முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

க.க:5 - காதலிக்க நேரம் உண்டு! காத்திருக்க இருவர் உண்டு!!


ன்னது?! ஒரு வார கேப்புல சன்னமா பொண்ணை பேசி முடிச்சிட்டீங்களா? நிச்சயம் வரைக்கும் போயாச்சா? ரெண்டு வீட்டுலையும் கைய நனைச்சிட்டீங்களா?! கல்யாண தேதிக்கு இன்னும் அஞ்சாறு மாசம் இருக்கா? என்னப்பு... சொல்லவேல்ல? சரி விடுங்க.. சொந்த பந்தங்க மட்டும் கூடி மேட்டரை முடிச்சிருப்பீங்க... கல்யாணத்துக்காவது மறக்காம பத்திரிக்கை வைங்க! நமக்கெல்லாம் அடிக்கடி இந்த கல்யாணவீட்டு போட்டோவுலையும் வீடியோவுலையும் லைட்டா பல்லைக்காட்டிக்கிட்டு, 101 ரூவா வைச்ச கவரை கமுக்கமா மாப்ளை கைல அழுத்திட்டு, நமக்கு தெரிஞ்ச ஒரே இங்கிலீசு வாழ்த்தான "Many more Happy returns of the Day" அப்படிங்கறதை ஜாக்கிரதையா தவிர்த்து, கேனத்தனமா "மச்சி! கடைசில நீயும் கவுந்துட்டயா"ங்கற மாதிரி ஏதாவது பெனாத்தி, வீடியோல விழுகறதெல்லாம் நமக்கு சர்வசாதாரணங்கற மாதிரி ஒரு லுக்கோட, கொஞ்சம் முறுக்கிக்கிட்டு வெரைச்சா மாதிரி நின்னு வந்ததுக்கான எவிடென்சு காட்டலைன்னா சமுதாயத்துல திடீர்னு நம்ம பெரபலம் கொஞ்சம் கொறைஞ்சுட்டாப்புல ஒரு நெனைப்பு வந்துரும்! அதுக்காகத்தான்! மத்தபடி மூனுவேலை மூக்குப்பிடிக்க மொசுக்கறதுக்கு இல்லைங்...!


ஆக மொத்தம் வீட்டு பெருசுங்க எல்லாம் சேர்ந்து உனக்கான ஒருத்தி இவதான்னு முடிவு பண்ணிட்டாங்க! நமக்காக ஒரு ஜீவன் காத்திருக்கிறது அப்படிங்கற நெனைப்பே சும்மா குளுகுளுன்னு கிளுகிளுன்னு இருக்குமே! SCV ல வர பாட்டெல்லாம் உங்களை பத்தி பாடறமாதிரியே இருக்குமே! அவங்க மொதமொதல உங்களைப்பார்த்த அந்த மிரண்ட (சரி.. சரி.. மருண்ட )பார்வையை ரீவைண்டு செஞ்சு செஞ்சு ஓட்டறதுக்குன்னே ஒரு தனி ப்ராசெஸ் த்ரெட் உங்க மண்டைக்குள்ள ஓரமா ஓடிக்கிட்டே இருக்குமே? உங்க பர்சுக்குள்ள யார் கண்ணுக்கும் ஈசியா படாத ஒரு எடத்துல "With love" அப்படின்னு எழுதி கையெழுத்து போட்டு ஒரு இச்சு வைச்ச மார்க்கு (என்னது கோல்கேட் வாசம் அடிக்குதா? ) தெரிய ஒரு குட்டி போட்டோ ஒளிஞ்சுக்கிட்டு இருக்குமே! உங்க க்ரெடிட் கார்டுல ஒரு அல்ட்ராமாடல் போன் வாங்குனதுக்கான ஒரு ட்ரான்ஸாக்சன் ஆகியிருக்குமே! இப்பவெல்லாம் வேலைய ரிசைன் செஞ்சுட்டு கால்சென்டர்ல வேலைக்கு சேந்தாப்படி செல்போன் ஹேண்ஸ்ஃப்ரி உங்க காதுல பரமசிவன் கழுத்து பாம்புமாதிரி தொங்கிக்கிட்டே இருக்குமே? உங்க ஆபீசுக்கு உள்ளயும் சுத்தியும் யாரும் அடிக்கடி வராத தொந்தரவில்லாத எடங்க எல்லாம் இன்னேரம் கண்டுபிடிச்சிருப்பீங்களே!


இத்தனை நாள் கூட வேலை செய்யறவளுக "How nice! Chooo Sweet!" அப்படின்னு கீச்சுக்குரல்ல சொல்லும் போதெல்லாம் மனசுக்குள்ள குபுக்குன்னு கெளம்பற எரிச்சல் எல்லாம் இப்போ அதையே அவுக சொல்லிக் கேக்கறப்ப எப்படி இனிமையா மாறுச்சுன்னு ஆச்சரியமா இருக்குமே?! சிஸ்டம் பாஸ்வேர்டெல்லாம் அவுகளை நீங்க மட்டுமே கூப்பிடற செல்லப்பேருக்கு மாறியிருக்குமே? "டெட்டிபியர் இவ்வளவு விலையா" அப்படின்னு திகைச்சிருப்பீங்களே! அவுக வீட்டுல யார் யாரு எத்தனை மணிக்கு தூங்குவாங்கன்னு கண்டுபுடிச்சிருப்பீங்களே! ஒரு தடவை சார்ஜ் செஞ்சா செல்போன்ல எவ்வளவு நேரம் பேசலாம்கற டெக்னிக்கல் ஸ்பெசிபிகேசனெல்லாம் தெரிஞ்சிருக்குமே! ஆபீஸ்ல ப்ரோக்ராம் எழுதச்சொன்னா ஒரு மணிநேரத்துக்கு 4 லைனுக்கு மேல எழுதமுடியாத கைக்கு எப்படி SMS மட்டும் நிமிசத்துக்கு 20 அடிக்க முடியுதுன்னு மலைப்பா இருக்குமே! ஒரு நாளைக்கு 10 தம்மு அடிக்கறதெல்லாம் ஒடம்புக்கு எவ்வளவு கெடுதல் தெரியுமா அப்படின்னு திடீர்னு அன்புமணிக்கு உங்கள் மேலான ஆதரவை அளிக்கத் தோணுமே?


என்னது? ஓவரா சொல்லறனா? சரி விடுங்க! நீங்க வெளில சொல்லக்கூடாதுன்னா நானும் சொல்லலை! :) ஆகவே மக்களே! உங்கள் வாழ்க்கையில் இதுவே உங்களுக்கு கொடுக்கப்படும் கடைசி வாய்ப்பு! ஆகவே, காதலியுங்கள்! இந்த வாய்ப்பை தவர விட்டால் இனி கிடைக்கவே கிடைக்காது! இந்த நேரத்துல மட்டும் உங்க கல்யாணமாகி ரெண்டு வருசமான கூட்டாளிகளையெல்லாம் பக்கத்துல சேர்த்துக்காதீக! "இதெல்லாம் மாயைடா மச்சி!", "எல்லாம் கல்யாணமானா மூணு மாசத்துல தெளிஞ்சுரும்", "உன்னையெல்லாம் பார்த்தா பாவமா இருக்கு!", "உலக உண்மை தெரியாம இருக்கியேயப்பு!" இப்படி விதவிதமான பிட்டுகளையெல்லாம் எடுத்துவிட்டு, அவிங்க கல்யாணத்துக்கு முன்னாடி உருண்டு புரண்டு காதலிச்சதையெல்லாம் மறந்து, பின்னாடி வரப்போற நிதர்சண வாழ்க்கைய அப்பட்டமா எடுத்துவிட்டு உங்க மனசை கெடுக்கப் பார்ப்பானுவ.. பொகைப்பிடிச்சவனுக! அதையெல்லாம் காதுலயே போட்டுக்காதீக! என்னது? இப்பவும் காதுல ஹேண்ஸ்ப்ரீதான் இருக்கா? போட்டுத்தாக்குங்க! :)


சரியப்பு! மனம் விட்டு காதலிக்கனுங்கற! ஆனா எந்த அளவுக்கு நம்ப மேட்டரை எல்லாம் அவங்களுக்கு சொல்லலாம் அப்படின்னு கேட்டீங்கன்னா கட்ரைட்டான பதிலெல்லாம் இதுக்கு கிடையாது! "வரபோறவ கிட்ட எதையுமே மறக்கக்கூடாது! அத்தனையும் சொல்லிறனும்!" அப்படிங்கற ஓபன்புக் ஒருவகை! "நம்மைப்பத்தி ஒன்னுமே நெகடிவா சொல்லக்கூடாது! பிரச்சனையாகிரும்!" அப்படிங்கற ஃப்ளாக்பாக்ஸ் ஒருவகை! என்னதான் சுயநினைவோட இல்லாம காதல் தேன்குடிச்ச கருவண்டாட்டம் கிர்ரடிச்சுக்கிடந்தாலும் உள்ளுணர்வு சொல்லறதுக்கேப்ப ஆங்காங்கே அப்டி அப்டி, இன்னின்னிக்கு இப்டி இப்டி அப்படின்னு ஒரு லெவலா, ஒரு சைசா, ஒரு தினுசா, ஒரு குன்சாவா உண்மைகளை சொல்லியும் சொல்லாம சொல்லறது ஒருவகை! என்னைக்கேட்டா கடைசியா சொன்னது தான் பெஸ்ட்டு! இது உண்மைகளை அப்படியே சட்டி சட்டியா எடுத்துப்போட்டு ஒடைக்கறது இல்லை! மொத்தமா திரைபோட்டு உங்க இருண்ட பக்கங்களை மூடிமறைக்கறது இல்லை! என்னதான் இரண்டு பேரும் சேர்ந்து வாழப்போகிறவர்கள் என்றாலும் அவரவருக்கு ஒரு அந்தரங்கம் உண்டு! அதை மதிப்பது என்பதுதான் இது! "படிக்கும்போது ஒரு புள்ளைய டாவடிச்சேன்! ஆனா அது சரிவராது அப்படின்னு அதன்பிறகு உணர்ந்துட்டேன்!" அப்படின்னு சொல்லி நிறுத்தாம "நாங்க எப்படியெல்லாம் காதலிச்சோம் தெரியுமா? நான் எப்பேர்ப்பட்ட காதலன் தெரியுமா?"ன்னு லெவல் தெரியாம அள்ளி விட்டுக்கிட்டு இருந்தீங்கன்னா அப்பறம் சொல்லறதுக்கு ஒன்னுமில்லை! நல்லா கவனமா இருங்கப்பு! இப்ப நீங்க எடுத்துவிடற ஒவ்வொன்னும் நாளைக்கு ஒரு பிரச்சனைன்னா அஸ்திரமா மாறி உங்க மார்ல பாயக்கூடிய அபாயம் இருக்குங்கோவ்! அப்பட்டமா மறைக்கசொல்லலை! அளவா அவசியமானதை சொல்லுங்கன்னு சொல்லறேன்! அஙகிட்டு இருந்து கதை கேக்கறதும் அளவா கேளுங்க.. தேவையில்லாத விசயங்களை நோண்டி நோண்டி விசாரணை கமிசனெல்லாம் போடாதீக! இந்தக்கட்டமானது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக அன்றி ஆளுக்கு ஒரு பக்கம் உட்கார்ந்து "சத்தியசோதனை" எழுதுவதற்கானது அல்ல!


இந்த மேட்டரு மட்டும் இல்லை! நம் வீட்டாரை பற்றி சொல்லும் எதுவும் கூட நல்லதாகவே சொல்லி பில்டப்பு கொடுக்கனும்னு அவசியமில்லை! சொல்வதனால் எந்த பயனும் இல்லை என்பது மாதிரியான விசயங்களை அப்பட்டமாக புட்டுப்புட்டு வைப்பதற்கும் அவசியமில்லை! எக்காரணம் கொண்டும் உங்கள் வீட்டாரைப்பற்றிய உயர்வான எண்ணங்களை அவுக மனதில் வ்லுக்கட்டாயமாக திணிக்காதீர்கள்! உண்மைகளைச் சொல்லுங்கள்! அவுக நம்மை விட வெவரமாத்தான் இருப்பாக! நீங்கள் சொல்வதைவிடவும் அதிகமாக புரிந்து கொள்வார்கள்! மேலாக உணர்துகொள்வார்கள்! உறவுகள் என்பது இவர்கள் இப்படி என தியரி படித்து வருவதில்லை! அடுத்தவர் இருப்பின் மேண்மையை உணர்ந்து, உடனிருந்து பழகி, ஒருவருக்கொருவர் புரிந்துகொள்வதிலும், அன்பை உணர்ந்து கொள்வதிலும் மெல்ல மெல்ல உருவாகும் பிணைப்பு அது! பகிர்ந்து கொள்ளப்படும் விடயங்களைப் பற்றிய நிஜமான அக்கறையோடும், பரிவோடும், நேர்மையாகவும் இருங்கள்! அவ்வளவுதான்!

காதலிக்கற இந்த நேரத்துல நெஜமாகவே சில ஹீரோத்தனம் எல்லாம் செய்யுங்க! இன்ப அதிர்ச்சிகளை அள்ளி விடுங்க! இந்த இனிமையான நேரங்கள் தான் பின்னால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிட்டோம் என உணர்ந்து கொள்ளும் காலங்களில் ஒரு சின்ன புன்முறுவலை முகத்தில் கொண்டுவரும்! அந்தக் காலத்துல என்னோட வீட்டம்மா வடநாட்டுல வேலையா இருந்தாங்க! எனக்கு சென்னை! போனைப்புடிச்சிக்கிட்டு தொங்கறதுதான் ஒரே வேலை! கல்யாணத்துக்கு இன்னும் 5 மாசம்! ஒரு நாளு பேச்சுவாக்குல காச்சலடிக்குதுன்னு சொல்லி "என்ன செய்ய? அவ்வளவு தூரத்துல இருக்கற! நீ வந்து பார்க்கவா முடியும்?" அப்படின்னு சோகமா சொல்ல நானும் "ரெண்டு க்ரோசினை ஒன்னா போட்டுக்கிட்டு படுத்து தூங்குனா சரியாப்போயிரும்" அப்படின்னு என்னோட மருத்துவ அறிவை எடுத்து இயம்பிட்டு போனை வைச்சுட்டேன்! அப்போ மணி இரவு 10! போட்டுக்கிட்டு இருந்த பேண்டு சட்டையோட நேரா கெளம்பி மீனம்பாக்கம் போய் பைக்க நிறுத்திட்டு அன்னைக்கு நைட்டு ஃப்ளைட் 1:30க்கு பிடிச்சு 3 மணிக்கு அவுக ஊர்ல எறங்கி விடியறவரைக்கும் ஏர்போர்ட்லயே தூங்கிட்டு அப்பறம் ஒரு வண்டியபிடிச்சு 6 மணிக்கா அவுக வீட்டுக்குப்போய் "கடவுளே! கடவுளே! அவதான் கதவைதிறக்கனும்"னு வேண்டிக்கிட்டே காலிங்பெல்லை அடிக்க சொல்லிவைச்சாப்புல பால்காரன் வந்துட்டான்னு அவுக வந்து கதவைத்திறக்க.. ஆஹா! அந்த 5 நொடிகள் இனி வாழ்க்கையில் கிடைக்காது! நாம அப்படியே கமல் மாதிரி ஒரு மார்க்கமா செவுத்துல சாஞ்சுக்கிட்டு ஒரு லுக்கோட "காச்ச இப்ப எப்படி இருக்கு?" அப்படிங்கற உணர்வுபூர்வமான ஒரு டயலாகை எடுத்து விட.. இன்ப அதிர்சியில் அவுக பேச்சு மூச்சில்லாம மொகத்தை பொத்தி அழ ஆரம்பிக்க... ம்ம்ம்.. அப்பிடி போச்சுது கதை! இன்னைக்கும் இங்கிட்டு கரண்டி வளையற நிகழ்வு ஏதாச்சும் ஆரம்பிச்சா சன்னமா இந்த பிட்டை ஃப்ளாஸ்பேக்குன்னு எடுத்துவிட்டு கொஞ்சமா அடிவாங்கி தப்பிச்சுக்கறதுதான்! :)



கல்யாணத்துக்கு இன்னும் நாளிருக்கு... ஆகவே, உள்ளூருல இருக்கற அல்லது சந்திச்சுக்க வாய்ப்பிருக்கற மக்களுகளுக்கு எல்லாம் இன்னேரம் வாரத்துக்கு ரெண்டுதடவையாவது வீட்டு பெருசுகளுக்கு தெரியாம ரகசிய சந்திப்பெல்லாம் நடந்துக்கிட்டு இருக்குமே! அப்படி இப்படி சில சில்மிசங்க எல்லாம் பர்மிட்டடு! இதெல்லாம் நாள் முச்சூடும் அவிங்க நெனப்பாவே இருக்கறது ஒதவும்! அதனால கொஞ்சம் இந்த விசயத்துல கொஞ்சம் கட்டுப்பெட்டியா இருந்து கமுக்கமா செய்யுங்க! என்னது நீங்க குஷ்பு கட்சியா? அது சரி! நமக்கு இந்த விசயத்துல இருக்கற கெடைச்ச பட்டறிவுக்கு தலைவாழை இலை போட்டு, எட்டு வகை பொரியல் வைச்சு, நெய் பருப்புல ஆரம்பிச்சு, மோருல கைகழுவற விருந்து போட்டாவே ஒழுங்கா சாப்பிடத்தெரியாது! இதுல எதுக்குங்க அவதி அவதியா வறட்டு பாஸ்ட்புட்டை சாப்டுட்டு தொண்டைல மாட்டி விக்கிக்கிட்டு கஷ்டப்படனும்? ரசனையோடு, நுணுக்கமாக, இயல்பாக, அன்பு கலந்து, புரிதல் கொண்டு, பிரிக்க முடியாத பந்தத்துடன் அவசரமில்லாமல் பிரிக்க வேண்டிய வாழ்க்கை முடிச்சுகளை அவசரப்பட்டு அவிழ்க்கிறேன் என்று மேலும் சிக்கலாக்கிவிடக் கூடாதல்லவா? ஏதாவது தவறாகபோய் சரியா வராமப்போனா "இவனால முடியலையோ?" அல்லது "இவளுக்கு ஒன்னுமே தெரியலையோ?!" அப்படிங்கற சின்னக்கீறல் மனசுல விழுந்துருச்சுன்னா அப்பறம அது நல்லவிதமா முடியாது! எனக்குத்தெரிஞ்ச ஒரு கேசுல ரெண்டுபேருமே வெளிநாட்டுலதான் இருந்தாங்க! இங்க பெரியவுக எல்லாம் பேசி முடிச்சதும், ரொம்ப முற்போக்குன்னு அவங்க இப்படி அப்படி இருக்கப்போக, கொஞ்ச நாள்ல அந்த பொண்ணு "He is not a Man" அப்படின்னு சிம்பிளா சொல்லி கல்யாணத்தையே நிறுத்திருச்சு! :( இப்போ அவிங்க ரெண்டுபேரும் வேற கல்யாணம் செஞ்சு புள்ள குட்டிகளோடதான் இருக்காக! பொறுங்கப்பு! கெணத்து தண்ணிய ஆத்துவெள்ளமா அடிச்சுக்கிட்டு போயிற போகுது?!


வாரத்துக்கு ஒரு முறையாகவாவது அவுக வீட்டாருக்கு ஒரு போன் போட்டு பேசிருங்க.. (எல்லாத்தையும் நலம் விசாரிச்சிட்டு "உங்க பொண்ணுகூட கொஞ்சம் பேசலாமா?" அப்படிங்கற அப்பாவி பிட்டை எடுத்துவிட்டால் இன்னும் விசேசம்!) "கல்யாணத்துக்கு அப்பறம் நான் வேலைக்கு போகனும்", "கல்யாணத்துக்கு பிறகும் நான் என் வீட்டாருக்கு சப்போர்ட்டா இருக்கனும்" என்பது போன்ற கோரிக்கைகள் அவுக கிட்ட இருந்து வந்தால் உங்களுக்கு அதில் ஒப்புமை இல்லாத பட்சத்தில் இதயம் மூடி காதுகளை மட்டும் திறந்து கேட்காமல், இப்போதைக்கு சரின்னு சொல்லிட்டு கல்யாணத்துக்கு பெறகு சமாளிச்சுக்கலாம் என்ற எண்ணங்களை கைவிட்டு, உண்மையான அக்கறையோடு உங்கள் நிலையையும் முடிவையும் எடுத்துகூற முடியுமானால் அதனைச்செய்யுங்கள்! இல்லையெனில் "அன்னைக்கு சொல்லறப்ப தலையை தலையை ஆட்டூனீங்க!", "உங்களை நல்லவுகன்னு நினைச்சேன்", "ம்ம்ம்.. எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடிதான்!", "எனக்கு வந்து வாச்சிருக்கீங்க பாருங்க" என்பது போன்ற ஏவாள் ஆதாமுக்குச் சொன்ன வசனங்களை சிறிதும் மாறாமல் இன்றும் நீங்கள் கேட்கக்கூடிய சிரமதசையில் இருந்து தப்பிக்க முடியாதெனினும் மனதளவில் பெரிய பாதிப்பின்றி தனக்குதானே சிரிச்சுக்க உதவும்!


ஆகவே...



மனமுவந்து காதல் செய்வீர்!
ஓடிஓடி காதல் செய்வீர்!
விடியவிடிய காதல் செய்வீர்!
தொலைபேசியில் காதல் செய்வீர்!
பெத்தவுகளுக்கு தொல்லைதராமல் காதல் செய்வீர்!
உளரிக்கொட்டி காதல் செய்வீர்!
வருங்கால வாழ்க்கை பேசி காதல் செய்வீர்!
சண்டைபோட்டு காதல் செய்வீர்!
பரிசு கொடுத்து காதல் செய்வீர்!
பைத்தியமாக காதல் செய்வீர்!
காதல் மட்டுமே வாழ்க்கையென காதல் செய்வீர்!
வானமே எல்லையென காதல் செய்வீர்!
'எல்லைமீறாமல்' காதல் செய்வீர்!



"சொல்லீட்டல்ல! அப்ப கெளம்பறது?!" அப்படிங்கறீங்களா? அதுவும் சரிதான்! சிவபூஜைல நானெதுக்கு கரடிபோல! அப்போ வர்றங்ங்...

--------

கருத்துகள்

  1. ஒண்ணு இல்லேன்னா, ஒண்ணரை scroll க்குள்ளே அடங்கற மாதிரி போஸ்டே போடமாட்டீங்களா?

    பதிலளிநீக்கு
  2. போன பின்னூட்டத்திலே நகைக்குறி போட மறந்தாச்சு. போட்டுகினு படிங்க :-)

    பதிலளிநீக்கு
  3. //ரசனையோடு, நுணுக்கமாக, இயல்பாக, அன்பு கலந்து, புரிதல் கொண்டு, பிரிக்க முடியாத பந்தத்துடன் அவசரமில்லாமல் பிரிக்க வேண்டிய வாழ்க்கை முடிச்சுகளை அவசரப்பட்டு அவிழ்க்கிறேன் என்று மேலும் சிக்கலாக்கிவிடக் கூடாதல்லவா?//
    ஜி.ராவுக்கு முதல் முதல் எபிசோட்ல வந்த கேள்வி இன்னிக்குத் தாங்க எனக்கு வருது!!

    // ஒவ்வொரு வரியும் இவ்வளவு பெருசா இருந்தா எப்படி? வரியப் படிச்சு முடிக்கும் போது தொடக்கத்துல படிச்சது மறந்து போகுதுங்களே. //

    பை த பை,
    //உங்க க்ரெடிட் கார்டுல ஒரு அல்ட்ராமாடல் போன் வாங்குனதுக்கான ஒரு ட்ரான்ஸாக்சன் ஆகியிருக்குமே! //
    போன் மட்டும் தானா? :)

    பதிலளிநீக்கு
  4. //ஒரு தடவை சார்ஜ் செஞ்சா செல்போன்ல எவ்வளவு நேரம் பேசலாம்கற டெக்னிக்கல் ஸ்பெசிபிகேசனெல்லாம் தெரிஞ்சிருக்குமே!//

    சார்ஜ் இறங்குதுன்னு தெரிஞ்சதும் சார்ஜர்ல போட்டுட்டு பேசுறதை விட்டுட்டியளே.

    அருமையான தொடர்.

    பதிலளிநீக்கு
  5. ///////////
    உங்க க்ரெடிட் கார்டுல ஒரு அல்ட்ராமாடல் போன் வாங்குனதுக்கான ஒரு ட்ரான்ஸாக்சன் ஆகியிருக்குமே! இப்பவெல்லாம் வேலைய ரிசைன் செஞ்சுட்டு கால்சென்டர்ல வேலைக்கு சேந்தாப்படி செல்போன் ஹேண்ஸ்ஃப்ரி உங்க காதுல பரமசிவன் கழுத்து பாம்புமாதிரி தொங்கிக்கிட்டே இருக்குமே? உங்க ஆபீசுக்கு உள்ளயும் சுத்தியும் யாரும் அடிக்கடி வராத தொந்தரவில்லாத எடங்க எல்லாம் இன்னேரம் கண்டுபிடிச்சிருப்பீங்களே!
    ////////////
    டெட்டிபியர் இவ்வளவு விலையா" அப்படின்னு திகைச்சிருப்பீங்களே! அவுக வீட்டுல யார் யாரு எத்தனை மணிக்கு தூங்குவாங்கன்னு கண்டுபுடிச்சிருப்பீங்களே! ஒரு தடவை சார்ஜ் செஞ்சா செல்போன்ல எவ்வளவு நேரம் பேசலாம்கற டெக்னிக்கல் ஸ்பெசிபிகேசனெல்லாம் தெரிஞ்சிருக்குமே!
    //////////////

    இளவஞ்சி,
    பதிவு போடறத விட்டு எப்போ வேவு பாக்க ஆரம்பிச்சீங்க :-(
    சரி சரி ஒரு செல்போனுக்கு ரெண்டு பேட்டரி வச்சுருக்கிறத கவனிக்கலையா :-))))))

    பதிலளிநீக்கு
  6. நிறைய துப்புக் கொடுத்துருக்கீங்க. ஒண்ணு மட்டும் எனக்கு முன்னாடியே தெரியாமப் போச்சேன்னு நினைச்சேன் :-) எதுன்னெல்லாம் நான் சொல்றதா இல்லை :-)

    பதிலளிநீக்கு
  7. இளவஞ்சி வாத்தியார்,

    இந்த லாங் வீக் என்டுல பல கமிட்மென்ட்களால் Blank க்காக இருந்த மண்டை இப்பதான் தமிழ்மணத்துக்காக ஒதுக்கபட்ட ப்ராசசர் திரட்டை ஒரு வழியாக ஓட விட்டது.

    ////ரசனையோடு, நுணுக்கமாக, இயல்பாக, அன்பு கலந்து, புரிதல் கொண்டு, பிரிக்க முடியாத பந்தத்துடன் அவசரமில்லாமல் பிரிக்க வேண்டிய வாழ்க்கை முடிச்சுகளை அவசரப்பட்டு அவிழ்க்கிறேன் என்று மேலும் சிக்கலாக்கிவிடக் கூடாதல்லவா?//


    நுணுக்கமான இயல்போடு ஒன்று ஒரு வார்த்தையாக இருக்கணும்மா இல்லை

    நுணுக்கமாக, இயல்பாக, et all என்று இரு தனி வார்த்தைகளா ?

    // உங்க க்ரெடிட் கார்டுல ஒரு அல்ட்ராமாடல் போன் வாங்குனதுக்கான ஒரு ட்ரான்ஸாக்சன் ஆகியிருக்குமே

    இந்த வரிகள் இந்த பதிவை இட்டவரைத்தான் சொல்லுது என்று யாரும் தவறாக எடுத்துகொள்ளவேண்டாம் என்று மிக தாழ்மையுடன் கேட்டுகொள்ளபடுகிறார்கள் :-))))))))

    பதிலளிநீக்கு
  8. இதெல்லாம் வயது வந்தவர்களுக்கான தொடர்... என்னை மாதிரி வருத்தப்படாத வாலிபர்களை எல்லாம் இந்த மாதிரி பண்ணுங்க அப்பு என்று காட்டிக் கொடுக்கும் தொடர்... பிளாக்குகெல்லாம் ரேட்டிங் இல்லியாங்க... ம்ம்ம்ம்ம்ம்ம்.... வயிறு எரியுது... சொக்கா, எனக்கில்லை... எனக்கில்லை...

    பதிலளிநீக்கு
  9. பரவாயில்லை.. கொஞ்சம் தெளிவாத்தான் இருகேன் நான்! :)

    (ஆமா, நிசம்மா ராத்திரி ப்ளைட் புடிச்சு போனீங்களா?? ம்ம் ?)

    பதிலளிநீக்கு
  10. காதல் மன்னன் இளவஞ்சி வாழ்க!!!
    :))

    பதிலளிநீக்கு
  11. //சில ஹீரோத்தனம் எல்லாம் செய்யுங்க! இன்ப அதிர்ச்சிகளை அள்ளி விடுங்க! இந்த இனிமையான நேரங்கள் தான் பின்னால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிட்டோம் என உணர்ந்து கொள்ளும் காலங்களில் ஒரு சின்ன புன்முறுவலை முகத்தில் கொண்டுவரும்!//

    அதே!! சரியாப் பிடிச்சிருக்கிறீங்க முக்கியமானதை!
    பாடங் கேட்கிற மாணவர்களே - திருமணத்துக்கப்பறமும் இதுமாதிரி செய்வது வரவேற்கப்படும்.[இளவஞ்சி - திருமணத்துக்குப் பிறகு (அவங்களுக்குப் பிடிச்ச மாதிரியான) ஸ்டண்ட் காட்டினீங்களா? ;O)

    பதிலளிநீக்கு
  12. வாத்தியார் எமர்ஜன்சி லீவு, சரி அதுக்குள்ள நல்ல ஸ்டுடண்டா "புள்ள புடிக்க" போனத பத்தி ஒரு அஸைன்மன்ட் எழுதிரலாமுன்னு பார்ததா இங்க அடுத்த பாடம் ரெடி. ம்! படிக்கும் போதே i can feel butterflies in my stomach ம் நடக்குமா சொக்கா?

    பதிலளிநீக்கு
  13. Hi Ilavanji,

    Unga pathi padikka padikka flash back oduthu manasula...Had nice time...Enjoyed ur blog...

    Neengalum nalla enjoy pannirupeenga pola...experiance illama ithu ezhutharathu konjam kashtam thaan....

    SweetVoice.

    பதிலளிநீக்கு
  14. //செல்போனுக்கு ரெண்டு பேட்டரி வச்சுருக்கிறத கவனிக்கலையா // இப்படி ஒரு சமாச்சாரம் இருக்கா.. ரொம்ப நன்றி வாத்தியாரே. :)

    பதிலளிநீக்கு
  15. அஸ்க்கு புஸ்க்கு, நீங்க சொன்னா நாங்க லவ் பன்னனுமா....

    பதிவு அருமை...

    பதிலளிநீக்கு
  16. இளவஞ்சிணா!அனுபவ அறிவுரைகளை
    புட்டு,புட்டு,புட்டு வைச்சுட்டீங்ணா!!.

    அக்காவை அஞ்சுமாசத்திலே ஆனந்த
    கண்ணீர் விட வச்ச கத அசத்தல்ணா!.

    எங்கள மாதிரி இளந்தாரிகளுக்கு,
    இன்னும் என்னல்லாம் இருக்கோ,
    எல்லாத்தையும் எடுத்துவிடுங்ணா!!.

    அன்புடன்,
    (துபாய்)ராஜா.

    பதிலளிநீக்கு
  17. >>அன்னைக்கு நைட்டு ஃப்ளைட் 1:30க்கு பிடிச்சு 3 மணிக்கு அவுக ஊர்ல எறங்கி விடியறவரைக்கும் ஏர்போர்ட்லயே தூங்கிட்டு அப்பறம் ஒரு வண்டியபிடிச்சு 6 மணிக்கா அவுக வீட்டுக்குப்போய்<<<

    யப்போய்... தெறமசாலி வாத்தியாரே.. :-)))

    இந்த தொடருக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லைனு பின்னூட்டமிடாம இருந்த்தேன்... ஆனா.. உங்களோட இந்த கூத்தை படிச்சதும்... பாராட்டாம (?) ;-) இருக்க முடியல...

    பதிலளிநீக்கு
  18. நான் இதுக்கு பின்னூட்டம் போடவே கூடாதுன்னு முடிவோட இருந்தேன்...

    //இன்னைக்கும் இங்கிட்டு கரண்டி வளையற நிகழ்வு ஏதாச்சும் ஆரம்பிச்சா சன்னமா இந்த பிட்டை ஃப்ளாஸ்பேக்குன்னு எடுத்துவிட்டு கொஞ்சமா அடிவாங்கி தப்பிச்சுக்கறதுதான்! :)//

    உண்மையிலேயே போட்டு தாக்கிருக்கிங்க... காலத்துக்கும் யாரலையும் மறக்க முடியுர மேட்டரா பண்ணிருக்கீங்க நீங்க??? இதுதான் உங்களோட பிரம்மாஸ்த்திரமா???

    பதிலளிநீக்கு
  19. ஹ ஹா.. ஆனா ஒண்ணு இளவஞ்சி, உங்க பேச்சைக் கேட்டுட்டு ஃபாலோ பண்ணுன ஆளுக யாராவதோட பெத்தவங்களுக்கு மட்டும் இந்த பதிவைப் பற்றித் தெரிஞ்சுதுன்னா.. எம்.ஜி ரோடுல கட்டவுட் வெச்சு தேடப் போறாங்க..அப்புறம் 'விதி வலியது' ன்னு ஒரு பதிவை எதிர்பார்க்கலாம் ;)

    எத்தனை கோடி உள்ளூர் செலாவணியை காலி பண்ணீட்டிருக்கீங்க தெரியுமா ! :)

    சுகா

    பதிலளிநீக்கு
  20. அருமையான கருத்துகள்..! என் ஐயப்பாட்டைப் போக்கும் ஆழ்ந்த வரிகள். ட்யூஷன் வாத்தியார் இளவஞ்சிக்கு மனப்பூர்வமான நன்றி.

    பதிலளிநீக்கு
  21. மக்கள்ஸ்,

    தாமதத்திற்கு மன்னிக்க...

    இங்க ஆபீசுல கொஞ்சம் வேலை! புடிச்சிவைச்சு மெறிக்கறாங்க! அதனால எல்லாத்தையும் முடிச்சிட்டு மெதுவா வாரேன்! :)

    பதிலளிநீக்கு
  22. இளவஞ்சியண்ணா,(என்ன பாசமா இருக்கா?)

    பொண்ணு கிடைச்சா ஓ.கே. ஆனா என்னைய மாதிரியான வெறும் பயலுக என்ன பண்றது? ;) ஏதவது எடக்கு மடக்க ஐடியா குடுங்க...புண்ணியமாப் போகும்.

    அப்புறம் நம்ம பிரகாஷோட அதே கேள்விதான். எனக்கும் :(

    பதிலளிநீக்கு
  23. சொல்லுகிறேன்னு தப்பா நெனச்சிக்காதீங்க. எதுக்கும் ஒரு சேஃபுக்கு இவை முழுக்க முழுக்க கல்யாணம் ஆகாதவர்களுக்காக! என்று பெரியதாய் போட்டு விடுங்க. இல்லாட்டி, நம்ம இளவஞ்சி சொல்லிட்டாரேன்னு, காதலை புதுபிக்க, கல்யாணம் கட்டி பத்து வருஷமான பெருசு, பிளேன புடிச்சி
    காலங்கார்த்தால, மாமியார் வீட்டு வாசலை தட்டி, கதவை திறந்தவளிடம் உடம்பு பரவாயில்லையான்னு
    கேட்டாரூன்னு வெச்சிக்குங்க, விளைவுகள் விபரீதமாகி, அதற்கு காரண கர்த்தா நீங்களாகி விடுவீங்க, பார்த்துக்குங்க :-)

    பதிலளிநீக்கு
  24. அண்ணாச்சி.. நீங்க எதுக்கும் அடுத்த பதிவை தனி மெயில்ல அனுப்பிடுங்க.. நீங்க பாட்டுக்கு ஃப்ளைட்டு புடிச்சு போனேன்னு எல்லாம் இங்க பொதுவுல போட்டுட்டீங்க.. (உங்க இமேஜ் தூக்கிருச்சு.. அது வேற .. நற..நற)
    இப்ப அதைய எல்லாரும் படிச்சு.. இதே மாதிரியெல்லாம் எதிர்பார்த்தா.. சாமி, ஐடியா குடுக்கறேங்கிற பேருல சிக்கல்ல வுட்ருவீங்க போலிருக்கே..

    பதிலளிநீக்கு
  25. ப்ரகாஷ்,

    //ஒண்ணு இல்லேன்னா, ஒண்ணரை scroll க்குள்ளே அடங்கற மாதிரி //

    ம்ம்ம்.. அது.. வந்து.. ஹிஹி..

    இப்பவெல்லாம் அஞ்சஸ்பவரு மோட்டரை ஆன் பண்ணாப்பல சும்மா தடதடன்னு கொட்டுது! படிக்கறவங்க என்ன நெனைப்பாங்கன்ற ஒரு வெவரமும் இல்லாம! கொஞ்சம் அட்ஜட்ஸ்ட் செஞ்சுக்கிடுங்க! :)

    ****
    பொன்ஸ்,

    எழுதிட்டு படிக்கறப்ப எனக்கு ஜிரா ஞாபகம்தான் வருது! :( ஆனா என்ன செய்ய? இந்த பத்தி பிரிக்க பழகிட்டேன்! வரி பிரிச்சு எழுததெரியலை! யாராச்சும் எப்படின்னு கொஞ்சம் சொல்லுங்கப்பா! :)

    //போன் மட்டும் தானா? :) //

    மத்ததெல்லாம் என்னன்னு நீங்கதான் சொல்லனும்! :)

    ****
    அனானி,

    //சார்ஜர்ல போட்டுட்டு பேசுறதை //

    அடாடா ஐன்ஸ்டீனா இருக்கீகளேயப்பு! :)

    பதிலளிநீக்கு
  26. வாத்தியாரே...மனசு இளகி கண்ணுல தண்ணி வந்திடுச்சி.... இந்த பதிவோட ஒவ்வொரு வார்த்தையும் கண்ணாலமாகதவர்களுக்கு பொக்கிசம்.
    நெஞ்சில பதிய வச்சுகிட்டேன்...

    கண்ணாலம் ஆன பின்ன வாத்திக்கு நன்றினு ஒரு பதிவை நிச்சயம் போட்டுடறேன்

    பதிலளிநீக்கு
  27. சோழநாடன்,

    // எப்போ வேவு பாக்க ஆரம்பிச்சீங்க :-( // ஹிஹி.. பாம்பின் கால்...

    //ரெண்டு பேட்டரி வச்சுருக்கிறத கவனிக்கலையா // அடடா! Technology is improved soooo much! :)

    ****
    செல்வராஜ்,

    //ஒண்ணு மட்டும் எனக்கு முன்னாடியே தெரியாமப் போச்சேன்னு //

    அப்ப ஒன்னு மட்டும்தான் தெரியலையா? மத்ததெல்லாம் கலக்கீட்டிங்களா?! கையக்கொடுங்க! :)

    ****
    நன்மனம்,

    வருகைக்கு நன்றி!

    ****
    கார்த்திக்,

    //நுணுக்கமாக, இயல்பாக, et all என்று இரு தனி வார்த்தைகளா ?//

    தனித்தனி தாங்க! சொல்லப்போனால் இரண்டும் சற்றே முரண்பட்ட வார்த்தைகள்..

    //இந்த வரிகள் இந்த பதிவை இட்டவரைத்தான் சொல்லுது என்று //

    அவரே பாவம்.. இருந்ததையும் தொலைச்சுட்டு இருக்காரு.. கடுப்பேத்தாதீக... இவரு தொலைச்சதைதான் சொன்னாப்புல.. அங்க என்ன வாங்கிகொடுத்தாருன்னு தெரியலை! :)

    ****
    உதயகுமார்,

    //இதெல்லாம் வயது வந்தவர்களுக்கான தொடர்... //

    அது சரி! ராசாவோட செல்லு பதிவுல நீங்க போட்ட பின்னூட்டம்தான் நீங்க பச்சப்புள்ள என்பதற்கான அக்மார்க் ISI அத்தாட்சி! :)

    பதிலளிநீக்கு
  28. ராசா,
    உங்களை மாதிரி "அரசியல்வாதி" இதுக்கெல்லாம் பயப்பட்டா முடியுமா? உங்க அம்மிணிதான் ப்ளாக்னா கிலோ என்ன விலைன்னு கேட்பாங்கன்னு சொன்னீங்களே!! :)

    இளவஞ்சி,
    ஒண்ணு மட்டும் உறுதி!
    இங்கிட்டு இருக்கிற மக்கள் எல்லாம் நீங்க ப்ளைட்டு புடிச்சு உங்க வீட்டம்மாவைப் பார்த்துட்டு வந்ததைப் படிச்சு ரொம்பத் தான் குழம்பிப் போய்ட்டிருக்காங்க.. எல்லாம் "பின்னூட்டம் போட மாட்டேன்.." அது இதுன்னு சொல்லிட்டு, தெனைக்கும் ஒரு வாட்டி படிச்சு ஒரு லைன் எழுதறாங்க!!! இந்த ஒரு பதிவை மட்டும் வரிக்கு வரி தத்துவங்கள் உள்ள பார்ட்டா எடுத்துகிட்டாங்க போலிருக்கு..

    (நானும் தெனைக்கும் ஒரு வரி எழுதினாலும், என்னை இதுல சேர்க்காதீங்க.. நியாயமில்லாத எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கிடக் கூடாதுன்னு துபாய்ராசா போன பதிவுல போட்டதையும், நீங்க வெளக்கினதையும் நான் இன்னும் நினைவு வச்சிருக்கேன்.:) :) )

    பதிலளிநீக்கு
  29. பொன்ஸ், ஒத்த சிஷ்யை, பொம்பள பிள்ளையா இங்கிட்டு வந்துருக்க. ஒண்ணு மாத்திரம் ஞாபகம்
    வெச்சிக்கோ! "காதலன் கணவன் ஆகலாம். ஆனால் எக்காலத்திலும் கணவன் காதலன் ஆக முடியாது"
    இந்த ஸ்டண்டு எல்லாம் இப்ப எப்படின்னு திருமதி. வாத்தியாரை ஒரு நா பார்த்தா கேட்டுட மாட்டேன்:-)

    பதிலளிநீக்கு
  30. ராசா,

    //நிசம்மா ராத்திரி ப்ளைட் புடிச்சு போனீங்களா?? ம்ம் //

    வேற வழியில்லைங்க! பைக்குல அம்புட்டு தூரம் போறது கொஞ்சம் கஷ்டம்! :)))

    ****
    மாயுரம் சரவணன்.

    //காதல் மன்னன்//

    இதெல்லாம் நெஜமாவே ஓவருங்க! :)

    ****
    மழை ஷ்ரேயா,

    //திருமணத்துக்குப் பிறகு (அவங்களுக்குப் பிடிச்ச மாதிரியான) ஸ்டண்ட் காட்டினீங்களா?//

    ஹிஹி... ஹீரோக்களை எல்லாம் தூரமா இருந்து வெள்ளித்திரைல பார்க்கத்தான் அழகா அம்சமா இருக்கும்! பக்கத்துல வைச்சுப்பார்த்தா "அடடா! இவ்வளவுதானா?"ன்னு ஆகிரும். அதனால இப்பவெல்லாம் எதுவும் எடுபடறதில்லைங்க! :)))

    ****
    ஸ்ரிதரன்,

    //என்னை பத்தி எப்படி கன்டுபிடிசீன்க...// அது சரி! இதெல்லாம் ஒலக உண்மைகளப்பு! :)))

    ****
    பட்டணத்து ராசா,
    //அதுக்குள்ள நல்ல ஸ்டுடண்டா "புள்ள புடிக்க" போனத பத்தி ஒரு அஸைன்மன்ட் எழுதிரலாமுன்னு //

    மொதல்ல அதைச்செய்யுங்க! எல்லாம் தன்னால நடக்கும்! :)

    ****
    SweetVoice,

    வருகைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  31. Prakash, அது என்னா scroll கணக்கு?

    but I agree with you. இவரோட பதிவ படிச்சு முடிச்சு களை(ழை?)ச்சுப் (அடிக்காதீங்க எழுத்துப் பிழைக்கு. வெட்கக்கேடு, தமிழ் மீடியம் வேறு) போறதால எப்பவுமே பின்னூட்டம் போட மாட்டேன். அதிலயும், அதிகமா பின்னூட்டம் வேற இருந்துச்சுன்னா படிக்கிறத பாதிலேயே நிறுத்திடுவேன்.

    இப்பவும் அப்படித்தான். ஒங்க பின்னூட்டத்தோட நிறுத்திட்டதால, அதுக்கு மட்டும் பதில் போடறேன்.

    பதிலளிநீக்கு
  32. சுமா, துபாய் ராசா,

    வருகைக்கு நன்றி!

    ****
    யாத்ரிகன்,

    //இந்த தொடருக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லைனு //

    இதன்மூலம் தாங்கள் கூற விரும்புவது?! :)

    ****
    உதயகுமார்,

    //இதுதான் உங்களோட பிரம்மாஸ்த்திரமா??? //

    அதுவந்து.. ஹிஹி... ஒரு காலத்துல! :)

    ****
    சுகா,

    //எத்தனை கோடி உள்ளூர் செலாவணியை காலி பண்ணீட்டிருக்கீங்க தெரியுமா ! :) //

    இல்லைன்னா மட்டும் நம்ப பயகளுக்கு இதெல்லாம் தெரியாதா? அநியாயமா என்னை மாட்டி விடாதீகப்பு! :)

    ****
    D The Dreamer,

    //அம்மணிய வாழ்க்கை முழுசும் flat ஆகுறாப்புல //

    கல்யாணத்துக்கு அப்பறம் Flat ஆனது நானுங்க! :)

    ****
    ராசா,

    //இப்படி ஒரு சமாச்சாரம் இருக்கா.. //

    ஆனாலும் இப்படி 5 ரூவாய்க்கு நடிக்கச்சொன்னா 5000 ரூவாய்க்கு நடிக்கக்கூடாது! :)))

    ****
    மீனாக்ஸ்,

    //என் ஐயப்பாட்டைப் போக்கும் ஆழ்ந்த வரிகள்//

    இப்போதைக்கு இதை நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்! :)))

    பதிலளிநீக்கு
  33. //அன்னைக்கு நைட்டு ஃப்ளைட் 1:30க்கு பிடிச்சு 3 மணிக்கு அவுக ஊர்ல எறங்கி விடியறவரைக்கும் ஏர்போர்ட்லயே தூங்கிட்டு அப்பறம் ஒரு வண்டியபிடிச்சு 6 மணிக்கா அவுக வீட்டுக்குப்போய்//

    நாங்களும் நிறய இப்படியெல்லாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம். :(

    (btw, that was romantic. :) )

    பதிலளிநீக்கு
  34. மணிகண்டா,

    //ஏதவது எடக்கு மடக்க ஐடியா குடுங்க...புண்ணியமாப் போகும்.//

    இருக்கறவனுக்கு ஒரே ஒரு இடம்! இந்த கமிட்மெண்ட்டு இல்லாதவனுக்கு உலகமெல்லாம் வண்ணக்கோலங்கள்தான்! விதி வர்ற வரைக்கும் இளந்தாரிக வாழ்க்கைய அனுபவிங்கப்பு! :) என்னது? ரொம்ப எடக்கு மடக்கா இருக்கா? நான் கடலைய சொன்னேங்க! :)

    ****
    உஷா,

    படிச்சிட்டு எனக்கு சிரிப்பு தாங்கலை! :)))

    ****
    ராசா,

    //ஐடியா குடுக்கறேங்கிற பேருல சிக்கல்ல வுட்ருவீங்க போலிருக்கே //

    உங்களுக்கு ஐடியாவா?! சாமிக்கே வரம் கொடுக்கற பூசாரி அளவுக்கெல்லாம் நான் இல்லீங்ங்.. :)

    ****
    முத்துகுமரன்,

    //கண்ணாலம் ஆன பின்ன வாத்திக்கு நன்றினு ஒரு பதிவை நிச்சயம் போட்டுடறேன் //

    பார்க்கத்தானே போறேன்! அது பதிவா இல்லை ஸ்கெட்ச்சா அப்படின்னு! :)))

    ****
    பொன்ஸ்,

    நன்றி, மீண்டும் வருக!!! :)

    உங்கள் அனைவரின் வருகைக்கும், கருத்துக்களுக்கும், ஊக்கங்களுக்கும் நன்றி! (யப்பா! மொதல்ல இந்த பின்னூட்டம் போடறதுக்குன்னு ஒரு மொசினு கண்டுபுடிக்கனும் போல!)

    பதிலளிநீக்கு
  35. scroll கணக்கு குழம்பினதுக்குக் காரணம், கேள்விய தப்பா புரிஞ்சுக்கிட்டதுதான். ப்ரகாஷ், புரிஞ்சிருச்சு.

    பதிலளிநீக்கு
  36. உஷா,

    //"காதலன் கணவன் ஆகலாம். ஆனால் எக்காலத்திலும் கணவன் காதலன் ஆக முடியாது"//

    நெத்தியடி! இருந்தாலும் இதைப்பத்தி எனக்கு தெரிஞ்சதை பின்னாடி சொல்லறேன்! அதுக்குள்ள பொன்ஸ்சை இப்படி பயமுறுத்தாதீக! :)

    ****
    பிரேமலதா,

    //நாங்களும் நிறய இப்படியெல்லாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம். :( //

    அடேடே! என்ன ஆச்சரியம்!!! இந்த மாதிரி நாங்களும் நிறைய செய்து ஏமாந்திருக்கறோம்!

    (அடடா! இளவஞ்சி!! பொம்பளையாளுக எல்லாம் இந்த மாதிரி மடக்கறாங்களே! வாய வைச்சுக்கிட்டு சும்மா இல்லாம, இப்படியா சொந்த செலவுல சூனியம் வைச்சுப்ப?! )

    பதிலளிநீக்கு
  37. //ஒத்த சிஷ்யை, பொம்பள பிள்ளையா இங்கிட்டு வந்துருக்க//

    //நன்றி, மீண்டும் வருக!!! :)//

    இப்போ வரணும்ங்கிறீங்களா? பொட்டிய தூக்கிகிட்டு கிளம்பச்சொல்றீங்களா? ன்னு சுத்தமா புரியலை.. ஆனா இந்தச் சித்தாந்தம் மட்டும் புரிஞ்சிடுச்சு:
    //"காதலன் கணவன் ஆகலாம். ஆனால் எக்காலத்திலும் கணவன் காதலன் ஆக முடியாது"//

    //இந்த ஸ்டண்டு எல்லாம் இப்ப எப்படின்னு திருமதி. வாத்தியாரை //

    ஆமாம் அக்கா, அதென்ன தனியா வேற கேக்கணுமா? இந்நேரத்துக்கு இத்தனி பின்னூட்டத்துக்கும் பதில் போட்டுக்கிட்டு இருக்காரே, இதிலிருந்தே ஏதோ "கரண்டி வளையற நிகழ்வுக்காக" கணினியைப் பிடிச்சிகிட்டு... - ஆகா, உதயகுமார் ஸ்டைல்ல, எனக்கில்லை.. எனக்கில்லை...எனக்குப் புரியலை!! ..

    பதிலளிநீக்கு
  38. //அடேடே! என்ன ஆச்சரியம்!!! இந்த மாதிரி நாங்களும் நிறைய செய்து ஏமாந்திருக்கறோம்!//

    :)

    //இப்படியா சொந்த செலவுல சூனியம் வைச்சுப்ப?! //

    LOL. :))

    பதிலளிநீக்கு
  39. இளவஞ்சி வாத்தியார்,

    //தனித்தனி தாங்க! சொல்லப்போனால் இரண்டும் சற்றே முரண்பட்ட வார்த்தைகள்..

    இந்த வார்த்தைகளில் உள்ள வித்தியாசத்தை நன்கு உணர்ந்தே அப்படி கேட்டேன்.. இந்த வார்த்தைகளுக்கு என்னுடைய புரிதல்கள் இதுதான்

    //இயல்பாக

    இது நம்ம எப்பவும் போல இருப்பது..அதாவது நம்முடைய 26 - 27 வயது பாரம்பரிய பழக்க வழக்கங்கள்.

    //நுணுக்கமாக

    இது வழக்கத்திலிருந்து மாறி, ஆனாலும் இதுதான் என்னுடய நேச்சுரல் பழக்கம் என்பது போல் சீன் போடுவது..

    //நுணுக்கமான இயல்போடு

    இது ஜோடி போட்டுகொண்டு சுத்தும் பொண்ணோ இல்ல பையனோ நடந்துகொள்ளும் விதம்..துன்பத்தின் வாயில் படியில் இருப்பதை அறியாதவர்கள்.

    பதிலளிநீக்கு
  40. >> என்னதான் சுயநினைவோட இல்லாம காதல் தேன்குடிச்ச கருவண்டாட்டம் கிர்ரடிச்சுக்கிடந்தாலும் உள்ளுணர்வு சொல்லறதுக்கேப்ப ஆங்காங்கே அப்டி அப்டி, இன்னின்னிக்கு இப்டி இப்டி அப்படின்னு ஒரு லெவலா, ஒரு சைசா, ஒரு தினுசா, ஒரு குன்சாவா உண்மைகளை சொல்லியும் சொல்லாம சொல்லறது ஒருவகை! >>

    அது! ;)

    >> அவுக நம்மை விட வெவரமாத்தான் இருப்பாக! நீங்கள் சொல்வதைவிடவும் அதிகமாக புரிந்து கொள்வார்கள்! மேலாக உணர்துகொள்வார்கள்! >>

    ஆத்தீ! இம்புட்டு நாளும் எதுக்கப்பு இங்ஙன பிரம்மச்சாரிகள்ளால் சுத்துறாகன்னு வெளங்காம முழிச்சுக்கெடந்தேன்! கோளாறாவுல்ல எளவஞ்சி ரோசனை சொல்லுதாக!

    தமிழ்மண 'மெல் ஜிப்சன்' இளவஞ்சி வாழ்க! :)

    பதிலளிநீக்கு
  41. //தமிழ்மண 'மெல் ஜிப்சன்' இளவஞ்சி வாழ்க! :)//

    அது! ;)

    இளவஞ்சி,

    இது கல்யாணத்துக்குத் தயாரா இருக்கிறவங்களுக்கு குடுக்கிற டிப்ஸ் மாதிரி தெரியலையே. காதலித்துப்பார் வகையறா மாதிரித் தெரியுதே.

    எனிவே, செக்லிஸ்ட் கொடுத்ததற்கு நன்றி. :))

    ---

    Usha: :)))))) :ROFL:

    பதிலளிநீக்கு
  42. //அது சரி! ராசாவோட செல்லு பதிவுல நீங்க போட்ட பின்னூட்டம்தான் நீங்க பச்சப்புள்ள என்பதற்கான அக்மார்க் ISI அத்தாட்சி! :)//

    அதெல்லாம் கேள்வி ஞானம்... நீங்க இப்படி நினைப்பிங்கன்னு தெரிஞ்சிருந்த்தா டிஸ்க்ளெய்மர் போட்டிருப்பேன்...

    பதிலளிநீக்கு
  43. நல்லா இருக்குங்க.. குடிகாரனுக்குத்தான் சரக்கோட மகிம புரியும்பாங்க...

    கல்யாணம் பிக்ஸ் ஆனவனுக்குத் தான் நீங்க சொல்றது புரியும்.

    இப்போதைக்கு என்னைக் கேட்டால், "மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேட்"ன்னு தான் சொல்ல முடியும். இந்தக் கருமத்துல் என்ன தான் இருக்குன்னே புரியலப்பா..

    பதிலளிநீக்கு
  44. சிலபஸ் எல்லாம் சமீபத்துலே மாத்தியிருக்காங்க போல.

    நம்மது 32 வருசப் பழசு.

    புது சிஸ்டத்துக்கு ஏத்தமாதிரி மாறணுமே:-))))

    ம்ம்ம்ம் பாக்கலாம். நாலுநாளில் 32 வருசம் முடியப்போகுது.

    பதிலளிநீக்கு
  45. //"மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேட்"//
    குப்புசாமி, என்ன சொல்றீங்க? நம்ம மதுவால உங்களுக்கு நன்மைன்னு இல்ல நினைச்சிகிட்டு இருந்தேன் :)

    பதிலளிநீக்கு
  46. // சிலபஸ் எல்லாம் சமீபத்துலே மாத்தியிருக்காங்க போல. //

    துளசியக்கா, பாடத்திட்டம் பழசுதான், விளக்க உரைப்புத்தகங்கள்தாம் புதுசு. என்ன, அப்ப விமானவசதி இல்லை இரயில் வண்டிதான். மற்றபடி இப்போ செல்போன் அப்போ பதிவுசெய்து தேவுடுகாத்திருந்து தொலைபேசியே தேவையில்லை என்ற அளவு கத்தி பேச வேண்டும். இப்போ மின்னஞ்சல் அப்போது இந்தியத் தபால் தந்தி துறைதான் இப்போது webcam வசதியுடன் கணினி அப்போது சாதா கருப்பு வெள்ளைப் புகைப்படங்களுடன் இனிய நினைவுகள்தாம்

    :-)))

    // ம்ம்ம்ம் பாக்கலாம். நாலுநாளில் 32 வருசம் முடியப்போகுது //

    அட்வான்ஸ் வாழ்த்துகள் அக்கா

    பதிலளிநீக்கு
  47. கார்த்திக்,

    அடடா, போற போக்குல ரெண்டு வார்த்தைய போட்டா அதுக்கு இப்படியா கொழப்பிக்கறது?

    உங்களுக்கு ஃபுட்பால்ல சின்ன வயசுல இருந்து ஆர்வம் இருக்கு, ரொம்ப பிடிக்கும்னா அது உங்க இயல்பு! ஒலகக்கோப்பைக்கு விளையாடப்போற அத்தனை டீம், விளையாடறவுக, ஷெட்யூல்னு அத்தனையும் உங்க விரல் நுனில வைச்சிருக்கறீங்கன்னா, நீங்க அந்த விளையாட்டை அத்தனை நுணுக்கமா ரசிக்கறீங்கன்னு அர்த்தம்!

    ஃபுட்பாலை விரும்பும் உங்கள் இயல்புடன் அந்த நுணுக்கமாக ரசனை சேரும்பொழுது உங்களுக்கு எத்தனை ஆனத்தம் கிடைக்கிறது! அதுபோல இல்லறவாழ்க்கைய அனுபவிக்கனும்னு சொன்னா... துன்பம்.. வயில்படின்னுகிட்டு!! உங்க பேரு கார்த்திக்கா சித்தார்த்தனா?! (ஸ்ஸப்பா! ஒப்பேத்திட்டேன்! :) )

    ****
    neo,

    //தமிழ்மண 'மெல் ஜிப்சன்' //

    ம்ம்ம்... எல்லாரும் ஒரு முடிவோடதான் இருக்கீக போல!? எனக்கென்னவோ எங்க தல வடிவேலுதான் ஞாபகத்துக்கு வர்றாப்புல :)))

    ****
    மதி,

    //எனிவே, செக்லிஸ்ட் கொடுத்ததற்கு நன்றி. :)) //

    செக்லிஸ்டுக்கான உங்கள் அப்ரூவலுக்கு நன்றி! :)

    ****
    உதய்.

    //அதெல்லாம் கேள்வி ஞானம்... //

    கேள்வி ஞானத்துக்கே இப்படியா?! கேட்ட எடத்தோட அட்ரசை கொஞ்சம் கொடும் ஓய்! :)))

    ****
    Kuppusamy Chellamuthu,

    //இந்தக் கருமத்துல் என்ன தான் இருக்குன்னே புரியலப்பா//

    அதேதானுங்! தெரிஞ்சிட்டா சப்புன்னு போயிரும்! வாழ்க்க முச்சூடும் தேடுவதில் தான் இருக்கு சுகம்!

    (பொன்ஸ்.. நோட் பண்ணுங்க.. நோட் பண்ணுங்க.. நாளபின்ன நானெல்லாம் கார்ப்பரேட் லெவல்ல போயிட்டா இதெல்லாம் ஃப்ரியா கிடைக்காது! :) )

    பதிலளிநீக்கு
  48. செல்வநாயகி,

    வருகைக்கு நன்றி!

    ****
    துளசியக்கா,

    //நம்மது 32 வருசப் பழசு.//

    சொல்லப்போனா இதெல்லாம் நீங்கதான் எழுதனும்! தலையிருக்க வால் ஆடிக்கிட்டு இருக்கேன்! :)))

    அக்காவுக்கும், கோபால் அண்ணாச்சிக்கும் என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!!!

    ****
    லதா,

    //துளசியக்கா, பாடத்திட்டம் பழசுதான், விளக்க உரைப்புத்தகங்கள்தாம் புதுசு. //

    அதே.. அதே... :)

    வருகைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  49. //(பொன்ஸ்.. நோட் பண்ணுங்க.. நோட் பண்ணுங்க.. நாளபின்ன நானெல்லாம் கார்ப்பரேட் லெவல்ல போயிட்டா இதெல்லாம் ஃப்ரியா கிடைக்காது! :) )
    //
    அரைக் குயர் நோட்டு பூரா நோட்டு பண்ணியாச்சு.. ஆமாம், குப்புசாமிக்கும், கார்த்திக்கும் ஒரே பின்னூட்டத்துல பதில் சொல்றீங்களே, இதை எடுத்துகிட்டு, மறுபடி கார்த்திக் புத்தர் மாதிரி பேசப் போறாரு!!! பார்த்து :)

    அதெப்படி, கல்யாணமாம் கல்யாணம்னு பேர்வச்சிட்டு, இப்படி ஆசிரமத்துல பேசற நிலையில்லாத வாழ்க்கையின் சனாதன தத்துவங்களையும் புட்டுபுட்டு வைக்கிறீங்களோ!!

    பதிலளிநீக்கு
  50. இளவஞ்சி, பாதி ராத்திரில பிளேன் பிடிச்சிப் போய் இறங்கி, நலம் விசாரித்த காதல் கதை காதில் விழுந்தவுடன், உங்க வீட்டில் - ஐ மீன் உங்க பெற்றவர்கள் வீட்டில் பூகம்பம் வெடிச்சிருக்கணுமே :-)))), சிஷ்ய பிள்ளைங்களுக்கு நல்லது கெட்டது ரெண்டும் சொல்லிக்கொடுங்க
    சார்!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  51. இளவஞ்சி, உங்கள் பதிவை வாசித்தபின் இப்பவே காதலிச்சுப் பார்க்கவேண்டும் போல கை/கால் எல்லாம் உதறுகிறது :-)

    பதிலளிநீக்கு
  52. பொன்ஸ்,

    //சனாதன தத்துவங்களையும் புட்டுபுட்டு வைக்கிறீங்களோ!! //

    அதுவந்து... எப்படின்னா... மாசத்துல கொஞ்சநாள்... பவுர்ணமி நெருங்குனா... ஹிஹி...

    ****
    உஷா,

    //உங்க பெற்றவர்கள் வீட்டில் பூகம்பம் வெடிச்சிருக்கணுமே :-))))//

    நீங்க வேற! "நம்ம பையனுக்கா லவ்வு வந்துடுச்சு? அப்போ நெசமாவே மனுசனா மாறிட்டானா?"ன்னு அவங்க அடைந்த பேருவகையை எப்படிச்சொல்ல? :)))

    எல்லா இடத்திலும் ஒரே மாதிரி இருக்காதுங்க! சிறுசுக சந்தோசமா இருக்கறதை பார்த்து சந்தோசமடைகிற பெருசுகளும் இருக்காங்க!

    பதிலளிநீக்கு
  53. டிசே தமிழன்,

    // இப்பவே காதலிச்சுப் பார்க்கவேண்டும் போல கை/கால் எல்லாம் உதறுகிறது :-) //

    செய்யுங்க! ஏதாவது ஏடாகூடமா போனா ஒரு தனிமடல் மட்டும் அனுப்புங்க! ;)

    பதிலளிநீக்கு
  54. // செய்யுங்க! ஏதாவது ஏடாகூடமா போனா ஒரு தனிமடல் மட்டும் அனுப்புங்க! ;) //

    ஏனுங்க டிசே, ஒரு பதிவாகவும் போட்டா நாங்கள்லாம் ஜாக்ரதையாக இருப்போமில்ல ?
    :-)

    பதிலளிநீக்கு
  55. ANNA, THEIVAME.. ROMMBA LATEA ONGA PATHIVA PADICHALUM, ORU NAAL MULUKKA THAKKATHA IRUNTHUCHU.. APPURUM, HONEY MOONA MISS PANIYATHARKA ROMBA NALL VALI ENAKKU IRUNTHATHE NEENGALUM SOLLITHENNGA..

    SUPER......PATHIVU..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு