முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

லூசுப்பய சச்சின்!

Image hosted by Photobucket.com
இது விமரிசனம் இல்லைங்க.. வயித்தெரிச்சலு...

கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாம். TVல தான் சீரியல் எல்லாத்துலயும் ஆம்பளையும் பொம்பளையும் கூடிக்கூடி அழுவறாங்கன்னு நொந்துபோயி ஒரு படத்துக்கு போலாம்னு நெனைச்சு நம்ப இளயதளபதி படமாச்சே அப்படின்னு எனக்கும் பொண்டாட்டிக்கும் சேர்த்து 120 ரூபாயிக்கு டிக்கெட்டு எடுத்து போனா... நம்ப பொழப்பு நாறப்பொழப்பு ஆகிடுச்சுங்க!

கடைசி வரைக்கும் ஒரு 80 பக்க நோட்டகூட காட்டாம ஒரு காலேஜ் கதை. அதுவும் எங்க? இத்தனை நாள் நம்ப ஹீரோங்க எல்லாம் ஆடிப்பாடறதுக்கு மட்டும் போன ஊட்டில. விஜயும் ஜிலினியா டிசோசாவும்(பேர எழுதறதுக்குள்ள ஜன்னி வந்துடும் போல) படம் முழுக்க ஒரு ஜோல்னாப்பைய தோல்ல தொங்கவிட்டுகிட்டு இருக்காங்க. அதுக்குள்ள என்ன வச்சிருக்காங்களோ அவங்களுக்கே வெளிச்சம். நாயகி மழைல நனையற அழகைப்பார்த்து ஹீரோக்கும், ஹீரோ குடை மடக்கற வீரத்தைப்பார்த்து ஹீரோயினுக்கும் புடிச்சுபோயிடுதாம். இந்த காலத்து காலேஜ் பசங்க பார்த்தா பின்னாடி சிரிச்சிட்டு போவாங்க!

படம் ஆரம்பிச்சதுல இருந்து கடைசி சீன்ல கோவை ஏர்போர்ட் வரை பின்புலத்துல பைப்புல பொகை பொகையா உடறாங்க... அதை நாம பனிமூட்டம்னு நினைச்சுக்கனுமாம். டெக்னாலஜி எவ்வளவோ முன்னேறியிருக்கற இப்பத்த சினிபீல்டுல இதகூட கவனிக்காம ஒரு ஒளிப்பதிவாளரு! பாவம் சம்பளம் குடுக்காத கடுப்புல இப்படி கவுத்துட்டாரா என்னன்னு தெரியலை.
அம்பதை தாண்டுன பெருசுங்க எல்லாம் இளவட்டமா நடிக்கறப்ப வடிவேலு காலேஜ் பையனா நடிக்கறது தப்பில்லைதான். அதுக்காக லாஜிக்கே இல்லாம ஒரு வெளக்கம் குடுக்கறாங்க பாருங்க. வர்ற எரிச்சல்ல முன்னாடி உக்காந்த்திருக்கறவன் முதுகை பெராண்டலாம்னா மொத்தமே ஒரு 40 பேருதான் தியேட்டருல.

அந்த காலத்துல அனுராதா, ஜெயமாலினி எல்லாம் திடீர்னு ஒரு டான்சுக்கு வருவாங்களே.. அதுபோல பிபாசா பாசு. சச்சினை கட்டிபுடிச்சி உச்சிமோந்து பொரண்டு உருண்டு காதலோட மேன்மைய ஹீரோயினுக்கு சொல்லறாங்க... இதுக்கு மேலசொன்ன கவர்ச்சி டான்சு லாஜிக்கே 100 மடங்கு தேவலாம்.

என் கேள்வியெல்லாம் இதுதாங்க.

இந்த படத்துல நடிக்கறதுக்கு கில்லி கொடுத்த விஜய் தேவையா?

ஆனா ஒன்னு மறுக்க முடியாதுங்க. விஜய்க்கு நல்ல ட்ரெசிங்சென்ஸ்

நிற்க:(ஹிஹி.. இது எழுதாம என்னால முடியாதுங்க. படம் முழுக்க ஒரு சீன்ல கூட ஒழுங்கா நின்னு நடிக்காம இப்படியும் அப்படியும் ஆடிக்கிட்டே இருக்கற சச்சினை பார்த்தா லூசுப்பயன்னுதான் தோணுது. ஆனா இதுக்கு டைரக்டரோட விளக்கம் என்ன தெரியுங்களா. ஹீரோ எப்பவும் உற்சாகம் கொப்பளிக்க திரியற ஒரு பார்ட்டியாம்!)

போடாங் கோ!!!

கருத்துகள்

  1. உங்கட இந்த விமர்சனத்தவிட படம் சிரிப்பத் தராது.

    பதிலளிநீக்கு
  2. நீங்களும் பார்த்துட்டீங்களா?... அய்யா.. இப்பத்தான் ஒரு நிம்மதி.. நம்ம மட்டும் தான் கூமுட்டைத்தனமா போயி உக்காந்தோம்னு நினைச்சேன்.. :-)

    பதிலளிநீக்கு
  3. there are some remarkable similarities with your and my review (http:\\penathal.blogspot.com)

    Any day, your review is more humourous.

    பதிலளிநீக்கு
  4. வசந்தன், ராசா, சுரேஷ்,

    உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

    இது நெஜமாவே பொலம்பலு தாங்க.. விமரிசனம் இல்ல. அதுக்கெல்லாம் நமக்கு அறிவு பத்தாது. :)

    பதிலளிநீக்கு
  5. "கில்லி கொடுத்த விஜய் "
    -ஆனாலும், உங்களுக்கு விஜய் மேல இப்படி ஒரு தப்பான எண்ணம் இருக்கக்கூடாதுங்க!

    பதிலளிநீக்கு
  6. இளவஞ்சி,

    நல்ல தலைப்பு, போங்க !!!!!

    தலைப்பைப் பார்த்துட்டு "என்னடா நம்ம தல சச்சின் டெண்டுல்கரை திட்றாரு" ன்னு சும்மா கோவமா வந்தேங்க !!!! வந்து படிச்சு பார்த்தாக்க, நம்மள லூசு ஆக்கிட்டீங்களே :)

    நல்ல நகைச்சுவையா எழுதியிருக்கீங்க, பாராட்டுக்கள்.

    என்றென்றும் அன்புடன்
    பாலா

    பதிலளிநீக்கு
  7. ரசனைகள் பல விதம். பொதுவா விஜய் படம் பிடிக்காத என் பல நண்பர்களுக்கும் இந்தப் படம் ரொம்பப் படித்திருந்த்து. நானும் நண்பர்களும் அதிக முறை பார்த்த படமும் இது தான். நானே ஒரு 15 தடவைக்கு மேல பார்த்திருப்பேன். மொழி தெரியாத என் இந்தோனேசிய நண்பர்களும் கூட ரசித்துப் பார்த்தார்கள்.

    இந்த மாதிரி படங்களில் logic எல்லாம் பார்ப்பதில் பொருள் இல்லை

    பதிலளிநீக்கு
  8. //posted by இளவஞ்சி at 1:12 PM on May 6, 2005 //

    என்ன வாத்தி நடக்குது இங்கே? 2 வருஷத்துக்கு முன்னாடி எழுதினது இன்னிக்கு(May 09 2007) தமிழ்மணத்துல வருது? என்ன மாயமோ? என்ன மர்மமோ? ஒரு வேளை ரொம்ப சூடான இடுகைன்னு ரிப்பீட்டு ஆவுதா?

    பதிலளிநீக்கு
  9. விஜய் படத்துலேயே புடிச்ச படம் அப்படின்னா அது வசீகரா, அடுத்தது சச்சின். ஏன் இந்த 2 படமுமே டப்பாக்குள்ள சீக்கிரம் போச்சுன்னு தெரியல.

    பதிலளிநீக்கு
  10. //இந்த மாதிரி படங்களில் logic எல்லாம் பார்ப்பதில் பொருள் இல்லை//

    ஏதோ உங்கள மாதிரி நாலு நல்லவங்க இருக்கர வரைக்கும் தமிழ் சினிமா நல்லா இருக்கும் :-)

    பதிலளிநீக்கு
  11. ரவிசங்கர்,

    படத்துல லாஜிக் தேடறதா இருந்திருந்தா நான் விஜய் படத்துக்கு ஏன் போறேன்? கலக்கற மசாலாவையாவது சரியா கலக்கலையேங்கற பொலம்பல் தான் :)

    ஷ்யாம், இளா வருகைக்கு நன்றி!

    இளா,

    // 2 வருஷத்துக்கு முன்னாடி எழுதினது இன்னிக்கு(May 09 2007) தமிழ்மணத்துல வருது? என்ன மாயமோ? என்ன மர்மமோ? //

    எனக்கும் புரியலையே அய்யா! பின்னூட்டத்தை அனுமதித்தேன். பார்த்தா பதிவே வெளிக் கெளம்பியிருக்கு!!! யார் வேண்டுமானாலும் பதிவை தமிழ்மணத்தில் இணைக்கலாம் போல!

    என்னை திரும்ப பதிவுலகுக்கு இழுக்க நடக்கும் சதி இது என்பதினை ஆணித்தரமாக கூறிக்கொள்கிறேன்! ஹிஹி...

    பதிலளிநீக்கு
  12. யோவ் இன்னாங்கைய்யா விளாயாடுறீங்களா...

    "இப்போ புதுசா ஒரு பையன் கிரிக்கெட்டுல வந்திருக்கான் ரொம்ப நல்லா ஃபீல்டிங் பண்றான்...அவனுக்கு பிரைட் ஃப்யூச்சர் இருக்கு...பேரு கூட ஏதோ அசாருதீன்னு சொன்னாங்க..." டயலாக் தான் நியாபகத்துக்கு வருது. என்ன ஆச்சு டெக்னாலஜிக்கு...மே 6 மட்டும் (தலைகீழா போட்டு) கணக்குல எடுத்திக்கிச்சா?

    பதிலளிநீக்கு
  13. // இளவஞ்சி zei...

    என்னை திரும்ப பதிவுலகுக்கு இழுக்க நடக்கும் சதி இது என்பதினை ஆணித்தரமாக கூறிக்கொள்கிறேன்! ஹிஹி... //

    ஆணித்தரமாச் சொன்னாலும் ஆடித்தரமாச் சொன்னாலும்...உங்களைப் பதிவுலகத்துக்குள்ள இழுக்குற சதி வெற்றி பெற உளப்பூர்வமாகப் பாடுபடுவேன் என்று உறுதி கூறுகிறேன்.

    பதிலளிநீக்கு
  14. //உங்களைப் பதிவுலகத்துக்குள்ள இழுக்குற சதி வெற்றி பெற உளப்பூர்வமாகப் பாடுபடுவேன் என்று உறுதி கூறுகிறேன்.//

    நானும் ஜிரா கட்சி........

    பதிலளிநீக்கு
  15. இன்னைக்கு தான் புது ப்ளாகருக்கு மாறினீங்களா ? என்னுடைய பழைய பதிவும் இது மாதிரி தமிழ்மணத்துல இன்றைய பதிவுகள் பகுதியில வந்திருக்கு

    உங்கள் பதிவும் இன்றைய பதிவுகள் பகுதியில இருக்கு ...

    பதிலளிநீக்கு
  16. // 2 வருஷத்துக்கு முன்னாடி எழுதினது இன்னிக்கு(May 09 2007) தமிழ்மணத்துல வருது? என்ன மாயமோ? என்ன மர்மமோ? //

    நான்கூட போஸ்ட் போட மேட்டர் கிடைக்காததால சச்சின் படமெல்லாம் பார்த்து எளுத ஆரம்பிச்சிட்டீங்கன்னு நினைச்சேன்.. நான் எளுதறன்ல, புலம்பி, ரெண்டுபேர் என்னைத்தேத்துறதுக்கு ஏற்பாடு பண்ணி, அதுமூலமா இன்னும் ரெண்டு பதிவுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன்ல. :-D

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதிவுகளாராய்ச்சி மையத்தில் சுப்பனும் குப்பனும்...

"இந்த முறைதான் மழை பெய்ஞ்சும் கெடுத்து, பெய்யாமலும் கெடுத்து பொழப்பு நாறிடுச்சே! அடுத்தமுறையாவது ஏதாவது வீரிய விதைகளா வாங்கி நவீன முறையில நாத்து பதிஞ்ச்சா நல்ல வெளைச்சல் பார்க்கலாமே"ங்கற நப்பாசையில குப்பன், ஊருக்குள்ள பார்க்க படிச்சவரு மாதிரி இருக்கற, எப்பப்பாரு டைப்படிக்கற மிசினு மாதிரியே இருக்கற டீவி பொட்டில தமிழ்ல தட்டிக்கிட்டு இருக்கற ஓராளை போய் பார்த்தாப்புல! விசயம் தெரிஞ்சவரா இருப்பாரு போலன்னு நம்பி கோக்கு மாக்கா இருந்த அந்த ஆளுகிட்ட போயி கேட்டதுல அவரு நாத்து 'பதிய'றதை 'பதிவு' பதியறதுனு புரிஞ்சுக்கிட்டு "பதிவுகளாராய்ச்சி மையத்"தோட அட்ரசை குடுத்து அங்க நம்மூரு ஆளு சுப்பன்னு ஒருத்தரு இருக்காப்புலன்னும் சொல்லி அனுப்பிச்சிட்டாரு! நம்மாளுக்கு படிக்கத் தெரியாதுன்னாலும் அங்க இங்க கேட்டு ஒரு வழியா கண்டுபுடிச்சி போய்டாப்புல.. **** சுப்பன்: அடடே குப்பா! வாப்பா வா! எப்படி இருக்க? குப்பன்: எனக்கென்ன கேடு?! நல்லாத்தான் இருக்கேன்! இந்த நாத்து பதியற விசயமா.. சுப்பன்: அடப்பாவி! யாருப்பா உனக்கு இந்த அட்ரசை கொடுத்தது? எனக்குத்தான் விதி.. இங்க ...

இருத்தலியம் (அ) சுயபீத்தல்கள்

வா ங்கப்பு... வருசம் ஒருக்கா தீவாளிக்கு எங்கூட்டுல இட்லிக்கு போட்டிருக்கோம்கற மாதிரி நீயும் வருசத்துக்கு ஒருக்கா ஒரே ஒரு ”உள்ளேன் அய்யா”பதிவெழுதறயே... உனக்கு வெக்கமா இல்லே இளவஞ்சின்னு தானே கேக்கறீங்க? எழுதுனா என்னங்க.. பதிவுகளைப் படிச்சா என்னங்க.. வலைப்பதிவரு பதிவரு தான். பதிவுலகமும் ஒன்னும் மாறிடலை. அப்படியே தானே இருக்கு! என்னதான் இருந்தாலும் பதிவு போடலாம்னு தோணினா எழுத மேட்டரு வேணாமா? அதான் நானே என்னை மேட்டராகி வழக்கம்போல... கொசுவத்தி.... ஹிஹி... ***** போனவருசம் புத்தக கண்காட்சிக்குப் போய் 6 மணிநேரம் சுத்திசுத்தி வந்தேன். பெரியார் ஒரு பார்வைல இருந்து சாருவோட 10 புத்தகக்கட்டைத் தொட்டு சூனியம் வைச்சுக்காம ஜாக்கிரதைய தள்ளி நடந்து, நம்ப அய்யனார் புஸ்தகம் அட்டையை நின்னு ரசிச்சது வரைக்கும் செஞ்சு ஏறக்குறைய எல்லா பதிப்பகத்துலையும் பெரண்டு வந்தேன். துளசியக்கா பூனைக்குட்டி புத்தகத்தைக்கூட அங்கனயே நின்னு கால்வாசி படிச்சேன். கடைசியா என்ன வாங்குனேன்னா கேக்கறீங்க? வெளில கேண்டீன்ல சூடா மசால்தோசையும் காப்பியும்! ஆனா ஏன் ஒரு புத்தகம்கூட வாங்கத் தோணலைன்னு பயங்கற ஃபீலிங்கப் போச்சுங...

டக்கரு டக்கரு மக்கள்ஸ்...

வருத்தம் தான் எனக்கு. போன நாடுகளில் எல்லாம் தமிழன் கூட்டாக மூனுநாள் ஒரு செயலை சேர்ந்து செய்யமுடியுமான்னு கேட்ட மத்த மொழிகாரனுக முன்னாடி தலைகுனிஞ்சவந்தான். ஊருக்கு நாலு தமிழ்சங்கம் வைத்து போட்டிபோட்டு இயல் இசை நாடகம் வளர்க்கும் மக்கள்னு அவங்க சிரிக்கறப்ப செம கடுப்ஸ் ஆனவந்தான். அவங்களை ஜெயிக்கறதுக்கு ”முலாயம் எல்லாம் மேட்டராய்யா? எங்க முதல்வரையே 73 நாள் யார் கண்ணுலயும் காட்டாம வைச்ச தமிழ்மக்கள்டே”ன்னு தமாசுக்கு சவடாலடிச்சந்தான். இருந்தாலும் பொங்கலின் போது அவனுங்க முன்னாடி நிஜமாகவே பெருமையாக நெஞ்சம் நிமிர்த்தி சொல்ல இந்த சல்லிக்கட்டு போராட்டம் நடந்த விதம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. தினந்தினம் கூடும் கூட்டத்தையும் அதன் ஒழுங்கமைவையும் சுயகட்டுப்பாடுகளையும் அவர்கள் பார்த்துப்பார்த்து வாயைப்பிளந்து மாய்ந்து போனார்கள். இப்படியும் ஒரு போராட்டம் இந்தியாவில் சாத்தியமா அதுவும் கல்வியகங்கள் மோல்டு செய்து பிதுக்கித்தள்ளும் இளையோர்கொண்டு என்று. மூன்றாம் நாளில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் வெளிவர நிஜமாகவே இந்த மக்கா ஆச்சரியத்தில் வாயடைச்சு நின்னானுக. சரி விடுங்க. எல்லாம் ஏழுநாளைக்குதானே. அதான் ...