முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இருவகை இந்தியா

நினைவு தெரிந்த நாளில் இருந்து எனக்கு தெரிந்த இந்தியா என்றால் அது கீழே உள்ளது தான். எந்த நாட்டிற்க்கும் இல்லாத அமைப்பாய் ஒரு அன்னையின் உருவகமாக இரு கைகளையும் நீட்டி வாரியணைக்க அழைக்கும் படியாய் இருக்கும்.


Source :http://www.indempan.org/image/india-map.jpg

ஒவ்வொரு நாட்டும் ஒவ்வொரு இந்தியா இப்போது. அன்னாட்டுக்கும் இந்தியாவுக்கும் உள்ள அரசியல் உறவுகளைப்பொறுத்து!


Source: http://www.infoplease.com/atlas/country/india.html

ஒரு நாட்டின் அதிகாரப்பூர்வ வரைபடத்தையே மற்றநாடுகள் பயன்படுத்தவேண்டும் என்ற வரையரைகள், சட்டதிட்டங்கள் ஏதாவது உள்ளதா?

ம்... என்னவாயிருந்தாலும் தலையில்லாத தாயைப்பார்க்க கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது!

கருத்துகள்

  1. 'ஆட்டுத்தாடி' இந்தியா என்று வலைப்பதிவில்தான் எங்கோ படித்த ஞாபகம்.

    பதிலளிநீக்கு
  2. தலை இல்லா நிலை, தாயின் தலையெழுத்தாகிவிட்டதோ?

    பதிலளிநீக்கு
  3. //ஒரு நாட்டின் அதிகாரப்பூர்வ வரைபடத்தையே மற்றநாடுகள் பயன்படுத்தவேண்டும் என்ற வரையரைகள், சட்டதிட்டங்கள் ஏதாவது உள்ளதா?//


    இளவஞ்சி,
    வருத்தப்படாதீங்க நாம தலைய இழந்து ரொம்ப நாளாச்சு.

    நமது அதிகாரபூர்வ மத்திய அரசாங்க தேர்தல் ஆணையத்தின் J&K Assembly Constituencies க்கான வரைபடமே அவ்வாறுதான் உள்ளது. இது maps.com -ன் தவறு அல்ல.

    உண்மயைத்தான் அவர்கள் சொல்கிறார்கள்.

    பார்க்க:
    http://archive.eci.gov.in/Septse2002/background/J&K.htm

    பதிலளிநீக்கு
  4. தலையின் வலது பகுதி:
    "Borders of Kashmir are in dispute. India,Pakistan and China have differing claims"
    நமது தேர்தல் ஆணையத்தின் ஆவணப்படி அது நமக்குச் சொந்தமானதுதான்...ஆனால் maps.com சொல்வது போல் அதற்கு நம் பங்காளிகளும் சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  5. கசப்பான உண்மை, மற்ற நாடுகளின் பார்வையில் கஷ்மீர் ஒரு ப்ரச்சினைக்குரிய பகுதி. சில வருடங்களுக்கு முன், மைக்ரோஸாப்ட் நம்மூருக்கு அனுப்பிய ஆன்கார்ட்டா (MSN Encarta)CDயில (இல்ல வேற என்சைக்ளோபீடியாவான்னு ஞாபகம் இல்ல) இதே மாதிரி படத்த போட்டிருந்தாங்க. அப்போ நடந்த ஆர்ப்பாட்டத்துனால, இந்தியாவுக்கு அனுப்பின CDயில மட்டும் மாற்றினார்கள்.

    இதைவிட முக்கியமானது,

    1. POKயில உள்ள கில்ஜிட் மற்றும் வடக்குப் பகுதிகள் (Northen Areas) எப்போதோ பாக்-குடன் இணைக்கப்பட்டுவிட்டன.

    2. 62-ஆன் ஆண்டு போருக்கான முக்கிய காரணம். வடகிழக்கு பக்கமுள்ள அக்சாய் சின் (Aksai Chin) சீனா எடுத்துக்கொண்டது.

    பதிலளிநீக்கு
  6. காஷ்மீரில் பாதி நம்மிடம் இல்லை என்பதை கல்லூரி சென்ற பின் தான் தெரிந்து கொண்டேன். இந்த உண்மையை நம்மிடமிருந்து மறைக்கும் வண்ணம் பள்ளிகளில் நமக்கு பாடம் சொல்லித்தருவது கண்டனத்திற்குறியது. இப்படி போலி வரை படம் போட்டுத்தான் நாட்டுப் பற்றை வளர்க்க வேண்டுமா என்ன?

    பதிலளிநீக்கு
  7. endless number of these wonderful finds, what with the Internet being a vast network of constantly evolving ideas and all!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதிவுகளாராய்ச்சி மையத்தில் சுப்பனும் குப்பனும்...

"இந்த முறைதான் மழை பெய்ஞ்சும் கெடுத்து, பெய்யாமலும் கெடுத்து பொழப்பு நாறிடுச்சே! அடுத்தமுறையாவது ஏதாவது வீரிய விதைகளா வாங்கி நவீன முறையில நாத்து பதிஞ்ச்சா நல்ல வெளைச்சல் பார்க்கலாமே"ங்கற நப்பாசையில குப்பன், ஊருக்குள்ள பார்க்க படிச்சவரு மாதிரி இருக்கற, எப்பப்பாரு டைப்படிக்கற மிசினு மாதிரியே இருக்கற டீவி பொட்டில தமிழ்ல தட்டிக்கிட்டு இருக்கற ஓராளை போய் பார்த்தாப்புல! விசயம் தெரிஞ்சவரா இருப்பாரு போலன்னு நம்பி கோக்கு மாக்கா இருந்த அந்த ஆளுகிட்ட போயி கேட்டதுல அவரு நாத்து 'பதிய'றதை 'பதிவு' பதியறதுனு புரிஞ்சுக்கிட்டு "பதிவுகளாராய்ச்சி மையத்"தோட அட்ரசை குடுத்து அங்க நம்மூரு ஆளு சுப்பன்னு ஒருத்தரு இருக்காப்புலன்னும் சொல்லி அனுப்பிச்சிட்டாரு! நம்மாளுக்கு படிக்கத் தெரியாதுன்னாலும் அங்க இங்க கேட்டு ஒரு வழியா கண்டுபுடிச்சி போய்டாப்புல.. **** சுப்பன்: அடடே குப்பா! வாப்பா வா! எப்படி இருக்க? குப்பன்: எனக்கென்ன கேடு?! நல்லாத்தான் இருக்கேன்! இந்த நாத்து பதியற விசயமா.. சுப்பன்: அடப்பாவி! யாருப்பா உனக்கு இந்த அட்ரசை கொடுத்தது? எனக்குத்தான் விதி.. இங்க ...

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல...

இருத்தலியம் (அ) சுயபீத்தல்கள்

வா ங்கப்பு... வருசம் ஒருக்கா தீவாளிக்கு எங்கூட்டுல இட்லிக்கு போட்டிருக்கோம்கற மாதிரி நீயும் வருசத்துக்கு ஒருக்கா ஒரே ஒரு ”உள்ளேன் அய்யா”பதிவெழுதறயே... உனக்கு வெக்கமா இல்லே இளவஞ்சின்னு தானே கேக்கறீங்க? எழுதுனா என்னங்க.. பதிவுகளைப் படிச்சா என்னங்க.. வலைப்பதிவரு பதிவரு தான். பதிவுலகமும் ஒன்னும் மாறிடலை. அப்படியே தானே இருக்கு! என்னதான் இருந்தாலும் பதிவு போடலாம்னு தோணினா எழுத மேட்டரு வேணாமா? அதான் நானே என்னை மேட்டராகி வழக்கம்போல... கொசுவத்தி.... ஹிஹி... ***** போனவருசம் புத்தக கண்காட்சிக்குப் போய் 6 மணிநேரம் சுத்திசுத்தி வந்தேன். பெரியார் ஒரு பார்வைல இருந்து சாருவோட 10 புத்தகக்கட்டைத் தொட்டு சூனியம் வைச்சுக்காம ஜாக்கிரதைய தள்ளி நடந்து, நம்ப அய்யனார் புஸ்தகம் அட்டையை நின்னு ரசிச்சது வரைக்கும் செஞ்சு ஏறக்குறைய எல்லா பதிப்பகத்துலையும் பெரண்டு வந்தேன். துளசியக்கா பூனைக்குட்டி புத்தகத்தைக்கூட அங்கனயே நின்னு கால்வாசி படிச்சேன். கடைசியா என்ன வாங்குனேன்னா கேக்கறீங்க? வெளில கேண்டீன்ல சூடா மசால்தோசையும் காப்பியும்! ஆனா ஏன் ஒரு புத்தகம்கூட வாங்கத் தோணலைன்னு பயங்கற ஃபீலிங்கப் போச்சுங...