அண்ணன் காசியின் ஐடியா படி இந்த உருப்படி இங்கே... பெரியவங்க பலபேரு டீடெயில்லா ஆராய்ஞ்ச உணர்ந்த தெளிந்த தகவல்களை போட்டிருக்காங்க. இராம. கி அய்யா எல்லாம் படிச்சா மலைப்பா இருக்கு! நான் என் வழக்கப்படி (அதாங்க... தான்தோன்றித்தனமா... )அடிச்சு விட்டிருக்கறேன். காசியண்ணன் கும்பலோடு கும்பலா என்னுதையும் போட்டிருந்தா எம்மானம் நின்னிருக்கும். இப்ப தனியாப்போட்டு என் அறிவையெண்ணி மக்கா நீங்க தலைதலையா அடிச்சுக்கப் போறீங்க! தெரியுதில்ல அப்பறம் என்னத்துக்குலே எழுதனன்னு ஆசிப்பு அண்ணாச்சி மாதிரி ஆளுங்க வருவாய்ங்க! அதுக்கெல்லாம் வெட்கம் மானம் ரோசம் பார்த்தா அப்பறம் நான் எப்பத்தான் புதுப்பதிவு போடறது?! எனவே, படிச்சு களிங்க :) 1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம் செய்யவேண்டும்? இல்லை என்றே நினைக்கிறேன். சங்கத்தமிழில் இருந்து நவீன இலக்கியம் வரைக்கும் இவ்வளவு இருக்கு இல்லை என்பதான தரவுகளை விடுங்கள்! பழந்தமிழ் வார்த்தைகளை தேடித்தெரிந்துகொள்...
www.ilavanji.com