இது என் முதல் சமையல் குறிப்பு பதிவு !
இந்த களத்தில் பழம் தின்று கொட்டை போட்ட அதாவது சாதனை படைத்து வருங்கால சிஷ்யர்களுக்கும் வித்திட்ட பதிவர்கள் வாழ்த்தி வரவேற்க வேண்டுமாய் கேட்டுக் கொண்டு ஆரம்பிக்கிறேன். இது நாடு கடத்தப்பட்டு (அ) நாடு கடத்திக்கொண்டு, தானே சமைத்து தானே உண்டு வாழும் பாவப்பட்ட பேச்சிலர்களுக்கான எளியவகை சமையல் குறிப்பு ( கடினவகை தெரிஞ்சா சொல்ல மாட்டமா?! )
தேவையான பொருள்கள்:
அடுப்பு மற்றும் பற்றவைக்க தீப்பெட்டி (அ) காஸ் லைட்டர்
வாயகன்ற வாணலி ( வாயகன்றாலே அது வாணலிதாம்ல! )மற்றும் ஒரு கரண்டி/கத்தி
கொட்டிக்கொண்டு வக்கணையாய் சாப்பிட ஒரு பெரிய மற்றும் சிறிய தட்டு
நிஜமாகவே தேவையான பொருள்கள்:
கோழிக்கறி - 1/2 கிலோ ( தலை மற்றும் இறக்கைகள் நீக்கி தோலுரித்தது )
பெரிய வெங்காயம் - 3 (சாலட் வெங்காயம் இருந்தால் சிறப்பு )
தக்காளி - 3
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 10 பற்கள்
பட்டை, கிராம்பு -சிறிதளவு
சோம்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி தழை - ஒரு கொத்து
பச்சை மிளகாய் - 6
கொத்தமல்லித்தூள் - 2 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 2 குழிக்கரண்டி
செய்முறை:
1. அடுப்பை பற்றவைத்து அதன்மீது வாணலியை வைக்கவும் ( இந்த முக்கியமான குறிப்பை பலபேர் சொல்வதே இல்லை! )
2. வாணலி ஈரம் காய்ந்தவுடன் நல்லெண்ணையை அதில் விடவும். ( "நல்லெண்ணை சூரியகாந்தி எண்ணையெய் விட உடம்புக்கு மிக நல்லது. சுவையை கூட்டுவது. நம் முன்னோர் உபயோகித்தது" - இதயம் நல்லெண்ணை சித்ரா. "எனவேதான் இது "நல்ல" எண்ணெய் என அழைக்கப் பெறுகிறது. குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால் திடவுருவமாக மாறாது என்பதன் மூலம் நல்லெண்ணெய்யில் கொழுப்பு கிடையாது என அறியலாம்" - தோழி ஷீலா )
3. எண்ணெய் காய்ந்தவுடன் ( காய்ந்ததா என்பதை கையால் தொட்டுப்பார்க்காமலேயே அறிய முயற்சிக்கவும்! )அதில் சோம்பு, பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, தோல் நீக்கி கையால் நசுக்கி வைத்துள்ள பூண்டு, இஞ்சி மற்றும் இரண்டாகக் கீறிய பச்சைமிளகாய் போன்றவற்றை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும். கவனம்! அடுப்பு குறைதழலில் எரியட்டும்.
4. சிறிதாக வெட்டிவைத்துள்ள வெங்காயத்தில் பாதியை வாணலியில் போட்டு வதக்கவும்.
5. வெங்காயம் வதங்கியவுடன், சிறிய துண்டுகளாக வெட்டி அதில் மஞ்சள் மற்றும் உப்பு போட்டு பிரட்டி அரைமணி நேரமாக ஓரத்தில் வைத்திருக்கும் கோழித்துண்டுகளை வாணாலியில் இட்டு இரண்டு நிமிடம் வதக்கவும். இது இறைச்சியில் உள்ள ஈரத்தை உறிஞ்சி கறி சிறிது கெட்டியாகவும் கடித்துச்சாப்பிட ஏதுவாகவும் இருக்க உதவும். (இல்லையெனில், ப்ராய்லர் கறி தேங்காபன்னு திங்கற மாதிரிதான் இருக்கும்! )
6. கறி வதங்கியதும் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கொத்தமல்லி பொடி போட்டு கிளறி மூடிவைக்கவும். அடுப்பின் தழலை கூட்டிவைக்கவும்.
7. பாதி வெந்தவுடன் மூடியை திறந்து வெட்டிவைத்துள்ள தக்காளியை சேர்த்து, பின்பு மிளகுத்தூள் சேர்த்து கிளறி சிறிதளவே திறந்திருக்கும்படி மீண்டும் மூடி வைக்கவும். கவனிக்கவும்! இதயத்துக்கு எதிரி என்பதால நான் தேங்காயை உபயோகப்படுத்தவில்லை. "உனக்கு கொழுப்புன்னா எங்களுக்கு என்னா கேடு?" மற்றும் "தேங்காய் இல்லாமல் என்னத்தடா குருமா வைக்கற?" என குமுறுகிறவர்கள் இந்த நிலையையிலே நன்கு துருவிய தேக்காயையோ அல்லது சிறிது தேங்காய்ப்பாலையோ சேர்க்கலாம்.
8. இந்நேரத்தில் சுவையை சோதனை செய்வது புத்திசாலித்தனமான காரியம். காரம் போதவில்லையெனில் மேலும் மிளகுத்தூள் சேர்க்கவும். உப்பு போதவில்லையெனில் உப்பு சேர்க்கவும். கொதிக்க தண்ணீர் போதவில்லையெனில் சிறிது தண்ணீர் சேர்க்கவும். (அடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்......!!! )
9. 15 நிமிடங்கள் கழித்து கறி நன்கு வெந்தவுடன் மூடியை திறந்து மீதமுள்ள வெங்காயத்தை போட்டு கிளறவும். இது வறுவலுக்கு ஒரு மொறுமொறு சுவையைக்கொடுக்கும். கொதிநிலையில் தண்ணீர் ஆவியாகி கெட்டியான குழம்பு பதம்வரும் வரைக்கும் கிளறி வதக்கவும்.
10. அடுப்பை அணைத்து வாணலியை இறக்கிவைக்கும் முன்பாக சிறுதுண்டுகளாக ஆய்ந்துவைத்திருக்கும் கொத்தமல்லித் தழையைப் போட்டு பிரட்டவும்.
அவ்வளவுதான் மேட்டர். நீங்கள் இறக்கிவைக்கும் முன்பாகவே வாசனை ஒரு தூக்கு தூக்கி உங்க பக்கத்து வீட்டு வெள்ளைக்கார ஃபிகரு கதவைத் தட்டி "May I join you for Lunch?"ன்னு கேக்கலைன்னா என்னை என்னான்னு கேளுங்க! மேலும் இது சாதத்துடனோ அல்லது சாப்பாத்திகளுடனோ சாப்பிட சுவையாக இருக்கும். குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். ( சமையல் குறிப்பை இப்படித்தான் முடிக்கனுமாம்ல! )
படத்தில் இருக்கும் 3 பரோட்டாக்களும் தட்டிலிருக்கும் வறுவலும் இன்றைக்கு. கண்ணாடிப்பாத்திரத்தில் இருக்கும் மிச்ச வறுவல் நாளை மதியத்துக்கு :)
இதே செய்முறையை கையாண்டு நீங்கள் இருக்குமிடத்தைப் பொறுத்து டோரண்டோ, துபை, எல்லே, சிஙகை, டெல்லி, சென்னை கோழி வறுவல்களாகவும் செய்து சாப்பிடலாம்! ஹிஹி...
சீனியர்!
பதிலளிநீக்குஉங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? சொல்லவே இல்லை!
//இது என் முதல் சமையல் குறிப்பு பதிவு !
பதிலளிநீக்கு//
புரியுது தலைவா!
பொண்ணு பார்த்துட்டாங்களா!
அப்ப எல்லாம் கத்துக்க வேண்டியதுதான்!
அதுக்காக முதன் முதலா நான் வெஜ் ஜா?
//கடினவகை தெரிஞ்சா சொல்ல மாட்டமா?!//
பதிலளிநீக்குஅதான!
//கொட்டிக்கொண்டு வக்கணையாய் சாப்பிட ஒரு பெரிய மற்றும் சிறிய தட்டு
//
இதுதான் எங்களுக்குத் தேவையான பொருட்கள்!
//1. அடுப்பை பற்றவைத்து அதன்மீது வாணலியை வைக்கவும் ( இந்த முக்கியமான குறிப்பை பலபேர் சொல்வதே இல்லை! )//
பதிலளிநீக்குஅட! ஆமாங்க! நானும் அதை நம்பி அடுப்புல வெச்சிட்டு வேகும் வேகும்னு தேவுடு காத்திருக்கேன் பலமுறை!
//இதயம் நல்லெண்ணை சித்ரா. "எனவேதான் இது "நல்ல" எண்ணெய் என அழைக்கப் பெறுகிறது.//
பதிலளிநீக்குஓ! சித்ரா சொன்னதாலதான் இது நல்ல எண்ணெய்யா?
//எண்ணெய் காய்ந்தவுடன் ( காய்ந்ததா என்பதை கையால் தொட்டுப்பார்க்காமலேயே அறிய முயற்சிக்கவும்! )//
:))
//( சமையல் குறிப்பை இப்படித்தான் முடிக்கனுமாம்ல! )//
ஆமாம்! கரெக்டுதான்!
May I join you for Lunch Dude?
பதிலளிநீக்குI like this blog very much, and I have a proposal for you also!
நான் தற்கொலைக்கு அழைப்புன்னு கவிதைப் பதிவு போட்டேன்!
பதிலளிநீக்குநீங்க சமையல் குறிப்பு போடுறீங்க!
அடடா! என்ன ஒரு கோ-இன்சிடன்ஸ்!
எங்களைப் பார்த்தா பாவமா இல்லையா உங்களுக்கு?
பதிலளிநீக்குஎங்களை வெச்சி ஏதும் காமெடி கீமெடி பண்ணலையே?
பதிலளிநீக்கு:(
எங்களைப் பத்தியும் மறக்காம சொன்ன இளவஞ்சி அங்கிளுக்கு ஒரு ஓ!
பதிலளிநீக்கு//அடுப்பின் தழலை கூட்டிவைக்கவும்.//
பதிலளிநீக்குஇங்கயும் செந்தழல்தானா?
அடக் கடவுளே!
//Linda said...
பதிலளிநீக்குMay I join you for Lunch Dude?
I like this blog very much, and I have a proposal for you also!
//
எவடி அவ! எங்க ஊருப் பயகிட்ட இங்கிலீஸ்ல பசப்புறவ?
//Linda said...
பதிலளிநீக்குMay I join you for Lunch Dude?
I like this blog very much, and I have a proposal for you also!
//
கண்ட நேரத்துல எங்க ஊருப் பயலை தனியாக் கூப்புடறியே? எங்களுக்கு இங்கிலீஷ் தெரியாதுன்னு நினைச்சியா?
எங்க உதவி ஏதாச்சும் தேவையா?
பதிலளிநீக்குஒரு ஆண் சமையல் குறிப்பு பதிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். ;-)
பதிலளிநீக்குநிஜமாவே நல்லெண்ணை உடம்புக்கு நல்லதா? நல்ல தேடிப் பாருங்க. எனக்கு இருப்பதிலேயே அதிக கெடுதியான எண்ணெய் நல்லெண்ணைன்னு ஒரு மடல் பார்த்த நினைவு. கிடைத்தால் அனுப்பி தருகிறேன். ஏதோ எளிய முறைன்னு சொல்லி இவ்வளவு கஷ்டமான வேலையெல்லாம் சொல்லிருக்கீங்க. ம்ம் ஏதோ பார்த்து செய்யுங்க.
டொக் டொக்,,,!
பதிலளிநீக்குமே ஐ கம் இன்?
சிபியாரே,
பதிலளிநீக்கு// உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? // ஆ!!!
// பொண்ணு பார்த்துட்டாங்களா! // அய்யய்யோ!!!!!!
// அடடா! என்ன ஒரு கோ-இன்சிடன்ஸ்! //:))))) தற்கொலைக்கான பழியை என்மீது போடறீரா?
Linda,
தாராளமா வாம்மா! ப்ரொபோசலெல்லம் எதுக்கு? சாப்டுட்டு பாத்தரம் மட்டும் கழுவி வைச்சிரு தாயே! :)
அடடா அனானிகளா,
சமைச்சதை நிம்மதியா சாப்பிட விடறீங்களா?! அதுக்குள்ள இந்த கும்மு கும்மறீங்க!!! சரியான இனிமையான மினி இம்சைகளைய்யா நீ(ங்க)!
// எவடி அவ! எங்க ஊருப் பயகிட்ட இங்கிலீஸ்ல பசப்புறவ? // அருமை! :)
ஜெஸிலா,
// ஒரு ஆண் சமையல் குறிப்பு பதிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் //
காலம் மாறி வருகுது... ஆகவே நாங்களும்! :)))
வெளியூருல இருக்க எங்களை மாதிரி ஆளுங்களுக்கு வேற வழியில்லை. குடும்பத்தோட இருக்கற ஆளுங்க அண்ணாமலை, செல்வி முடியறமட்டும் பசி பொறுக்க முடியாமத்தான் கத்துக்கிட்டதா கேள்வி! :)
நல்லெண்ணை நிஜமாகவே நல்ல எண்ணைன்னு சொல்லக்கேள்வி! நானும் ஏதேனும் தகவல் கிடைத்தால் சேர்த்துவிடுகிறேன்.
நண்பர்களின் வருகைக்கும்,கருத்துக்களுக்கும் கும்மிக்களுக்கும் நன்றி! :)
இளவஞ்சி
பதிலளிநீக்குபார்க்க நல்லா இருக்கு. ஒரு கொத்தமல்லிதழையை காம்போட வச்சி போட்டோ எடுத்திருந்தா 5ஸ்டார் ரெஞ்சுக்கு போயிருக்கலாம்.
இஞ்சி போட்டிருக்கு. அதனால இஞ்சி சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கு இந்த மாதிரி போட்டா நல்லா ஆர்வமா சப்பிடுவாங்க அப்படின்னு ஒரு வரி சேர்த்தா, பத்திரிக்கை ஸ்டண்டர்டுக்கு சமையல் குறிப்பு ரெடி
கோழி ஒரு தட்டிலே
பதிலளிநீக்குசப்பாத்தி ஒரு தட்டிலே
இருப்பதேனோ இளவஞ்சி வீட்டிலே
நல்லா ஜொஜ்ஜொலிப்பா இருக்கு இளவஞ்சி. இப்பிடி பிரமாதப்படுத்துவீங்கன்னு தெரியாமப் போச்சே..யாருப்பா அது லண்டனுக்கு ஒரு டிக்கெட்டு போடு. :)
// நாமக்கல் சிபி said...
//இது என் முதல் சமையல் குறிப்பு பதிவு !
//
புரியுது தலைவா!
பொண்ணு பார்த்துட்டாங்களா! //
பொண்ணு பாத்துட்டாங்களாவா? ம்ம்ம்...அந்தக் கதைய ஏன் கேக்குறீங்க. இளவஞ்சிய அழவெச்சிப் பாக்கனும்னு உறுதியா இருக்கீங்க போல.
// ஜெஸிலா said...
ஒரு ஆண் சமையல் குறிப்பு பதிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். ;-) //
என்னங்க இது...adupadi.blogspot.com போய்ப் பாருங்க. என்ன கொஞ்ச நாளா தூங்குது..ஹி ஹி
// நிஜமாவே நல்லெண்ணை உடம்புக்கு நல்லதா? நல்ல தேடிப் பாருங்க. எனக்கு இருப்பதிலேயே அதிக கெடுதியான எண்ணெய் நல்லெண்ணைன்னு ஒரு மடல் பார்த்த நினைவு. //
இல்லைங்க. எல்லா எண்ணெய்யும் கெட்ட எண்ணெய்தான். ஆனா கெட்டதுல எது கொஞ்சமாக் கெட்டதுன்னு பாத்தா அது ஆலிவ் எண்ணெய்யும் நல்லெண்ணெயுந்தான். உறையாக் கொழுப்பு இரண்டிலுமே கிடையாது. அதுவுமில்லாம நல்லெண்ணெய்ல லெசித்தின் இருக்கு. ஆகையால மத்த எண்ணெய்கள விட இது ரெண்டுமே நல்லது.
அதெல்லாம் இருக்கட்டும்...இந்த எடின்பரோ கோமான்(ளி இல்ல)னு சொல்றாங்களே..அது நீங்கதானா?
பதிலளிநீக்கு//சமைச்சதை நிம்மதியா சாப்பிட விடறீங்களா?! அதுக்குள்ள இந்த கும்மு கும்மறீங்க!!! சரியான இனிமையான மினி இம்சைகளைய்யா நீ(ங்க)!
பதிலளிநீக்கு//
பங்கிட்டு உண்டால் பசியாறும்!
பத்மா,
பதிலளிநீக்கு// பார்க்க நல்லா இருக்கு // நம்புங்க! சாப்பிடவும் நல்லா இருந்துச்சு! :)
// ஒரு கொத்தமல்லிதழையை காம்போட வச்சி போட்டோ எடுத்திருந்தா // முதல் படத்துல உள்ளதை இரண்டாம் படத்துக்கும் செஞ்சிருக்கனும்! பசில டெகரேட் செய்யறதை மறந்துட்டேன்.
விடுங்க, அடுத்தமுறை கலக்கிடறேன்! :)
ஜீரா,
வாய்யா பழம்தின்னு கொட்டைபோட்ட வித்தகரே! :)
நல்லெண்ணை பத்தின குறிப்புக்கு நன்றி! ஆலிவ் எண்ணெய்ல என்ன பிரச்சனைனா நம்மூரு சுவை வர்றதில்ல. அதுபோக சிலசமயம் வித்தியாசமான வாசனையை கொடுக்குது.
எடின்பரோ கோமகன்/கோமகள் எல்லாம் யாருன்னு எனக்கு தெரியாது. ஆனால் எடின்பரோ கோமாளி யாருன்னு தெரியும்! :)
ஏழையின் சிரிப்பில்,
// பங்கிட்டு உண்டால் பசியாறும்! //
உண்மைதானையா... வக்கனையா சமைச்சுட்டு வாங்கன்னு ஒரு வார்த்தைகூட கூப்புடல! ஒரு தமிழனா இருந்துக்கிட்டு இப்படி செஞ்சது ஒரே வெக்கமாப் போச்சுங்க...
இதுபோக எங்கூட்டுக்கு நீங்க அழையாமலே வரலாம். நானெல்லாம் அப்படித்தேன் போறது! :)))
//இதுபோக எங்கூட்டுக்கு நீங்க அழையாமலே வரலாம். நானெல்லாம் அப்படித்தேன் போறது!//
பதிலளிநீக்குஉங்கூட்டுக்கு நீ அழையாமலே போகலாம்யா! நான் வர முடியுமா?
ஏழையின் சிரிப்பில்,
பதிலளிநீக்கு//உங்கூட்டுக்கு நீ அழையாமலே போகலாம்யா! நான் வர முடியுமா? //
ம்ஹீம்! இது ஆவறதில்லை!
இன்னைக்கு ஒரு முடிவோடத்தான் இருக்கீர் போல! :)
சரி இன்னொரு ரவுண்ட் இங்க விளையாடலாமா
பதிலளிநீக்கு//ம்ஹீம்! இது ஆவறதில்லை!
பதிலளிநீக்குஇன்னைக்கு ஒரு முடிவோடத்தான் இருக்கீர் போல//
ஆமா! அதான் கண்ணாடிப் பாத்திரத்துல இருக்கே இன்னும்!
எனக்குள்ள இருக்கிற சிங்கத்தை தூண்டி விட்டுட்டீங்க.... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வரேன்...
பதிலளிநீக்கு// ILA(a)இளா said...
பதிலளிநீக்குஎனக்குள்ள இருக்கிற சிங்கத்தை தூண்டி விட்டுட்டீங்க.... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வரேன்... //
இந்தியாவுல சிங்கங்கள் கிர் சரணாலயத்துலதான் இருக்குதாம். அதுனால நீங்க கிர்ர்ர்ர்ர்ர்ர் போறது சரிதான். ஹி ஹி ஹி ஹி
கேள்விகேட்பவன்,
பதிலளிநீக்கு// சரி இன்னொரு ரவுண்ட் இங்க விளையாடலாமா // என் பதிவு ஒரு போக்கத்த எடங்க! இங்க வெளையாண்டு உங்களுக்கு எனத்த சுவாரசியமா இருக்கப்போகுது? :)
ஏழையில் சிரிப்பில்,
// ஆமா! அதான் கண்ணாடிப் பாத்திரத்துல இருக்கே இன்னும்! // அய்யா! வாங்க அய்யா! நாளைக்கு நான் வயித்துக்கு ஈரத்துணி போட்டுக்கினாலும் பரவாயில்ல... கண்ணாடிப்பாத்திரம் பிரிஜ்ஜிக்குள்ளதான் இருக்கு! சூடு பண்ணித் தாரேன். ஒரு வெட்டு வெட்டுங்க! :)
இளா,
நீங்க போற வேகத்தைப் பார்த்தா இன்னைக்கு உங்கவீட்டுல சிங்க பிரியாணிதான் போல! :)))
//எனத்த சுவாரசியமா இருக்கப்போகுது? :)//
பதிலளிநீக்குசுவாரஸியத்திற்கு நாங்க பொறுப்பு வேகமா பின்னூட்டம் ரிலீஸ் பண்ணுறது உங்க பொறுப்பு.
அப்ப ஆரம்பிக்கலாமா ஸ்டார்ட் மியூஜிக்
இது என்னய்யா அநியாயமா இருக்கு!
பதிலளிநீக்குகோ(ளி)ழிக்கும் கும்மியா? :-))))
அய்யா..உங்களைப் பத்தின எட்டு விவரங்களை எழுதும் தொடர் பதிவுக்கு அழைச்சிருக்கேன்.மேலதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்.
பதிலளிநீக்குஒரே ஒரு சந்த்தேகமுங்க .. இவ்வளவு வாசனையா சமச்சிட்டு, பசியோட, உடனே சாப்பிட ஆரம்பிக்காம, எப்படி போட்டோ எடுத்துக்கிட்டு இருந்தீங்க .. என்னமோ ஒதைக்குதே..!
பதிலளிநீக்கு//தோல் நீக்கி கையால் நசுக்கி வைத்துள்ள பூண்டு//
பதிலளிநீக்குஎன்னை எப்போ எவன் எந்தக் கையால நசுக்கினான்?
சிபி,
பதிலளிநீக்குமாப்ளேயோட 'பத்துப் பாட்டு', 'எட்டுத்தொகை' ஒன்னும் நீங்க படிச்சதில்லையா?
அச்சு எடுத்து வச்சிருக்கேன்..
பதிலளிநீக்குஅநேகமா கூடிய சீக்கிரம் நீங்க சென்னை கோழி வறுவல் அல்லது பெங்களூர் கோழி வறுவல் கூட செய்ய வேண்டி இருக்கும்.. :)
//மாப்ளேயோட 'பத்துப் பாட்டு', 'எட்டுத்தொகை' ஒன்னும் நீங்க படிச்சதில்லையா?
பதிலளிநீக்கு//
படிச்சி ரசிச்சி சிரிச்சிறிக்கேன்!
நான் பண்ணுற குசும்புக்கெல்லாம் இவருதான் எனக்கு குரு!
வஞ்சியாரு வஞ்சிகள் வேலையெல்லாம் செய்யலாமா? அப்படினு நான் கேட்டு பெண்ணீய வியாதிகள் கூக்குரல் போட்டு அதெல்லாம் தேவையா...?? அதனால,
பதிலளிநீக்குதலை, துபாய்க்கு ஒரு நடை வந்தீங்கன்னா //கொட்டிக்கொண்டு வக்கணையாய் சாப்பிட ஒரு பெரிய மற்றும் சிறிய தட்டு// ரெண்டையும் வச்சுக்கிட்டு தயாரா இருப்பேன் நீங்க சமைச்சு போட்டா என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
சாத்தான்குளத்தான்
//ரெண்டையும் வச்சுக்கிட்டு தயாரா இருப்பேன் நீங்க சமைச்சு போட்டா என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்//
பதிலளிநீக்குஇளவஞ்சி அவர்களை சென்னைக்கு வருமாரு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!
//சாத்தான்குளத்தான்:
பதிலளிநீக்குரெண்டையும் வச்சுக்கிட்டு தயாரா இருப்பேன் நீங்க சமைச்சு போட்டா என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
நாமக்கல் சிபி said...
//ரெண்டையும் வச்சுக்கிட்டு தயாரா இருப்பேன் நீங்க சமைச்சு போட்டா என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்//
இளவஞ்சி அவர்களை சென்னைக்கு வருமாரு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!
//
தலைவர் இளவஞ்சி அவர்களை மொன்ரியல் வருமாரு மன்றாடிக் கேட்டுக்கொல்கிறேன். ;)
-மதி
இராகவனுக்கு அப்புறமா சமையல்பக்கம் இறங்கியிருக்கிற வலைப்பதிவர். ம்ம்.. நல்லாயிருங்க.. சந்தோஷமாயிருக்கு.
பதிலளிநீக்குஎனக்கு ஒரு சந்தேகம். வரக்கூடாதுதான் ஆனா, வந்திருச்சு!
ஒரு கிலோ கோழி
பச்சை மிளகாய் 6
மிளகுதூள் 1 தேக்கரண்டி
தக்காளி போட்டிருக்கீங்கதான். ஆனா, எப்படி இவ்வளவு சிவப்பாயிருக்கு. மிளகாய்த்தூளைப் போட்டுட்டு எழுத மறந்திட்டீங்களா? அல்லது போடவே இல்லைன்னா, ஒரு கிலோ கறிக்கு, இவ்வளவுதான் காரம்னா சின்னப்புள்ளைங்களுக்கு சமைக்கிற மாதிரில்ல இருக்கு? எனக்குத் தெரிஞ்ச சின்னப்புள்ளைங்களே காரம் கம்மின்னு சொல்லிரும்னு நினைக்கிறேன்.
-மதி
பி.கு: அடுத்த பரோட்டா பதிவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். :)
ஸ்ஸ்ஸ்... சன்னாசியை விட்டுட்டேன். சமையல் குறிப்பெல்லாம் போடலைன்னாலும் அருமையான போட்டோல்லாம் போட்டிருந்தாரு. தண்ணி வென்னியோட.
பதிலளிநீக்குஸ்டாட்ச்லாண்ட்ல இருந்தும்.. சிலர்.. ;))
-மதி
மறுபடியும் இன்னும் கொஞ்சப் பேர் நினைவுக்கு வர்ராங்க. இலவசக்கொத்தனார், கால்கரி சிவா (ஜிகர்தண்டா - சமையல்குறிப்பில வரும்ல?). இன்னும் யாரெல்லாம் விட்டுப்போச்சுன்னு தெரியல. சமையல் சிங்கங்களெல்லாம் ஒரு கூட்டுப் பதிவு தொடங்கலாம்ல? :)
பதிலளிநீக்கு-மதி
துளசியக்கா,
பதிலளிநீக்கு// கோ(ளி)ழிக்கும் கும்மியா? :-)))) // மக்கா எதைத்தான் விட்டு வைக்கறாய்ங்க!? :)
அழகண்ணே,
// 'பத்துப் பாட்டு', 'எட்டுத்தொகை' // அது போன வருசம்! இது இந்த வருசம்!! பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்! :)
மாப்ள ராசா,
// அச்சு எடுத்து வச்சிருக்கேன்.. // உம்ம நளபாகத்துக்கு முன்னாடி இதெல்லாம் ச்சும்மா பெப்பே பார்த்துக்கிடுங்க ! :)
சுட்.ஜீ, அழைப்புக்கு நன்றி!
தருமிசார்,
பொழுதுபோகாம வீட்டுல தேமேன்னு தனியா இருக்கற ஆளு மத்தியான சமையலை 11 மணிக்கே முடிச்சுட்டா அப்பறம் இந்தமாதிரி போட்டோ புடிக்கறது பதிவு போடறதுன்னு கோட்டித்தனமெல்லாத்தான் செய்வாய்ங்க! :)
சிபியாரே,
// நான் பண்ணுற குசும்புக்கெல்லாம் இவருதான் எனக்கு குரு! // நேத்து தற்கொலைக்கான தடயமளித்தல்! இன்னைக்கு வாக்குமூலமேவா! நல்லா இருங்கப்பு :)))
மதி,
பதிலளிநீக்கு// ஆனா, எப்படி இவ்வளவு சிவப்பாயிருக்கு //
அதுல பாருங்க மொதழாளீ... இதுல இருக்கற தொழிழ்ல் ரசசியம் என்னன்னா....
படம் பார்க்க நல்லா வரனும்னா கொஞ்ஜமே கொஞ்சம் கேசரி பவுடரை எடுத்து விடனும்! :)))
இப்படி கண்கொத்திப்பாம்மா இருக்கீங்களேயம்மா!!!
மொளகாப்பொடி காரம் ஒடம்புக்கு நல்லதில்லை. அதனால நான் எப்பவும் பச்சைமிளகாயும் மிளகுப்பொடியும் தான் போடறது. இருந்தாலும் சரி... கறி அளவை 1/2 கிலோவுக்கு மாத்திடறேன்.
என்ன ஆனாலும் சரி!!! அந்த பரோட்டா ரகசியத்தை சொல்லவே மாத்தேன்!!! :)
// சிங்கங்களெல்லாம் ஒரு கூட்டுப் பதிவு தொடங்கலாம்ல //
Too many cooks.... ஹிஹி...
அண்ணாச்சி,
பதிலளிநீக்கு// வஞ்சியாரு வஞ்சிகள் வேலையெல்லாம் செய்யலாமா? //
செய்யலைன்னா கொலப்பட்டினிதான்வே!
// ரெண்டையும் வச்சுக்கிட்டு தயாரா இருப்பேன் நீங்க சமைச்சு போட்டா //
ஆஹா! சரி... உமக்கு விதி அவ்வளவுதான்னா நான் என்ன செய்ய?! துபைல ஆம்புலன்சு நம்பரெல்லாம் ஒரு தடவை பார்த்துக்கிடுங்க! :)
// 7. பாதி வெந்தவுடன் //
பதிலளிநீக்குஇதை எப்படிக் கண்டுபிடிப்பது ?
ஒரு academic interest-க்காக கேட்கிறேன்.
:-)))
பாலராஜன்கீதா,
பதிலளிநீக்கு// இதை எப்படிக் கண்டுபிடிப்பது ? //
எண்ணை காய்ந்ததா என்பதை கையால் தொட்டுப்பார்த்து கண்டுபிடிக்கக்கூடாது என்ற விதி இதற்கு பொருந்தாது! சும்மா ஒரு பீஸை எடுத்து நசுக்கிப்பார்த்து கண்டறியலாம்!
ஆஹா! கொஞ்சம் சூதனமா இல்லைன்னா படிக்கற பொம்பளையாளுங்க பிரிச்சு மேஞ்சிருவீங்க போல இருக்கே! :)))
அடுத்த முறை எந்த சந்தேகத்துக்கும் இடம் வராத மாதிரி சுடுதண்ணி வைப்பது எப்படின்னு போட்டற வேண்டியதுதான்! :)
//ஆஹா! கொஞ்சம் சூதனமா இல்லைன்னா படிக்கற பொம்பளையாளுங்க பிரிச்சு மேஞ்சிருவீங்க போல இருக்கே! :))) //
பதிலளிநீக்குதப்பா நினச்சி, தப்பா சொல்லீட்டீங்களே, இளவஞ்சி!
//தருமி said...
பதிலளிநீக்கு//ஆஹா! கொஞ்சம் சூதனமா இல்லைன்னா படிக்கற பொம்பளையாளுங்க பிரிச்சு மேஞ்சிருவீங்க போல இருக்கே! :))) //
தப்பா நினச்சி, தப்பா சொல்லீட்டீங்களே, இளவஞ்சி! //
அவருக்குத் தெரியாது.
அவரை விட்டுவிடுங்கள் தருமி அய்யா.
:-)
தருமிசார்,
பதிலளிநீக்கு// தப்பா நினச்சி, தப்பா சொல்லீட்டீங்களே, இளவஞ்சி! //தவறைச்சுட்டுனதுக்கு மிக்க நன்றி! அவரோட புல்லட்டு பின்னூட்டத்தைப்பார்த்து குழம்பித்தான் எனக்கும் தெளிஞ்சது!
பாலராஜன்கீதா சார்,
தவறுதலுக்கு மன்னிக்க!
அந்தக்காலத்துல இருந்தே இதை செஞ்சுக்கிட்டு வாரேன்! ஏற்கனவே ஒரு முறை மதி கிட்டயும் இதேபோல மாட்டியிருக்கேன்! :)