போனவாரம் நீலாங்கரை குப்பத்தைச் சேர்ந்த மீனவ நண்பர் “சும்மா இருந்தா வாங்க பிரதர்... போட்ல போலாம்!”னு வெத்தலப்பாக்கு வைச்சாப்புல. நானும் வார இறுதியில் சிவியரா ரெஸ்ட் எடுத்தே டயர்ட் ஆனதாலும் இதுக்குமேலும் கையக்காலை அசைக்கலன்னா வீட்டுல கட்டைல ஏத்திருவாங்கன்னும் பயந்து என் புகைப்படப்பெட்டியை தூக்கிட்டு கெளம்பிட்டேன். ச்சும்மா சொல்லப்படாது! ட்ரிப்பு செம ட்ரில்லு :) நண்பரும் அவரு சோட்டாளிகளுமாக 12 பேரு. போட்டுல ரெண்டாளு இஞ்சினை மாட்டறதுக்குள்ள பயணத்துக்குண்டான பொருட்களை கவருமெண்டின் பட்டதாரிக்கடையில் வாங்கிக்கொண்டோம். அதாங்க... 4 மிராண்டா, 10 ப்ளாஸ்டிக் க்ளாசு, ஒரு ஹான்ஸ், ரெண்டு பாக்கெட்டு சிசர்ஸ் அப்பறம் த்ரி க்ரொன்ஸ் க்வாட்டர் நாலு. ஒரு க்வாட்டரு 70 ரூவாயாம்! நான் கடைசியா வாங்குனப்ப 32.50. வெலைவாசி இப்படி தாறுமாறா எகிறினா அப்பறம் “ஏழை எளிய மக்கள்” எப்படி பொழைக்கறது?! :( சரி விடுங்க... எஞ்சாய்மெண்ட்டு ஓவரா போனதால போட்டா புடிக்கறதுல கவனம் போகல..(இல்லைன்னா மட்டும்..? ) இருந்தாலும் எடுத்தவரைக்கும் இங்க வழக்கம்போல கடைவிரிக்கறேன் :) படை கெளப்பிடிச்சு.... நல்லா சேர்றாங்கைய்யா செட்டு! நகரமும் ( ம...
www.ilavanji.com