முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

காசியண்ணன் புண்ணியத்தில் ஒரு பதிவு!

அண்ணன் காசியின் ஐடியா படி இந்த உருப்படி இங்கே... பெரியவங்க பலபேரு டீடெயில்லா ஆராய்ஞ்ச உணர்ந்த தெளிந்த தகவல்களை போட்டிருக்காங்க. இராம. கி அய்யா எல்லாம் படிச்சா மலைப்பா இருக்கு! நான் என் வழக்கப்படி (அதாங்க... தான்தோன்றித்தனமா... )அடிச்சு விட்டிருக்கறேன். காசியண்ணன் கும்பலோடு கும்பலா என்னுதையும் போட்டிருந்தா எம்மானம் நின்னிருக்கும். இப்ப தனியாப்போட்டு என் அறிவையெண்ணி மக்கா நீங்க தலைதலையா அடிச்சுக்கப் போறீங்க! தெரியுதில்ல அப்பறம் என்னத்துக்குலே எழுதனன்னு ஆசிப்பு அண்ணாச்சி மாதிரி ஆளுங்க வருவாய்ங்க! அதுக்கெல்லாம் வெட்கம் மானம் ரோசம் பார்த்தா அப்பறம் நான் எப்பத்தான் புதுப்பதிவு போடறது?! எனவே, படிச்சு களிங்க :) 1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம் செய்யவேண்டும்? இல்லை என்றே நினைக்கிறேன். சங்கத்தமிழில் இருந்து நவீன இலக்கியம் வரைக்கும் இவ்வளவு இருக்கு இல்லை என்பதான தரவுகளை விடுங்கள்! பழந்தமிழ் வார்த்தைகளை தேடித்தெரிந்துகொள்...

நியதிகளும் வாழ்வும்...

மீண்டும் ஒரு காதல் கதை... அடையார் பஸ் டிப்போவின் எதிரில் இருக்கும் பஸ்ஸ்டேண்டை கடக்கும்போது ஒரு ஆட்டோவினைச் சுற்றி கொஞ்சம் மக்கள்ஸ். அருகில் போய் எட்டிப்பார்த்தால் ஓங்குதாங்கான ஆறடியில் இருந்த ஒரு விரைத்தவனைப் பிடித்து ஐந்தடியில் பூஞ்சையான ஒரு மனுசர் தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பலமாக அடித்துக் கொண்டிருத்தார். உடம்பெல்லாம் வெறுப்பாக ஒரு அம்மாள் அழுதுகொண்டும் திட்டிக்கொண்டும் பக்கத்தில்! ஆட்டோவினுல் ஒரு பெண் சிறுவயசு குழந்தையோடு! அந்த அம்மாள் ”உனக்கெல்லாம் சூடுசொரனையே கிடையாதா? இந்த அநியாயமெல்லாம் அடுக்குமா? உங்குடும்பம் வெளங்குமா? நீயெல்லாம் புழுத்துப்போய்தான் சாவப்போற...”ன்னு சரமாரியாக காறித் துப்பிகொண்டிருதார். ஆறடி மனுசன் அடிகளையும் மகாகேவலமான வசவுகளையும் எந்தவித எதிர்ப்புமின்றி வாங்கிக்கொண்டு ஆட்டோவினுள் இருந்த பெண்ணையே விட்டேத்தியாக பார்த்துக்கொண்டிருந்தான். அப்பெண்ணோ எந்தவித படபடப்புமின்றி “அப்படித்தான்னு சொல்லுங்க! இவங்க என்னத்த செஞ்சுருவாங்கனு பாக்கலாம்”னு ஒருகையில் குழந்தையையும் மறுகையில் ஆறடியின் கையையும் பிடித்துகொண்டு முகம் நிறைய வீம்புடன் சொல்லிக்கொண்டிருந்தாள். ...

உதிரிப் (புகைப்)படங்கள்

தலைகீழாகத்தான் இருக்கு உலகம் காதலில் இருக்கையில். மாட்டுக்கும் மனுசனுகும் மவுசும் பவுசும். எதிர்காலம் விற்பனைக்கு நிகழ்காலம் கட்டணம் பாதியைக் காணோமேன்னுட்டு வருந்தறவன் இறந்தகாலம் தாண்டறதில்லை. மீதி இருக்கேன்னுட்டு குஜாலாகறவன் தேங்கி நிக்கறதில்லை! மசினகுடியில் ஒரு மப்புகுடி... பாட்டிலு அவுட்டாப் ஃபோகஸ்ல இருக்கறதுக்கு காரணம்.. ஹிஹி... ஹேங் ஓவர்.. கூழானாலும் குளித்துக் குடி குவாட்டரானாலும் அளவாய் அடி அடையார் இரட்சகர்... ரேபனுக்கா? கோல்கேட்டுக்கா? மதுரை தெப்பக்குளத்தினுள் ஒரு அமேசான் காடுகள்... கட உள்... தனிமையில் தனி மயில்... எலேய்... போட்டா மட்டும் புட்ச்ச...டங்கு டணாருதான்!!!

ஈழத்தமிழர் மீதான தமிழக தூரிகைகளின் துயரப்பதிவுகள் - 07 மார்ச், சென்னை

தூரிகைகளின் துயரப்பதிவுகள், 07 மார்ச், தியாகராயா பள்ளி, தி. நகர், சென்னை. ம.செ, மதன் மற்றும் மாருதி... 1000 பேர் சாவு... போர்... எல்லாமே நமக்கு திடுக்கிடும் “செய்திகள்!” ஓவியம் என்னவோ முடிஞ்சது.. சொன்ன சேதி போய்ச்சேருமா? துயரத்தின் வெளிப்பாடு வண்ணங்களில்... பரிட்சைதான்... மார்க்குக்கு இல்லாம உணர்வுக்காக... அழிவினைப் பற்றிய உருவாக்கம்... நம்பிக்கையிழந்த கருப்பும் சிவப்பும் மற்றும் “வெளுப்பும்”! அப்பா அங்கிட்டு வரையறாரு.. என்னால முடிஞ்சது இங்கிட்டு... தூரிகைகளின் துயரப்பதிவுகள்... சில உங்கள் பார்வைக்கு...

காரைக்குடியில் இருந்து சில படங்கள்

போனவாரம் காரைக்குடி பயணம். அங்க என்கூட படிச்ச கூட்டாளிகளை பாக்கறதுக்கு 14 வருசம் கழிச்சு போனேன்னு ஆரம்பிச்சன்னா “இவங்கூட இந்த கொசுவத்தி தொல்ல தாங்கமுடியலடா!”ன்னு நீங்க எஸ்ஸாக வாய்ப்புகள் அதிகமிருப்பதால், நண்பரது வீட்டில் காலை டிபனே முழுவாழையிலையில் பால்பணியாரம் தொடங்கி 12 ஐட்டங்களுடன் சாப்பிட்டதையோ, மதியத்துக்கு மட்டனிலே மூனுவகையும் சிக்கனிலே நாலு வகையுமாக ”முழு” இலையில் பிரண்டு எழுந்ததையோ (நண்டு சாப்ட்டு பழக்கமில்லாத்தால தொடலை! ) அப்பறமா சாயந்தரம் கமுக்கமாக லாட்ஜ்ல ரூம்போட்டு பயக எல்லாம் ஃபுல் அடிச்சும் ஸ்டெடியாக நின்னு பழய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய காலேஜ் லவ்வு பஞ்சாயத்தையெல்லாம் பேசி தீர்த்துக்கினதையோ இங்கே சொல்லப்போவதில்லை! :) ஆனால் சில படங்கள் மட்டும் போட்டால் பார்க்காம போக மாட்டீங்கன்னு... சுட்ட கருத்துக்கள் அனைத்தும் படத்தைப்பார்த்ததும் (தொடர்பிருக்கோ இல்லையோ.. ) நினைவில் வந்த படித்துப்பிடித்ததன் குறிச்சொற்களை கூகிளிட்டு கிட்டியவை. ”ஒவ்வொரு புனிதனுக்கும் ஓர் இறந்தகாலம் உண்டு. ஒவ்வொரு பாவிக்கும் ஒரு வருங்காலம் உண்டு” - வி. ஆர். கிருஷ்ணய்யர் இன்றைய பிரபலமும் அன்றைய புதுமுகமும் - இசைஞானி...

தீபாவளியின் பின்னிரவில் ’பொங்கல்’

தெ ருவோர திருப்பத்தில் ஒத்தை விளக்கு. சூழும் பனியில் மோதி உருகிவழியும் வெளிச்சம். 10 மணிக்கு மேலாக வெளிச்சமும் இருட்டும் முயங்கும் இப்படியாப்பட்ட இடத்தில் பைக்குகளை நிறுத்தி டாங்குமேல படுத்துக்கிட்டோ சீட்டுல சாஞ்சுக்கிட்டோ ஒலக நிகழ்வுகளையெல்லாம் எங்கள் அறிவுமுதிர்ச்சியெனும் எல்லை வகுத்துத்தந்த அவரவர் அளவுகோள்களோடு பொங்கித்தீர்த்த வயசு! தாவணிகளின் சிக்னல்களுக்கு அர்த்தங்களும் அப்பன்களின் அன்புஇம்சைகளுக்கு ஆறுதலும் அரியர்களை தண்டிவர கம்புசுத்தும் பார்முலாக்களுமாக மணித்துளிகள் கரைந்த பொழுதுகள். அதாச்சு 15 வருசம்! நேற்று இந்த ’கேங்’கை அப்படி பார்க்கையில் ஒரு செகண்டு பொகையாக இருந்தாலும் அடுத்த நிமிசமே மனம்கொள்ளாத மகிழ்ச்சி. நாம் முன்னாடி நின்ற வாழ்க்கைப்படியில் இன்றைக்கு இவனுங்கன்னு ஒரு தற்பெருமை. கேட்பதற்கு யாருமே தயாராக இல்லையென்றாலும் ”அந்தக்காலத்துல நாங்களும் இப்படி புல்லட்டும் ஆர்ரெக்ஸ்சும் கேபியுமா..”ன்னு தொண்டைவரை முட்டிநிற்கும் பழமைகள். அங்கேயே தேங்கிவிடாமல் தாண்டிவந்த தெம்பு கொடுக்கும் தெகிரியத்தில் அன்றைய இத்துப்போன செயல்களெல்லாம் இன்று பெருமையாக சொல்லிக்கிறபடி மாறி நிற்கும் மேஜிக...

குலசை தசரா திருவிழா - என் புகைப்படப் பெட்டி

மீண்டும் ஒரு அற்புத பயணம். எல்லாம் நம்ப ஆதியோட சொந்த ஊரான குலசேகரன்பட்டணத்துல நடந்த தசரா விழாவை காணத்தான். 3 நாளைக்கு ஆதிவீட்டுலயே டேரா! வேளாவேளைக்கு கிணத்தடில குளியல், ரவுண்டு கட்டி சாப்பாடு, மொட்டைமாடி அறைல தென்னமரங்க காத்து தாலாட்ட உறக்கம், அப்பப்ப அப்டியப்டியே பெரண்டு படுத்துகினு மணிக்கணக்கா பொரளி பேசுதல். இதுக்கு நடுவால காலார நடந்து படமெடுக்கற வேலை! கொடுத்து வைச்சிருக்கனுமைய்யா! ஆதிக்கும் அவிங்கப்பாம்மாவுக்கும் எத்தனை நன்றி சொன்னாலும் தகும். வழக்கம் போலவே நம்ப காமேரா பிஸ்துங்க நாதன் , ராம்கோ வினோத் , பிரமிட் வினோத் , கோகுல், கவுஜர் லக்குவனார் , நம்ப சிவியாரு மற்றும் PeeVee ன்னு பெர்ரீய கும்பல். லடாக் புகழ் மோகந்தாஸு மட்டும் ஆணிங்க அதிகம்னு கடுக்கா குடுத்துட்டாப்புல. அந்தாளும் சேந்திருந்தா அதகளம்தான். இப்பல்லாம் படமெடுக்கறதுல அவ்வளவு ச்சுகுர்ரா இருக்க முடியலை.அங்கங்க நடக்கறதுல அப்படியே ஒன்றி ரசிக்கத்தான் புத்திபோகுதே தவிர காரிய நேர்த்தியா படமெடுக்கறதுல கவனம் போகமாட்டேங்குது. நாய் வாய்வைச்சாப்புல எல்லாத்தையும் செய்யும் என் வழக்கமான புத்திய வைச்சுப்பார்த்தா இந்த இன்ரஸ்ட்டும் போ...