மீண்டும் ஒரு காதல் கதை...
அடையார் பஸ் டிப்போவின் எதிரில் இருக்கும் பஸ்ஸ்டேண்டை கடக்கும்போது ஒரு ஆட்டோவினைச் சுற்றி கொஞ்சம் மக்கள்ஸ். அருகில் போய் எட்டிப்பார்த்தால் ஓங்குதாங்கான ஆறடியில் இருந்த ஒரு விரைத்தவனைப் பிடித்து ஐந்தடியில் பூஞ்சையான ஒரு மனுசர் தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பலமாக அடித்துக் கொண்டிருத்தார். உடம்பெல்லாம் வெறுப்பாக ஒரு அம்மாள் அழுதுகொண்டும் திட்டிக்கொண்டும் பக்கத்தில்! ஆட்டோவினுல் ஒரு பெண் சிறுவயசு குழந்தையோடு! அந்த அம்மாள் ”உனக்கெல்லாம் சூடுசொரனையே கிடையாதா? இந்த அநியாயமெல்லாம் அடுக்குமா? உங்குடும்பம் வெளங்குமா? நீயெல்லாம் புழுத்துப்போய்தான் சாவப்போற...”ன்னு சரமாரியாக காறித் துப்பிகொண்டிருதார். ஆறடி மனுசன் அடிகளையும் மகாகேவலமான வசவுகளையும் எந்தவித எதிர்ப்புமின்றி வாங்கிக்கொண்டு ஆட்டோவினுள் இருந்த பெண்ணையே விட்டேத்தியாக பார்த்துக்கொண்டிருந்தான். அப்பெண்ணோ எந்தவித படபடப்புமின்றி “அப்படித்தான்னு சொல்லுங்க! இவங்க என்னத்த செஞ்சுருவாங்கனு பாக்கலாம்”னு ஒருகையில் குழந்தையையும் மறுகையில் ஆறடியின் கையையும் பிடித்துகொண்டு முகம் நிறைய வீம்புடன் சொல்லிக்கொண்டிருந்தாள். நேரமாக ஆக அந்த வயதான அம்மாள் சப்போர்ட்டுக்கு ஆள் கிடக்காதாவென சுற்றியிருந்த எங்களைப்பார்த்து “என்ன அநியாயம் பாருங்க! கண்ணாலம் ஆகி பெத்தவளைபோய் இப்படி இழுத்துக்கிட்டு திரியறான். இதெல்லாம் அடுக்குமா?”ன்னு கண்ணீரோடு பொலம்பல்ஸ்...
இத்தனை பலமான இந்த ஆளு எதுக்கு இம்புட்டு அடிவாங்கிக்கிட்டு தேமேன்னு நிக்கறான்?
குழந்தையோடு இருக்கும் அப்பெண்ணின் வூட்டுகாரரு எங்கே?
என்னதான் இருந்தாலும் இப்படி நடுரோட்டுல குடும்ப சண்டைய போடலாமா?
இதுக்குப் பேருதான் பொருந்தாக் காதால்னா அந்தப்பெண் எப்படி அப்படி உறுதியோடு சலமற்று இதை எதிர்கொண்டு உட்கார்ந்திருக்கிறாள்?
தேமேன்னு வெறித்தபடியிருக்கும் அந்தக்குழந்தைக்கு இதெல்லாம் எந்த அளவுக்கு புரியும்?
இப்படி அலையலையாக கேள்விகள் மனதினுள் புரண்டாலும் எதனையுமே கேட்காமல் பின்புறமாய் கையைக்கட்டிக்கொண்டு பத்தோடு பதினொன்றாய் வேடிக்கை பார்த்தபடி இருப்பதில் ஒரு குறுகுறுப்பும் சுகமும் இருக்கத்தான் செய்கிறது!
*****
ஆங்காங்கே அவசரத்துக்கு உச்சா போவதில் இருக்கும் என் திறமையை முன்னமே பறைசாற்றியிருக்கிறேன். இருந்தாலும் போனமுறை பர்மா பஜாருக்கு ஒலகப்பட திருட்டுவட்டுகள் வாங்கப்போகையில் நெம்ப சிரமமாயிடுச்சு. இந்தியன் வங்கியை ஒட்டியிருக்கற சந்துலதான் வழக்கமா ஊரிண்டாங்கை ஓப்பன் செய்வேன். இந்தமுறை செவுத்துல ”இங்கு சிறுநீர் கழிப்பவன் மிருகம்! நீ மிருகமா?”ங்கற கேள்வி இருந்தது என் ஈகோவை ரொம்பப்பாதிச்சதில் அதென்ன கண்டவன் கேள்விக்கெல்லாம் நாம பதில் சொல்லறதுன்னு கடுப்புல அப்படியே நடந்து துறைமுகம் ரயில்வே ஸ்டேசனுக்குள்ளாற இருக்கற ஒத்த ரூபா கட்டண கழிப்பிடத்தை கண்டுபிடிச்சு போனேன். உள்ள போகையிலயே அங்க வேலை பார்த்தவரு ”ரெண்டு ரூவா குடு சார்”ன்னாப்புல. அவசரத்துக்கு நானும் கொடுத்துட்டு உச்சா போய்க்கிட்டிருக்கயிலயே அவருகிட்ட வாயக்கொடுத்து வம்பை ஆரம்பிச்சேன்!
”ஏங்க வெளில ஒர்ரூவா போட்டிருக்கு. நீங்க ரெண்டு ரூவா வாங்கறீங்க?”
”ஆங்! அதெல்லாம் க்ளீனா கழுவி வைச்சுக்கறமல்ல சார்? அதுக்குத்தான்.”
”அப்பன்னா ரெண்டு ரூவான்னே எழுதலாமே? என்னத்துக்கு ஒர்ரூவான்னு போட்டு ஒர்ரூவாய ஏமாத்தறீங்க?”
”ஆமா சார்! உன்னோட ஒத்தைரூவாலதான் நான் கோட்டை கட்டப்போறேன். இதெல்லாம் மெயிண்டேன் பண்ண ரெண்டுரூவா ஆவாதா? இதுக்கு என்னமோ ரொம்பத்தான் பேசுற?”
”என்னத்த பேசுறாங்க? அநியாயமா இப்படி ஆளுக்கு ஒருரூவா ஏமாத்தறயே? இதைக்கேட்டா பேசுறமா? நீ அவ்வளவு ஒழுக்கம்னா வெளிலயே ரெண்டு ரூவான்னு எழுதறது தானே?!”
”இப்ப என்னான்ற சார்? இந்தக்காலத்துல பிச்சைக்காரனே ஒர்ருவா வாங்கறதில்லை. நீ என்னாமோ உஞ்சொத்தப்புடுங்கனாப்புல கூவற?”
”பிச்சைக்காரன் என்ன உன்னமாதிரி ஏமாத்தியா வாங்கறான்? தேவைன்னா போடறோம். இல்லைன்னா இல்லை.. சரி போ! அந்த ஒர்ருவாய நான் ஒனக்கு பிச்சைபோட்டதா வைச்சுக்க...”
சொல்லிவிட்டு நான் எம்பாட்டுக்கு நடக்க பின்னால இருந்து குரல் கேட்டது...
”த்த... வாயாங்க.. இந்தா உன் ரெண்டுரூவா.. ஓசில ஒன்னுக்கடிச்சதா வைச்சுக்க... உம் மூஞ்சிகிட்டயெல்லாம் பிச்ச வாங்கற அளவுக்கு எம்பொழப்பு போகலை.. வைச்சுத் துன்னு!”
நான்.... “அது! ரொம்ப டாங்க்ஸ்!”
வெற்றி யாருக்கு? ( அ ) கெலிச்சது எது?
*****
சமீபத்தில் ( ங்கொய்யால! ) அண்ணா யுனிவர்சிட்டிக்கு எம்மாமன் பையன் பொறியியல் படிப்பு கவுன்சிலிங்காக போக நேர்ந்தது. பலகாலம் கழிச்சு ஒரு காலேஜிக்குள்ள போறதுனால என் ஒடம்வெல்லாம் புல்லரிப்பாக கேம்பஸ்க்குள்ள சுத்திக்கிட்டிருந்தேன். கையில் பச்சை கலர் செவுப்புக்கலர் பைல்களோடு கண்களில் மிரட்சியும், கல்லூரி பற்றிய கனவுகளும், எந்தக்காலேஜில சீட்டுக்கெடைக்குமோங்கற கவலைகளுமாய் வலம் வந்துகொண்டிருந்த 17 வயது சிட்டுக்களின் ( பசங்களை எவங்கண்டான்? ) நடவடிக்கைகளை அவதானித்தபடியே சுற்றிக்கொண்டிருந்த வேளையில் அந்த உண்மை பளீரென மண்டையில் உறைத்தது!
கூட வந்திருக்கும் இந்த மடந்தைகளின் அம்மாக்களான பேரிளம் பெண்களெல்லாம் சற்றேறக் குறைய என் வயது என்பது தான் அது. ஆகவே நானும் பேரிளங்காளையாக என் மனதை அப்பனுங்க ஸ்தானத்துக்கு மாற்றிக்கொண்டு கவுன்சிலிங்குக்கு மாமனையும் அவரு மவனையும் அனுப்பிவிட்டு கவுன்சிலிங் பில்டிங் வாசலில் நின்றிருந்தேன்.
மாணவன் கூடவே கட்டாயம் ஒருத்தர் செல்ல வேணுங்கறது விதிபோல! தன் தம்பிக்காக கைக்குழந்தையோடு வந்திருந்த ஒரு பெண்ணை உள்ளே விட மறுத்து விதிமுறைகளை சொல்லிக்கிட்டிருந்தாரு ஒரு அலுவலர். “வூட்டுக்காரரு வெளியூரு சார்! கொழந்தைய பாத்துக்கறதுக்கும் வேற யாரும் இல்லை. அதான் நானே வந்துட்டேன். தயவு செஞ்சு விடுங்க சார். தம்பி படிப்பு மேட்டரு!”ன்னு அந்தப்பெண் ரொம்பவே படபடப்பில் கெஞ்சிக்கொண்டிருந்தாலும் அந்த அலுவலர் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. அப்படி ஓரமா நில்லுங்க. ஏதாச்சும் செய்யறேன்னு சொல்லிட்டு போக அந்தப்பெண் என்ன செய்வதெனெ தெரியாமல் தம்பி படிப்பு என்னாகுமோங்கற பயத்தில் மலங்க மலங்க விழித்தபடி நின்றது.
சடார்னு எனக்குப் பின்னாடி இருந்த ஒரு இருவது வயசு விடலைப்பையன் ஒருந்தன் “அக்கா! கொழந்தைய எங்கிட்ட கொடுத்துட்டு போங்க... ஒன்னவரு தானே.. நாம்பாத்துக்கறேன்”னான். சுத்தி நின்ன ஆம்பளையாளுங்க எங்க நாலுபேருக்கு அதிர்ச்சி கலந்த சிரிப்பு. “அதெப்படிப்பா கைக்கொழந்தைய யாருன்னே தெரியாத ஒங்கிட்ட கொடுப்பாங்க? கைக்கொழந்தைய நீ என்னான்னு பார்த்துப்ப? இப்படியெல்லாம் ஒரு பொண்ணுகிட்ட கேக்கலாமா? அப்படியே நீ வைச்சிருந்து கொழந்தைக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா யாரு பதில்சொல்லறது?”ன்னு லாஜிக்கான கேள்விகளையெல்லாம் அவனை மாறிமாறிக் கேட்டு இச்சமூகத்தில் ஆம்பளைத்தனம் என்பது என்னவென்பதென்று அவங்காதுல கரைச்சு ஊத்தி அவங்கேட்டதன் பின்னான அசட்டு அறியாமையினை வெளக்கு வெளக்குன்னு வெளைக்கி அவனை கூச்சத்தில் சுருட்டிக்கொண்டிருந்த பொழுது...
அப்பெண் அருகில் வந்து கண்களில் நீர் மல்க “கேட்டதுக்கு ரொம்ப தாங்க்ஸ் தம்பி”ன்னு சொல்லிவிட்டு மீண்டும் சென்று காத்திருக்க ஆரம்பித்தாள்.
*****
ஒரு படம்!

*****
”ஓத்தா! கையக் காட்ட காட்ட போறாம்பாரு!”
பெருங்குடி டோல்கேட்டில் ஒரு காலை நெரிசலில் லேட்டாகும் எரிச்சலில் சிக்கியிருந்த வேளையில் கூட்டத்தை கட்டுப்படுத்த லேன் மாற்றுவதற்காக கைகாட்டிய கேட்கீப்பரின் சிக்னலையும் மீறி வண்டியை ஓட்டிச்சென்றதில் அவரு கடுப்பாகி சென்னதுதான் மேலே இருக்கற வசவு. எனக்கு வந்துச்சே ஒரு கோவம்! காரை அப்படியே நிறுத்திவிட்டு எறங்கிச்சென்று ஆரம்பித்தேன்.
”என்னய்யா சொன்ன? நீ சொன்ன வார்த்தையோட அர்த்தம் தெரியுமா?”
”பின்ன என்ன சார்? கை காட்டகாட்டநீங்க பாட்டுக்கு போறீங்க? நாங்காட்டுனதுக்கு என்ன அர்த்தம்?”
”அதுக்காக? நீ என்ன வேனா சொல்லுவயா? உனக்கு என்ன ரைட்ஸ் இருக்கு என்னைப்பார்த்து கெட்டவார்த்தை பேசறதுக்கு? இதுக்குத்தான் ஒனக்கு சம்பளம் கொடுக்கறாங்களா?”
”சொல்லச்சொல்ல போனீங்க சார். அதான் கடுப்புல...”
”என்ன கடுப்பு? நீ சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா? உனக்கும் ஒரு அம்மா இருக்காங்க இல்லை? உன்னப் பார்த்து நாஞ்சொன்னா நீ சும்மா இருப்பயா?”
”சார் ஒரு கோவத்துல சொல்லிட்டேன் சார். இருந்தாலும் நீங்க செஞ்சது தப்புத்தான?”
”நாஞ்செஞ்சது தப்புன்னே இருக்கட்டும். அதுக்காக நீ என்ன வேணா பேசலாம? எங்க உன் சூப்பர்வைசர்? அவரு வராம வண்டி நகராது. பாத்துரலாம்”
அப்பறம் அவருவந்து இன்னோரு 5 நிமிசம் சொன்னதையே சொல்லிச்சொல்லி அவரு வார்த்தை பேசுனது தப்புத்தான்னு ஒத்துக்கவைச்சு மன்னிப்புக்கேட்டபறம் தான் வண்டிய எடுத்தேன்.
பாவம்! அன்றைய தினம் அவரு பாக்கறதுக்கு படிச்சவன் மாதிரியிருக்கற என்னய மாதிரி ஆளெல்லாம் நாளைக்கு 100முறை கலோக்கியலாக சொல்லும் ”ஓத்தா”ங்கற வார்த்தைக்கு அர்த்தம் தெரிஞ்சனாலதான் சொல்லாம இருக்கறோம்னு நம்பியிருக்கக்கூடும்!
*****
சமீபத்தில் நண்பரை சந்திப்பதற்க்காக அவரது அலுவலகம் சென்றிருந்தேன். அலுவலக வேலைகள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். நண்பர் அவரது வேலையில் சுறுசுறுப்பென்றாலும் அவரது மேனேஜர் மாகா முசுடாம். தினமும் நாலுமுறையாவது இவரை திட்டவில்லையென்றால் அவரக்கு தூக்கம் வராதாம்! இருந்தாலும் நண்பர் மகிழ்சியாகவே வேலை செய்வதாக கூறினார். டென்சன் ஆகாமல் இந்த ஃபிரசரை எப்படி சாமாளிக்கிறார் எனக் கேட்டதற்கு “அதற்குத்தான் இருக்கவே இருக்கிறது காளிங்ஸ் தத்துவம்!” என்றார். நான் புரியாமல் பார்க்க அவர் ”மேனேஜர் இப்ப திட்டிட்டு போனாரே. அது என்னையல்ல. இந்த சீட்டுல இருக்கற ஹெட்க்ளார்க்கை....” அப்படின்னு சொல்லிக்குவேன். அதனால திட்டெல்லாம் என்னை பர்சனல்லா பாதிக்கதில்லை என்றார். கேட்டபொழுது எனக்கு சரியெனவும் நானும் இதே காளிங்ஸ் தத்துவத்தை பயன்படுத்தி என் டென்சனையும் முற்றிலுமாக குறைக்கலாமென பட்டது. நீங்களும் இதை உபயோகப்படுத்தலாமே?
(பொ.ஆ: இதுபோல் இன்னொரு வாசகர் உறவுகளின் சச்சரவுகளை சமாளிக்க ஒத்தக்கை சித்தப்பா டெக்னிக்கை கையாள்வதாக எழுதியுள்ளார். அது அடுத்தவார வா.மலரில் )
*****
மேற்கண்ட படத்தில் பார்த்தவுடன் சரியாக எது ஆண் குறியீடு எது பெண் குறியீடென கண்டுபிடித்திருந்தால் எப்படி கண்டுகொண்டீர்கள்? உங்கள் நினைவில் எப்படி அடையாளப்படுத்தியுள்ளீர்கள்?
என்னது ஆபாசக்கேள்வியா? போயாங்...
*****
நன்றி: சென்ஷி & கோபிநாத் :)
நெம்ப நாளா ஆளக் காணோம்?
பதிலளிநீக்குஇடுகை சூப்பர்!
ஆசானே!!!!!!!!!!!!
பதிலளிநீக்குஅசத்தல் ரகம். இத்தனை நாள் ஏமாத்திப்புட்டு இந்தா போடுறேன் நாளைக்கு போடுறேன்னு இழுத்தடிச்சுப்புட்டு நான் ஒரு மாசம் லீவ்வுன்னதும் போட்டிருக்கீரே. உம்மயெல்லாம்.... ஒண்ணுஞ் சொல்லிக்க முடியாதுன்னு சொல்ல வந்தேன் சாமி :-))
ஒண்ணுக்கடிக்குற மேட்டர்ல உங்களை யாரும் ஜெயிக்க விடாமத்தான் தனிச்சு தனித்துவமா நிக்கறீங்க.
காளிங்க்ஸ் தத்துவம் எல்லோருக்கும் தேவையான முக்கியமானது. சூப்பர் ஆசானே.
இருக்கீங்களா :)
பதிலளிநீக்குஇன்னும் பதிவு படிக்கல.. :(
ஏன் தல.. இப்படி ஒரு படத்தை போட்டுட்டு அதுக்கு ஒரு கேள்விக்’குறியை வேற கொடுத்துப்புட்டு கீழ நன்றி கோபிநாத், சென்ஷின்னா படிக்குறவங்க எங்களைப்பத்தி என்ன நினைப்பாங்க :-))
பதிலளிநீக்கு//இங்கு சிறுநீர் கழிப்பவன் மிருகம்! நீ மிருகமா?”ங்கற கேள்வி இருந்தது என் ஈகோவை ரொம்பப்பாதிச்சதில் அதென்ன கண்டவன் கேள்விக்கெல்லாம் நாம பதில் சொல்லறதுன்னு//
பதிலளிநீக்கு:))
//நன்றி: சென்ஷி & கோபிநாத் :)//
பதிலளிநீக்கு??????????????????????????
//மாணவன் கூடவே கட்டாயம் ஒருத்தர் செல்ல வேணுங்கறது விதிபோல! தன் தம்பிக்காக கைக்குழந்தையோடு வந்திருந்த ஒரு பெண்ணை உள்ளே விட மறுத்து விதிமுறைகளை சொல்லிக்கிட்டிருந்தாரு ஒரு அலுவலர்.//
பதிலளிநீக்குநல்லாவே ஒர்க் பண்ணுறாங்க இந்த ஆபிசருங்க :))))
கலக்கலான இடுகைங்கோ!
பதிலளிநீக்குகாளிங்ஸ் தத்துவம் சூப்பரேய்ய்ய்ய்...!
பதிலளிநீக்குபோட்டோ - கை ராட்டினம் - செம கலர்ஃபுல் :)
பதிலளிநீக்கு//சென்ஷி said...
பதிலளிநீக்குஏன் தல.. இப்படி ஒரு படத்தை போட்டுட்டு அதுக்கு ஒரு கேள்விக்’குறியை வேற கொடுத்துப்புட்டு கீழ நன்றி கோபிநாத், சென்ஷின்னா படிக்குறவங்க எங்களைப்பத்தி என்ன நினைப்பாங்க :-))//
நிறைய நினைப்பாங்க :))))
ரொம்ப வருஷம் கழிச்சி உருப்படியா ஒரு பிளாக் படிச்ச நிறைவு :-)
பதிலளிநீக்குதொடர்ந்து எழுதுங்கள் (மொட்டை) பாஸ்!
welcome back!!
பதிலளிநீக்குவாங்க வாங்க.. We missed you!
பதிலளிநீக்குவாரமலரா? சூப்பர்!
// அன்றைய தினம் அவரு பாக்கறதுக்கு படிச்சவன் மாதிரியிருக்கற என்னய மாதிரி ஆளெல்லாம் நாளைக்கு 100முறை கலோக்கியலாக சொல்லும் ”ஓத்தா”ங்கற வார்த்தைக்கு அர்த்தம் தெரிஞ்சனாலதான் சொல்லாம இருக்கறோம்னு நம்பியிருக்கக்கூடும்!//
பதிலளிநீக்குகடசிவரைக்கும் அந்த வார்தைக்கு என்ன அர்த்தம்னு நீங்க சொல்லவே இல்லையே
மீள்வருகைக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குhttp://rajasabai.blogspot.com/2009/08/50.html
வணக்கம் வாத்தி...
பதிலளிநீக்குமூன்று வருடத்துக்குள் பேரிளம் ஆணாகிட்டீங்களா :-)
கவித்துவமான தலைப்பு வச்சு கவுத்திட்டீங்களே!
நல்லாயிருக்கு!
பதிலளிநீக்குசுகமா? அந்த பெண் கடைசியில் அனுமதிக்கப்பட்டாரா இல்லையா?
பதிலளிநீக்குஎழுதுங்கண்ணே...
பதிலளிநீக்குஎவ்வளவு பேர் காத்துக்கொண்டிருக்காங்க.
//பினாத்தல் சுரேஷ் said...
பதிலளிநீக்குவாங்க வாங்க.. We missed you!
//
Repeatei :)
மீள் இடுகைக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குO - > O + என்றும் நினைவில் வைத்துக்கொள்ளலாம்.
அடேங்கப்பா எவ்ளோ நாள் கழிச்சு ஒரு போஸ்ட் ? சிங்கம் களம் ஏறங்கிடுச்சு ... :) :) :)
பதிலளிநீக்குதிருவண்ணாமலை அன்பு தியேட்டர் சந்தில் இப்படி எழுதி இருப்பார்கள்
பதிலளிநீக்கு”ஒரு அப்பனுக்கு பிறந்தவன் இங்கு சிறுநீர் கழிக்க மாட்டான்”
என்னா ஒரு டெக்னிக்கு :)
வாய்யா வா!ஒரு வகையா திரும்ப வந்ததுல் ம்கிழ்ச்சி!! அப்பப்ப ஏதாவது எழுதித் தொலையும். இப்படி க்ண்காணாம போய் தொலையாதீரும்..
பதிலளிநீக்குபேரிளம் ஆணானதற்கு வாழ்த்துகள்!!
(அப்படின்னா இன்னா தலை? காளிமுத்து கேஸா?? ;-) நல்லா இருங்கடே!!
ஆசானே..எதுக்கு கடைசியில அப்படி ஒரு படத்தை போட்டுவிட்டு கீழ எங்க ரெண்டு பேர் பெயரையும் அதுவும் நன்றி வேற போட்டு இப்படி ஆப்பு வைக்கிறிங்க...
பதிலளிநீக்குவேண்டாம் சாமீ..நீங்க ஆணிய புடுங்க வேண்டாம் ;))))))
\\வெற்றி யாருக்கு? ( அ ) கெலிச்சது எது?\\
பதிலளிநீக்குஆகா..ஆகா...உங்களை ஆசானேன்னு கூப்பிடுறதுல தப்பேல்ல ஆசானே ;)))
பதிவை படிச்சிட்டு நிறைய கேள்வி வருது...எல்லோரும் பின்னூட்டத்தில் கேட்டுபுட்டாங்க...வந்து பதிலை சொல்லுங்க ஆசானே...எப்படியும் ஒரு மாசத்துல பதில் வந்துரும்ல்ல ;))
தொடர்ந்து மாசத்துக்கு ஒன்னு (என்னைய மாதிரி) ஒரு பதிவாச்சும் போடுங்க ;))
மறுபடியும் எழுத ஆரம்பித்து உள்ளதில் மகிழ்ச்சி..:):)
பதிலளிநீக்குஎன்னப்பா இளவஞ்சி,நலமா?
பதிலளிநீக்குஆளையே காணொமேன்னு பார்த்தேன்.
கலக்கலா வந்துட்டீர்:-)
ஹாய் மொட்டை பாஸ்..!
பதிலளிநீக்குசெளக்கியமா..?
நல்லாயிருக்கு எல்லாமே..!
கடைசி படத்துக்கு உதவி சென்ஷியும் கோபிநாத்துமா..?
பீச் புகைப்படம் நல்லாயிருக்கு..
இந்த வெளில ஒண்ணுக்கடிக்கிற மேட்டரை விடவே மாட்டீரா..? இதென்ன கெட்டப் பழக்கமா போயிருச்சு..!
அந்த ஆட்டோ பொண்ணு மேட்டர்தான் பாவம்.. பெண்ணுக்கு பெண்ணே எதிரி.. நல்ல உதாரணம்ல்ல..
பிரெண்ட் சொன்ன ஹெட்கிளார்க் சீட் உதாரணத்தை ஏதோ ஒரு கதைல படிச்ச ஞாபகம்.. சுஜாதாகூட எழுதியிருந்தாரு..
தொடர்ந்து இது போல் மாதத்துக்கு ஒன்றாவது எழுதித் தொலைக்கவும்..!
அப்போதுதான் நாங்கள் மறக்காமல் இருப்போம்..
வாங்க இளவஞ்சி.
பதிலளிநீக்குவருக வருக.
இரண்டாவது மேட்டரு,
நானும் அனுபவிச்சிருக்கேன்.
அனுபவம் அதிகம் போல.அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நானும் போயிருந்தேங்க.
வாங்கண்ணா வாங்க
பதிலளிநீக்குஅடிக்கடி தலையக் காட்டுங்க பாஸ்.
அருமையான அனுபவ நியதி
பெத்தராயுடு,
பதிலளிநீக்குஆளு எங்கனையும் போகலை..இங்கனயேத்தான் ச்சும்மா படிச்சுக்கிட்டு இருந்தேன் :) நன்றி
சென்ஷி,
ஊக்கங்களுக்கு நன்றி :)
சத்தியமா கடைசிபடத்துக்கும் உங்க பெயர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லீங்க!!! ஒரு பத்திக்கும் இன்னொன்னுக்கும் சரியான இடைவெளி விடனுங்கறது சர்தான் போல! இருந்தாலும்..
// கீழ நன்றி கோபிநாத், சென்ஷின்னா //
படவரிசையைப் பார்த்துவிட்டு பெயரை மாற்றிப்போட்டு எழுதிய உமது உள்குசும்பை ரசித்தேன் :)
கொங்குராசா,
// இருக்கீங்களா :) // ஆமாங் :) ஊட்ல எல்லாருஞ் சவுக்கியமுங்களா? :)
// இன்னும் பதிவு படிக்கல.. :( // பொழச்சீங்க :)
ஆயில்யன்,
// ?????????????????????????? //
ஹிஹி... அதுவந்து.. அவிங்கதான் சும்மா கெடந்த சங்கை...
//நல்லாவே ஒர்க் பண்ணுறாங்க இந்த ஆபிசருங்க :))))//
அவங்க மேலையும் தப்பில்லீங்க... கூட யாராச்சும் கண்டிப்பா வரனும்னு தெளிவாத்தான் லெட்டருல போட்டிருந்தாங்க...
நிஜமா நல்லவன்,
பதிலளிநீக்குநன்றி! காமெரா போட்டிருக்கீங்க.. கண்டிப்பா உங்க பக்கம் வரணும்!
யுவகிருஷ்ணா,
// ரொம்ப வருஷம் கழிச்சி உருப்படியா ஒரு பிளாக் படிச்ச நிறைவு :-)//
ரொம்ப மகிழ்வா இருக்குங்கப்பு! நன்றி :)
// தொடர்ந்து எழுதுங்கள் (மொட்டை) பாஸ்! //
அந்த வித்தை மட்டும் தெரிஞ்சதுன்னா...
செல்வநாயகி,
// welcome back!! //
நன்றி! நாஞ்சொல்லவேண்டியது... அய்யனைக் கூட்டிக்கிட்டு எனக்கு முன்னாடி நீங்க வந்துட்டீங்க! :)
பெனாத்ஸ்,
வாங்கப்பு. நன்றி.
// வாரமலரா? சூப்பர்! // வழக்கம்போல வருசமலராகாம இருந்தா சர்த்தான் :)
கார்த்திக்,
// கடசிவரைக்கும் அந்த வார்தைக்கு என்ன அர்த்தம்னு //
யாருக்கு மேன் தெரியும்? சென்னைல 99% பேருக்கு தெரியாது. ஆனா தும்மல் இருமல் மாதிரி அதுவும் அனைவருக்கும் ஒலிக்குறியீடா மாறிடுச்சு போல!
துபாய்ராஜா, வால்பையன், தமிழன் - கறுப்பி, பாலாஜி, சம்பத்,
பதிலளிநீக்குநன்றின்னேன் :)
முத்துகுமரன்,
// மூன்று வருடத்துக்குள் பேரிளம் ஆணாகிட்டீங்களா :-) // அதாவது 40 வயசுல பெண்கள் பேரிளம்னா.. அத்த நெருங்கிக்கிட்டுக்கற நானும் :)
// கவித்துவமான தலைப்பு வச்சு //
பதிவையும் கவித்துவமா எழுததெரிஞ்சா செய்யமாட்டனா?
பத்மா,
// சுகமா? //
நன்றி. நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?
// அந்த பெண் கடைசியில் அனுமதிக்கப்பட்டாரா இல்லையா? //
ஆம்! சரியான முறையில் வந்த அனைவரையும் முதலில் அனுப்பிவிட்டு, அந்த அலுவலர் இதுபோல் அறியாமல் முடியாமல் தனியாக வந்த மற்றுமொரு நால்வரை கடைசியாக அவரே வந்து அழைத்துச்சென்றார்.
பாலராஜன்கீதா,
நன்றினேன். நல்லா இருக்கீங்களா?
அய்யனார்,
வாங்கப்பு :)
// ஒரு அப்பனுக்கு பிறந்தவன் இங்கு சிறுநீர் கழிக்க மாட்டான் //
ஒரு அப்பனுக்கு பிறந்தவன் புராணகதைகளில் எங்கேனும் இருக்கக்கூடும். நாங்கெல்லாம் ஒரு அப்பனுக்கும் ஒரு அம்மாவுக்கும் பொறந்தவங்க. ஆகவே அன்பு தியேட்டர் சந்தில் கோலம்போடும் எங்கள் பிறப்புரிமையை எக்காரணம் கொண்டும் விட்டுத்தரமாட்டோம் என்பதை இந்த நேரத்திலே ஆணித்தரமாக சொல்லிக்கொள்கிறேன். எப்பூடி? ஹிஹி..
ஆசிப்பு அண்ணாச்சி,
// பேரிளம் ஆணானதற்கு வாழ்த்துகள்!!// நானெல்லாம் வாழ்க்கைய முதிர்சியடையறது பார்த்து ஆக்சுவலா ஒமக்கு பொகை லே! நீர் எப்பவும்போல் என்றும் பதினாறாவே இரும்வே...
:)
// அப்படின்னா இன்னா தலை? காளிமுத்து கேஸா?? ;-) //
இந்த புரோக்கிராம் விஜய்ல பார்த்திருக்கீங்களா? ரெண்டுபேர்த்த முதுகுகாட்டிவைச்சு அந்த டாக்டரு பட்டைய கெளப்புவாரு.. தமாசா இருக்கும் :)
கோபிநாத்,
பதிலளிநீக்கு// அதுவும் நன்றி வேற போட்டு இப்படி ஆப்பு வைக்கிறிங்க...//
சொன்னா நம்புங்க பிரதர்.. நடந்த சம்பவத்துக்கும் எனக்கும் துளியும் தொடர்பில்லை! :)
// தொடர்ந்து மாசத்துக்கு ஒன்னு //
ஆகட்டும் பிரதர்.. நீங்களும் போடுங்க :)
ராதா, துளசியக்கா
நன்றி :)
உ.த,
// ஒண்ணுக்கடிக்கிற மேட்டரை விடவே மாட்டீரா // நானெங்கே வைச்சிருந்தேன்? அதான் ஓசில விட்டுட்டனே? :)
// சுஜாதாகூட எழுதியிருந்தாரு.. //
அதானே? வாத்தியாரு எதத்தான் விட்டுவைச்சாரு?
ஊருசுற்றி,
// இரண்டாவது மேட்டரு,
நானும் அனுபவிச்சிருக்கேன். //
அனுபவிச்சீரா? அது ஆக்சுவலா கொடுமை ஓய்!
முரளிகண்ணன்,
நன்றிங்க :)
ரொம்ப பிரேக் விடாம எழுதுங்கய்யா.
பதிலளிநீக்குhi look in to this video...IT guys took a short film about abroad IT guys parents feelings.....
பதிலளிநீக்குhttp://www.youtube.com/watch?v=2yRcpRrUExQ
வாத்தியாரே பழைய பாடமெல்லாம் மறந்து போச்சு ..புதுப்பாடம் எப்போ வந்து நடத்த போறீங்க?
பதிலளிநீக்குஜோ,
பதிலளிநீக்குநன்றி! செய்கிறேன் :)
அனானி,
நல்ல குறும்படம். சுட்டிக்கு நன்றி :)
சிங். செயகுமார்,
//..புதுப்பாடம் எப்போ வந்து நடத்த போறீங்க? //
பழயபாடமெல்லாம் படிச்சு தேறியிருந்தா இப்பத்திக்கு எல்லாப்பாடங்களும் சொல்லித்தர ஊட்டம்மா வந்திருப்பாங்களே! அப்பறம் நடுவுல நந்தியாட்டன் நானெதுக்குன்னேன்? :)
அருமை..
பதிலளிநீக்கு