டும் கொஞ்சல்ஸ்...
எனக்கு வயிறு எரிந்தது.
*****
கீழ்காணும் படங்களில் இருப்பது நயன்தாரா தான் என உறுதிபட எப்படிக் கண்டறிவது? எப்படி வேணாலும் எதை வேணாலும் எந்த ஆங்கிள்ல வேண்டுமாலும் உத்து உதறிப்பார்த்துக்கங்க.. ஆனா, 100% உறுதியா இது நயன்தாரா தான்னு நான் எப்படி சொல்லறன்னா.... மாட்டேன்.. கடைசியாத்தான் சொல்லுவேன்! இல்லைன்னா உருப்படியான மேட்டரு ஓவருன்னு இதோட பதிவை மூடிருவீங்க! )
*****
பகுட்டுக்கும் தலைக்கும் நாலு விரற்கடைதான் டிஸ்டண்சு... முன்னதுல காலைல வழிச்சா சாயந்தரம் சொரசொரங்குது. பின்னதுல போனாபோனதுதான்! ஆண்டவன்னு ஒருத்தன் இருக்கனும்யா! இல்லைன்னா மனுசப்பயலுகளுக்கு ஏது இப்படியெல்லாம் மண்டைய டிசைன் செய்யற புத்தின்னேன்?! ஆனா சொல்லவந்த மேட்டரு அதில்லை!
இப்பத்தான் சிலநாட்களாக அது கண்ணில் படுகிறது! அதுவும் எப்பொழுது? மூணுநாளை ஒருமுறை சரவம் செய்யறப்ப மட்டும்! என்னதா? ஒரே ஒரு நரைமுடி! எங்கயா? வலது பகுட்டுல கீழாக. மொதல்ல பார்க்கறப்பவே பகீருன்னது. ம்ம்ம் என்ன செய்ய? ”தலை”யில் கூட இன்னும் ஒரு நரைமுடி இல்லை. ஆனால் அதற்குள் தாடியிலான்னு க்யாராகி வருத்தப்படலாமா? இல்லை நாம ரஜினி மாதிரி ஆவப்போறோம்னு சந்தோஷமா விட்டுடலாமா? ன்னு சில நாளாக கொழப்பம். சரி கழுத தொலைஞ்சு போகுது.. விட்டுரலாம். இருந்தாலும் அந்த ஒத்தை நரைமுடி... ஹிம் :(
*****
ஒரு வாரமாக இரா. முருகனின் அரசூர் வம்சம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது, நான் வீட்டுக்கும் ஆபீசுக்கும் ஊடால ஓடிக்கிட்டு இருக்கறப்ப எல்லாம் படிச்சுக்கிட்டிருக்கறது. ரொம்ப நாளாச்சு இப்படி ஒரு மாயச்சுழலுக்குள் இழுத்துப்போகும் ஒரு கதையைப் படித்து... இதுக்கு முன்னாடி ஏழாங்கிளாசுல கடைசிப்பக்கங்கள் கிழிஞ்சுபோன ஒரு ராஜகுமாரி கதை. முக்காவாசிக்கதையில அந்த ராஜகுமாரிய ஒரு கிளியா மாத்தி மந்திரவாதி ஏழுகடல் ஏழு மலைதாண்டி ஒரு ஆலமரத்து பொந்துல மறைச்சு வைச்சிருவாப்புல. வெட்டுக்கிளிகளுடன் நட்பு வைச்சுக்கிட்டு ஒரு குளிகைய சாப்புட்டுட்டு வெட்டுக்கிளி சைசுக்கு மாறிய ராஜகுமாரன் அதுக மேலயே ஏறி ஒரு படையா கடலைத்தாண்டி கெளம்புவாப்புல.. கடைசிப்பக்கம் கிழிஞ்சு போனதால இன்னைக்கு வரைக்கு அந்தாளு அந்த கெட்ட மந்திரவாதிக்கு ஆப்படிச்சு இளவரசிய மீட்டுவந்தாரான்னு தெரியாம மண்டையக் கொடையுது. அடடா.. மேட்டரு எங்கயோ போகுது..
ஒருவாரமா சிலதெல்லாம் பூடகமா நடக்குது. ஹிக்கின்பாதம்ஸ்சுக்கு முன்னாடி நின்னுக்கிட்டு போகலாமா வேணாமானுட்டு கொழம்பி அப்பறம் மனசுக்குள்ள போகவேணான்னு ஒரு குரல் சொல்ல வேணாம்னு விட்டுட்டேன். பொறவு திடீருன்னு ஒரு பிகரைப்பார்த்து அதுபின்னாடியே போலான்னு கெளம்பறப்ப செருப்பு வாரு பணால்! எப்பவும் பாஸ்வேர்டு மாத்தினதுக்கு அப்பறம் அதை ஒரு டெக்ஸ்ட் பைல்ல தொடர்ச்சியா போட்டு வைப்பேன். முந்தாநேத்து மாத்திட்டு பைலைத்திறந்தா நான் மாத்தின பாஸ்வேர்ட்டு முன்னாடியே அதுல இருக்கு! போனவாரம் சேவ் செய்த தேதியோட! ஆபீசுல என் சீட்டு ஒரு பெரீய்ய்ய கண்ணாடி ஜன்னலுக்கு ஒட்டி. ரெண்டு நாளைக்கு முன்னாடி அதுவழியா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கறப்ப ஒரு கருகரு காக்கா ரெக்கைகளை அடிச்சுக்கிட்டு கத்துச்சு.. அது எங்காதுல ”ஆப்பு வருது.. ஆப்பு வருது...” ன்னே விழுந்தது. என்னடா இது கெரகசாரம்னு வந்து மெயிலை பார்த்தா, எங்க தலைக்கும் தலை என்பேரை எங்கனயோ புடிச்சு ஒரு மேட்டரை வைச்சு எனக்கு ஒரு பெர்ர்ரீய்யா ஆப்பா அடிச்சிருந்தாரு... சமாளிச்சிறாலாம்னாலும் வலி தாங்கனும்! அந்த காக்காத் தாத்தாவை மறுபடியும் பார்த்தா ஒரு கல்லாவது விட்டெரியனும்!
இப்படியே போனா கதை கந்தலாயிரும் போல. அதனால சீக்கிரமா அரசூர் வம்சத்தை முடிச்சுட்டு அதுல இருந்து தப்பிக்க “நான் ஏன் இந்து அல்ல?” அப்படிங்கற புத்தகத்தை எடுக்கனும்!
*****
சமீபத்திய நண்பர்களுடனான வாட்டர் ஸ்போர்ட்ஸ்சில் வழக்கம் போல ஆனைக்கு அர்ரம்னா குதுரைக்கு குர்ரம்ங்கற கணக்கா “கலந்து” உரையாடியபோது ( ”LKGக்கு எதுக்குடா 25,000 பீசு? - அப்படின்னா உனக்கெடுக்குடா 20 லச்சம் சம்பளம்?”... “ஒரு கமல் படம் பார்த்த திருப்தியே இல்ல மாமு...- கமல் படம் இப்படித்தான் இருக்கனும்னு போனது உன் தப்பா? அவரு தப்பா?” ”கள்ளச்சாரய சாவுக்கு அந்த முட்டாப்யக தான் பொறுப்பு! - அப்படின்னா இப்ப நீ அடிக்கற டாஸ்மாக்குல செத்தாலும் நீதான் பொறுப்பா?!”
பேச்சு இதே ரேஞ்சுல போக நண்பரு காண்டாகி கேட்டாரு..
“எல்லாத்துக்கும் ஒரு எதிர் அபிப்பிராயம் இருக்க வேணுங்கறதுதான்.. அதுக்காக அதையெல்லாம் எப்பப்பாரு சொல்லிக்கிட்டே இருக்கனுங்கன்னு அவசியமில்ல..”
“ஒன்னைப்பத்தி உனக்கு ஒரு கருத்து இருந்தா எனக்கு இன்னொரு எதிரான கருத்து இருக்கறது தப்பில்லையே! அப்படியாப்பட்ட கருத்தை சொல்லாம உனக்கு ஆமாஞ்சாமி போட நான் என்ன சத்தியராஜ் வார்த்தையா?!” - இது நான்..
அவரு சொன்னாரு.. ”கருத்து உனக்கு இருக்கலாம்டா... நாங்க மனசுல இருக்கற இருக்கத்தை எல்லாம் தளர்த்திட்டு தண்ணில பேசறோம்.. நீ சைட்டிஷ்சை மட்டும் ஆட்டைய போட்டுக்கிட்டு இன்னும் உன்னோட மனசுக்குண்டாட எச்சரிக்கைகளை இறுக்கிக்கிட்டு வாதம் செய்யற... இங்க முக்கியம் நான் மனசு விட்டு பேசறதைக் கேக்கறதுக்கு ஒருத்தண்டா.. அவ்வளவுதான்... எங்களுக்கு இப்போதைக்கு தேவை ஒரு காது... வாய் இல்லை! உன்னோடா எழவெடுத்த மசுரு வாதமெல்லாம் யாருக்கு வேணும்?!”
ஒரு செகண்டுக்கு அப்பறம் ”ம்”ன்னு தலைய அசைச்சேன்.
*****
சமீபத்தில்.. (பார்றா.. மறுபடியும்!! ) காலேஜு பழய கூட்டாளி ஒருத்தனோட சேர்ந்துக்கிட்டு அந்தக்காலத்து ஆட்டம் பாட்டங்களை எல்லாம் சிலாகிச்சு நாஸ்டால்ஜியாங்கற பதமே நாறிப்போகற அளவுக்கு பொங்கல்! கீறல் விழுந்த ரெக்கார்டு கணக்கா இதுக்கு முன்னாடியும் 1000 தடவை பேசித்தீர்த்த அதே கதைகளை பொங்கலாக பொங்கிக்கொண்டு கெக்கேபிக்கேவென சபையறியாது (அ) சபையின் பயமறியாது பெனாத்திக்கொண்டு இருந்தபோது இப்பத்திக்கு காலேஜ் படிக்கற அவனோட சித்திப்பையன் வந்துசேர்ந்தான். ஒடம்பெல்லாம் கல்லூரிக்கால முறுக்கும் மொகமெல்லாம் பாடித்திரிந்த பறவைகளின் பரவசமும் கலந்து இருந்த நான் ஒரு தெனாசவெட்டாய் அவங்கிட்ட “காலேஜ் படிக்கறயா? எப்படி போகுது?”ன்னு தெரியாத்தனமா கேட்டுவைச்சேன். அந்தப்படுபாவி என் ஈகோவுக்கே வைச்சாம்பாருங்க ஒரு வேட்டு!!! இதைத்தான் நம் முன்னோர்கள் அந்தக்காலத்துலயே “வாயைக்குடுத்து எதையோ புண்ணாக்கிக்கறது”ன்னும் தற்கால வரவணையார் சொசெசூ ன்னும் சொல்லியிருக்காக! “நல்லாப் போகுது அங்க்கிள்!................................................................” இப்படித்தான் ஆரம்பிச்சான்! ஆனா அந்த மூனாவது வார்த்தை கொடுத்த அதிர்ச்சில அவன் அதுக்கப்பறம் அஞ்சுநிமிசமா சொன்னது எதுவும் காதுல விழவேல்ல! ம்ம்ம்.. யோசிச்சா நான் கடைசிவருசம் படிச்சப்ப இந்தப்பய மூனாங்கிளாசு படிச்சுக்கிட்டு இருந்திருக்கறான். ஆனா இப்போ பனைமரத்துக்கு அரையடி இருந்துக்கிட்டு என்னப்பார்த்து அந்த வார்த்தை.. ம்ம்ம்.. தாங்கவே முடியலை! அதுக்கப்பறமும் அங்க ஒக்கார்ந்து பழங்கதைய தொடர்ந்திருந்தா எங்களுக்கு இன்னைவரைக்குமே இன்னும் சூடுசொரணை வரலைன்னு கண்டறிய வாய்பிருந்ததால் அப்படியே ஜாகையை தெருமுக்கு டீக்கடைக்கு மாத்திக்கினோம்!
*****
நயன் தாராவை எப்படி கண்டுபுடிக்கனும்னா... இப்படி.. இந்த.. மூக்குக்கும் வாய்க்கும் இடையில் சரியா நடுசெண்டர்ல இருக்கற அந்த ச்ச்ச்சின்ன மச்சத்தை வைச்சுத்தான்!
*****
என்னன்னே தெரியலங்க... என் பிளாகரு ஃப்ரொபைல்ல இப்பவெல்லாம் என் வயசு 35ன்னு காட்டுது!
பி.கு: என்னத்த எழுதின்னு மொடைபுடிச்சி இருக்க என்னை மாதிரி சோம்பேறி ஆளுக்கெல்லாம் உதவற மாதிரி “விடுபட்டவை”ன்னு பிட்டு பிட்டா எழுதற ஒரு நல்ல கொசுவத்தி பார்மேட்டு புடிச்சுக் குடுத்த பாலாபாய்க்கு நன்றி! :)
ஆகக்கூடி மேட்டரு எல்லாமே ஜூப்பரூ :)))
பதிலளிநீக்குவருட விடுமுறையில், இடையறாத கடும்பணிகளுக்கிடையே நான் சமீபத்தில் 2008 பிப்ரவரியில் பார்த்த இந்த மஹா டான்ஸ் புரோகிராம்களெல்லாம் எனக்கு தெரிஞ்சு திறமைக்கு முக்கியத்துவம் தர்ற மாதிரியே இல்ல :(
பதிலளிநீக்கு//எப்பவும் பாஸ்வேர்டு மாத்தினதுக்கு அப்பறம் அதை ஒரு டெக்ஸ்ட் பைல்ல தொடர்ச்சியா போட்டு வைப்பேன். முந்தாநேத்து மாத்திட்டு பைலைத்திறந்தா நான் மாத்தின பாஸ்வேர்ட்டு முன்னாடியே அதுல இருக்கு!//
பதிலளிநீக்குஒரு வேளை உங்களோட தொடர்ச்சி தொல்லையால தானவே அப்டேட் ஆகுதான்னு கூட நீங்க செக் பண்ணிக்கோங்க :))))))
//ம்ம்ம்.. தாங்கவே முடியலை! அதுக்கப்பறமும் அங்க ஒக்கார்ந்து பழங்கதைய தொடர்ந்திருந்தா எங்களுக்கு இன்னைவரைக்குமே இன்னும் சூடுசொரணை வரலைன்னு கண்டறிய வாய்பிருந்ததால் அப்படியே ஜாகையை தெருமுக்கு டீக்கடைக்கு மாத்திக்கினோம்!//
பதிலளிநீக்கு3வது வார்த்தையா அல்லது 3 வார்த்தையா?
இப்படியா சஸ்பென்ஸ் வைக்கிறது சொல்லுங்க அண்ணே சொல்லுங்க! :))
//நயன் தாராவை எப்படி கண்டுபுடிக்கனும்னா... இப்படி.. இந்த.. மூக்குக்கும் வாய்க்கும் இடையில் சரியா நடுசெண்டர்ல இருக்கற அந்த ச்ச்ச்சின்ன மச்சத்தை வைச்சுத்தான்!//
பதிலளிநீக்குகொஞ்சம் கூட எதிர்பார்க்கல ! :))))))))))))))))
//என்னன்னே தெரியலங்க... என் பிளாகரு ஃப்ரொபைல்ல இப்பவெல்லாம் என் வயசு 35ன்னு காட்டுது!
பதிலளிநீக்கு///
அச்சச்சோ பாவம் பிளாக்கருக்கு வயசாகிடுச்சு போல எல்லாம் தப்பு தப்பா காட்டுதுன்னு நினைக்கிறேன் :))))
வரலாறு முக்கியம் அமைச்சரே!
பதிலளிநீக்கு//எங்களுக்கு இப்போதைக்கு தேவை ஒரு காது... வாய் இல்லை! உன்னோடா எழவெடுத்த மசுரு வாதமெல்லாம் யாருக்கு வேணும்?!”//
பதிலளிநீக்குதிருவாசகம்.. :)
எனக்கு ஒன்னு போயிருச்சுன்னு கவலை உங்களுக்கு வந்திருச்சுன்னு கவலை. எனக்கு கண்ணு, உங்களுக்கு மசுரு.
பதிலளிநீக்குநல்லவேளையாக யூத்தாகவே இருப்பதால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் :-)
பதிலளிநீக்குஅப்புறம் நயன்தாராவை கண்டுபிடிக்க க்ளூ கொடுத்ததற்கு நன்றி. முன்பு சிம்ரன் சிடி என்று வந்தது நினைவிருக்கிறதா? அது ஒரிஜினலா டூப்பா என்று இன்றுவரை குழப்பமாகவே இருக்கிறது. சிடியில் இருந்த சிம்ரனுக்கும்(?) மூக்குக்கு கீழே மச்சம் இருந்தது :-(
//கொங்கு ராசா / Raasa said...
பதிலளிநீக்கு//எங்களுக்கு இப்போதைக்கு தேவை ஒரு காது... வாய் இல்லை! உன்னோடா எழவெடுத்த மசுரு வாதமெல்லாம் யாருக்கு வேணும்?!”//
திருவாசகம்.. :)//
Repeattaiiii..
வாரும் ஆயில்யரே,
பதிலளிநீக்கு// இடையறாத கடும்பணிகளுக்கிடையே // யோவ் நீருமா?! நடத்தும்!!
// 3வது வார்த்தையா அல்லது 3 வார்த்தையா? //
மறுபடியும் அந்த 3 வது வார்த்தைய இன்னும் 10 வருசத்துக்காவது நான் கேக்கவோ சொல்லவோ விரும்பலைங்கறதை நான் எப்படியய்யா உமக்கு சொல்லுவேன்?! :(
தாஸு,
// வரலாறு முக்கியம் அமைச்சரே! //
முக்கியம்தான் ஸ்வாமி! அதுக்காக என்னதுமா?! எங்கய்யா குத்தறீர்?!
ராசா,
வாங்கப்பு! நாம ஒருநா இப்படி பேசிக்கிடனும்னு ஒரு அல்ப ஆசை! :)
இளா,
// எனக்கு கண்ணு, உங்களுக்கு மசுரு.//
என்னய்யா உம்ம கண்ணுக்கு?! கண்ணாடிகூட போடறதில்லையே நீர்?!
நாங்கெய்ல்லாம் வீரங்கப்பு! எது போனாலும் சமாளிச்சுக்கிடுவம்... என்ன பொலம்பலை நீங்க பொறுத்துக்கிடனும்! :)
லக்கியாரே,
//நல்லவேளையாக யூத்தாகவே இருப்பதால் //
கேக்க சந்தோசமாத்தான் இருக்கு! ஆனா இந்த மேட்டரு உம்ம வீட்டம்மாவுக்கும் தெரியுமா?! (ஸ்ஸப்பா... ஒரு மேட்டரு பத்தவைக்கறதுக்குள்ள எம்புட்டு கஷ்டம்... :))) )
// அப்புறம் நயன்தாராவை கண்டுபிடிக்க க்ளூ கொடுத்ததற்கு நன்றி //
அய்யன்மீர், நான் க்ளு கொடுக்கலையய்யா... அப்படியாப்பட்ட ஞானநிலைக்கு போயிட்டேன்னு லைட்டா பொலம்புனா நீர் சீடி, டிவிடின்ன்னு மேலும் வயித்தெரிச்சலை கெளப்பாதீரும்!!!
//பிட்டு பிட்டா எழுதற ஒரு நல்ல கொசுவத்தி பார்மேட்டு புடிச்சுக் குடுத்த பாலாபாய்க்கு நன்றி! :)//
பதிலளிநீக்குஇதுக்கு பேரு படிக்கட்டு பதிவு'ன்னு முன்னாடி சொன்னாங்களே..... :))
இப்போதைக்கு நயன் மேட்டர் மட்டும் படிச்சிட்டு எஸ்கேப்...மத்தது எல்லாம் டுமாறோ... :-)
பதிலளிநீக்குஆசானே..
பதிலளிநீக்குபதிவின் தலைப்பை இப்படி வச்சிருக்கலாம்...
"ஆப்பு மேட்டரு என்னன்னா"
\\”கருத்து உனக்கு இருக்கலாம்டா... நாங்க மனசுல இருக்கற இருக்கத்தை எல்லாம் தளர்த்திட்டு தண்ணில பேசறோம்.. நீ சைட்டிஷ்சை மட்டும் ஆட்டைய போட்டுக்கிட்டு இன்னும் உன்னோட மனசுக்குண்டாட எச்சரிக்கைகளை இறுக்கிக்கிட்டு வாதம் செய்யற... இங்க முக்கியம் நான் மனசு விட்டு பேசறதைக் கேக்கறதுக்கு ஒருத்தண்டா.. அவ்வளவுதான்... எங்களுக்கு இப்போதைக்கு தேவை ஒரு காது... வாய் இல்லை! உன்னோடா எழவெடுத்த மசுரு வாதமெல்லாம் யாருக்கு வேணும்?!”\\
ஆப்புகளில் சிறந்த ஆப்பு இது தான்....சூப்பரு ;))
//ஜிகினா ட்ரெஸ்ஸு, மாறுவேசம், அன்ராயர் லுங்கி, இலைதலைன்னு ஒன்னுவிடாம ஆடையலங்கோலம் செஞ்சுக்கிட்டு வராத ஆட்டத்தை ஆடியே காட்டுவேன்னு கெட்ட அலப்பரை
பதிலளிநீக்குகரெக்டா சொன்னீங்க. தமிழ் சேனல் பக்கமே போறதில்லைனு இருக்கேன்.
நன்றி!
பதிலளிநீக்குநம்ம ஆளு படத்தைப் போட்டதுக்கு!
அங்கிளுக்கே இப்படி அலர்னா எப்படி. சிலதுங்க தாத்தாவுக்கே அசர்ரது இல்லை ...
பதிலளிநீக்குநானும் உங்களை என்னமோ பெருசா நினச்சிருந்தேன். ப்பூ .. இம்புட்டுதானா
//நீ சைட்டிஷ்சை மட்டும் ஆட்டைய போட்டுக்கிட்டு...//
- இந்த மாதிரி கேசுதானா நீங்க?
:))))
பதிலளிநீக்குநல்ல பதிவு. நன்றி!
:))
பதிலளிநீக்கு//நயன் தாராவை எப்படி கண்டுபுடிக்கனும்னா... இப்படி.. இந்த.. மூக்குக்கும் வாய்க்கும் இடையில் சரியா நடுசெண்டர்ல இருக்கற அந்த ச்ச்ச்சின்ன மச்சத்தை வைச்சுத்தான்!
//
நொம்ப முக்கியம் :))
\\
பதிலளிநீக்குநல்லாப் போகுது அங்க்கிள்!................................................................” இப்படித்தான் ஆரம்பிச்சான்!
\\
அப்படியா அங்கிள் ;)
//“நல்லாப் போகுது அங்க்கிள்!................................................................” ///
பதிலளிநீக்குஅட!!
உங்களை விடுங்க அண்ணாச்சி!! உங்களை சொனாலாவது கொஞ்சமாவது நியாயம் இருக்குன்னு சொல்லலாம்!! :P
சமீபத்துல(?!) ஒரு பள்ளிக்கூட சிறுவனுக்கு லிப்ட்டு குடுத்தேன்!! அவன் கீழே எறங்கிட்டு என்னைய பாத்தே டாங்க்ஸு அங்கிள்னு சொல்லிட்டு போறான்....
இந்தக்கொடுமையை எங்கிட்டு போய் சொல்ல???
Sen22, ஷ்யாம், கார்த்திக், தங்கமணி, கோபிநாத், சென்ஷி, ராயல்,
பதிலளிநீக்குநன்றி! :)
சிபியாரே,
// நம்ம ஆளு படத்தைப் போட்டதுக்கு! //
நம்ம ஆளா?! எத்தனை பேருய்யா கெளம்பியிருக்கீங்க?!
தருமிசார்,
எப்படி இருக்கீங்க? Long time no See! :)
// அங்கிளுக்கே இப்படி அலர்னா எப்படி. சிலதுங்க தாத்தாவுக்கே அசர்ரது இல்லை ... //
விடுங்க.. அதுக்கான மனவுருதிய சீக்கிரம் எனக்கும் மக்களே ஏத்திவிட்டுருவாய்ங்க போல! :)))
// இந்த மாதிரி கேசுதானா நீங்க? //
ஹிஹி.. வந்து.. அதாவது... நான் கல்யாணத்துக்கு பிறகுதான் ஊட்டம்மாவோட அடிதாளாம தண்ணிய நிறுத்துனதா நாலுபேரு பொரளியா பேசிக்கறதை உங்களுக்கு சொல்லவேணாம்னு பாக்கறேன்! :)
ரம்யா, சீவிஆர்,
// அப்படியா அங்கிள் ;) // // உங்களை சொனாலாவது //
இதுதான் அல்சர் வயத்துக்கு சில்லிசாஸ் ஊத்தறவேலையா?! செய்ங்கப்பு!! :)
//நம்ம ஆளா?! எத்தனை பேருய்யா கெளம்பியிருக்கீங்க?!//
பதிலளிநீக்குநான் ஒருத்தன்தான்! (இப்போதைக்கு)
உங்களுக்கு ஏதும் ஆட்சேபணையா?
அண்ணே அந்த வித்தியாசம் கண்டுபிடிக்குற மேட்டரு?
பதிலளிநீக்குபெசண்ட் நகர் பீச்சில இப்படியெல்லாம் என் கண்ணில படலியே. ரொம்பவே வருத்தமா இருக்கு.
பதிலளிநீக்குஎன்னது அல்சர் வயத்துக்குச் சில்லி சாஸா!!!
ஹைய்யோ ஹைய்யோ:))))
சிபியாரே,
பதிலளிநீக்கு// உங்களுக்கு ஏதும் ஆட்சேபணையா? // என்னை ஏனைய்யா கேட்கறீர்? சிம்புவை கேளுங்க... இப்பத்திக்கு அதான் ட்ரெண்டாம்! :)
அனானி,
// அண்ணே அந்த வித்தியாசம் கண்டுபிடிக்குற மேட்டரு? // அதான் ஜொல்லிட்டேனே!
வல்லியம்மா,
// பெசண்ட் நகர் பீச்சில இப்படியெல்லாம் என் கண்ணில படலியே. //
ஹிஹி...
ஒருவேளை இதெல்லாம் Boys2Men தாண்டி Men2Gentlemen phase ல இருக்கறவுக கண்ணுலதான் படுமோ என்னவோ?! :)
அங்கிள்.......... :-)
பதிலளிநீக்குஇளவஞ்சி
பதிலளிநீக்கு//அவரு சொன்னாரு.. ”நாங்க மனசுல இருக்கற இருக்கத்தை எல்லாம் தளர்த்திட்டு தண்ணில பேசறோம்.. நீ சைட்டிஷ்சை மட்டும் ஆட்டைய போட்டுக்கிட்டு இன்னும் உன்னோட மனசுக்குண்டாட எச்சரிக்கைகளை இறுக்கிக்கிட்டு வாதம் செய்யற... இங்க முக்கியம் நான் மனசு விட்டு பேசறதைக் கேக்கறதுக்கு ஒருத்தண்டா.. அவ்வளவுதான்... எங்களுக்கு இப்போதைக்கு தேவை ஒரு காது... வாய் இல்லை! உன்னோடா எழவெடுத்த ***மசுரு*** வாதமெல்லாம் யாருக்கு வேணும்?!”//
இது சமீபமா (சரி! சரி!) ஒரு வாரமா அப்பப்ப நினைவுக்கு வந்திடுது! எப்படா அவுட்புட் வரும்னு திரையைப் பார்த்திட்டிருக்கும்போது, நெனப்புக்கு வந்து சிரிச்சா சுத்தி இருக்கறவங்கல்லாம் பேஜாராயிடுவாங்களேன்னு கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கி வெச்சேன்!
ஆங். அதுக்கப்புறம் என்ன //ஒரு செகண்டுக்கு அப்பறம் ”ம்”ன்னு தலைய அசைச்சேன்.// அந்த ஒரு நொடியில் உங்க 'ஙே' முழியை நினைச்சுப் பார்த்தேன். :-) :-) :-) :-)
அன்புடன்
வெங்கட்ரமணன்
WOW... its really different and creative writting style. keep going... young man? (HAPPY?)
பதிலளிநீக்குhai nice
பதிலளிநீக்குyour blog is super. I am in the search of good blogs.
பதிலளிநீக்கு