அம்மா வாங்க! அய்யா வாங்க! அண்ணே வாங்க! அக்கா வாங்க! தங்கச்சி வாங்க!
எங்க போனவாரம் சமையற்குறிப்பு வரலைன்னு ஆழந்த வருத்தத்துல இருந்திருப்பீங்களே! ( டேய்........)
அந்த வருத்தத்துல எதையும் சமைக்கப் பிடிக்காம பட்டினி கெடந்திருப்பீங்களே!! ( அடேய்......... )
அந்த பசி கெளப்புன கோவத்துல "இவன் சமைக்கறதே இல்லை! பக்கத்து கடைல ஐட்டங்களை வாங்கிவந்து சும்மா பயாஸ்கோப்பு காட்டறான்" புரளி/கிஸ்கிஸ் பேசியிருப்பீங்களே!!! (யேயய்யா! பேச்சை மட்ட்ட்ட்ட்ட்டும் கொறைடா! )
சரி விடுங்க! உங்க கஷ்டம் புரிஞ்சனால தான் இன்னைக்கு ஒரு சூப்பர் ஐட்டத்தோட வந்திருக்கேன்! முட்டை கொத்து பரோட்டா! அதுக்கு ஏண்டா தலைப்பு இப்படி வைச்சிருக்கேன்னு சண்டைக்கு வரப்படாது! இங்க இருக்கற தம்மாத்துண்டு ஃபிரையிங் ஃபேனுக்கு கொத்தவா முடியும்? கையால சின்னச்சின்னதா பிச்சிப்பிச்சி போட்டு செஞ்சாத்தான் உண்டு! மீறி கொத்துனீங்கன்னா, அந்த சத்தம் பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஒரு மார்க்கமா கேட்டு "My neighbour is secretly doing smithing to make his personal homemade Pistol!"னு போலீஸ்ல கம்ளெய்ண்டு குடுக்கறதுல போய் முடியக்கூடும்! சாக்கிரதை! ( ஏற்கனவே, நம்மாளுங்களுக்கு நேரம் சரியில்லாம சொந்த செலவுல சூனியம் வைச்சுக்கிட்டு அப்பறம் பத்தவைச்சுக்கிட்ட தீயையும் லோக்கல் போலீஸு அணைச்சு உயிரைக் காப்பாத்தற நிலைமைல இருக்கு! )
இந்த முட்டை பரோட்டா இருக்கே! நைட்டு சாப்படறதுக்கு (லைட்டா ஒரு பீருடனோ அல்லது பீருக்கு பின்னாடியோ ) ஒலகத்துலயே சுவையான உணவு எதுன்னா அது இதுதான்னு அடிச்சு சொல்லுவேன்!
"எல்லா கொத்தும் கொத்தல்ல மணப்பாறை
முட்டைபரோட்டா கொத்தே கொத்து"
அப்படின்னு திருவள்ளுவருக்கு முன்னாடி வாழ்ந்த கருஎள்ளுவரே பாடியிருக்காருன்னா பாருங்க! சங்க காலத்துல மட்டுமல்ல! சமகாலத்திலும் "தொட்டபெட்டா ரோட்டுமேல முட்டைபரோட்டா.. தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டா?" என்பன போன்ற தலவரலாற்று நளபாக தகவல்கள் அமைந்த பாடல்கள் மூலம் விஜய் இளயதளபதியாகவும் தேவா தேனிசைத்தென்றலாகவும் முன்னேறியதை நாடு மறக்காது! நாடு மறந்தால் வரலாறு மன்னிக்காது! முருகனுக்கு எழுபடை வீடுதான்( ஏழாவது வீடு இப்போதைக்கு Amsterdam! ). ஆனா அழகிரிநாட்டுக்கு (அதாங்க... தெந்தமிழகம்) வந்துட்டீங்கன்னா கொத்துபரோட்டாவுக்கு தலவரலாறு ஊருக்கு ஊர் உண்டு!
அய்ட்டம்தான் ஒன்னே தவிர ஊருக்கு ஊர் இதன் சுவை மாறும்! அசத்தும்! திடம் மணம் சுவைன்னு சும்மா கொத்தற ஏரியாவுக்குள்ள 100 மீட்டருக்கு வாசம் ஆளை அடிச்சு வீழ்த்தும்! முழம் சைசுக்கு இருக்கற ஈர்க்குமாறை பக்கத்து பக்கெட்டுல இருக்க தண்ணில நனைச்சு "ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..."ங்கற சத்தத்தோட அந்த நாலுக்கு மூனு தோசைகல்லுல போட்டு கூட்டி எண்ணைய குப்பலா விட்டு அதுமேல வெங்கயம் தக்காளி கறிவேப்பிலை பச்சமொளகா போட்டு, லைட்டா பெறட்டி வேகவிட்டு மேல ரெண்டு முட்டைய ஒடைச்சு ஊத்தி கெளரி அதுமேல பரோட்டாவை பிச்சுப்போட்டு மாஸ்டரு ரெண்டு கையிலயும் ரெண்டு இரும்பு தோசைக்கரண்டிகளை தலைகீழா பிடிச்சு "டகடக டகடக..."ன்னு கொத்தி இடையில ரெண்டு கரண்டி சாலனாவையை தெளிச்சு மீண்டும் "டகடக டகடக..."ன்னு கொத்த ஆரம்பிச்சா.... அடடா! இதை வேடிக்கை பார்க்கறதே ஒரு உன்னதமான அனுபவம்! பார்த்தால் பசி தீராது. எப்படா அது நம்ப தட்டுக்கு வரும்னு ஒரு வெறி கெளம்பும்ல! நம்மனால அந்தளவுக்கு செய்யமுடியுமா? அதனால நம்ப திறமைக்கு உட்பட்ட எல்லைக்குள்ளாக முட்டை பிச்சு பரோட்டா!
தேவையான பொருட்கள்:
பெரிய சாலட் வெங்காயம் - 2
தக்காளி - 2
பரோட்டா - 2 ( எப்படி செய்யனுங்கறதை இன்னைக்கும் சொல்லமாட்டேன்! இப்போதைக்கு Sahana Frozen parotta வைச்சு சமாளிங்கப்பு! )
முட்டை - 2
கறிவேப்பிலை - நிறைய
மிளகுப்பொடி - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
சிக்கன் கிரேவி - 2 கரண்டி ( என்னது? இது எங்க விக்குதா? அதான் மொதவாரம் செஞ்சமில்ல? கறி கொதிக்கறப்ப அதுல கொஞ்சமா எடுத்து வைச்சுக்கிடுங்க! )
நல்லெண்ணை - 2 குழிக்கரண்டி
உப்பு - உங்க உடல் நலத்துக்கு ஏற்ற வகையில்
மொதல்ல ரெண்டு பரோட்டாவை செஞ்சு கையால சைடுல அடிச்சு மெதுமெதுவாக்கி சின்னச்சின்னதா கையால பிச்சு ஓரமா வைச்சிருங்க
வாணலிய அடுப்புல வைச்சி நல்லெண்ணை ரெண்டு கரண்டி ஊத்தி காய்ந்ததும் ரவுண்டு ரவுண்டா வெட்டிவைச்சிருக்கற பச்சைமிள்காயையும் கறிவேப்பிலையும் போட்டு வதக்குங்க
அப்பறமா பொடிப்பொடியா வெட்டி வைச்சிருக்கற வெங்காயத்தை கொட்டி வதக்குங்க! (வெங்காயம் வெட்டறப்ப வர்ற கண்ணீர் வீணாப் போகக்கூடாதுன்னு நினைச்சீங்கன்னா, சைடுல லேப்டாப்புல "அவள் பறந்து போனாலே", "பாடிப்பறந்த கிளி", "நான் ஒரு ராசியில்லா ராஜா" இப்படி ஏதாவது பனானா சாங்ஸ் பாடவிடுங்க! கவனம்! இந்த குறிப்பு வீட்டம்மா இல்லாத நேரத்தில் வெங்காயம் வெட்டும்போது மட்டுமே! )
பொன்னிறமா வந்ததும் சின்னச்சின்னத நறுக்கி வைச்சிருக்கற தக்காளிய போட்டு வதக்குங்க.
நல்லா தக்காளி கரைஞ்சு வந்ததும் சிம்ல அடுப்பை வைங்க (சிம்ரன் இடுப்பா? யோவ்! சமைக்கும் போது கவனமா செதறக்கூடாது! ஏற்கனவே நமக்கு உப்புக்கும் சக்கரைக்கும் வித்தியாசம் தெரியாது.. ஆமா! )
ரெண்டு முட்டைய உடைச்சு ஊத்துங்க. அதுமேல வேண்டிய அளவு மிளகுப்பொடியையும் உப்பையும் போட்டு கலக்குங்க.
ஒரு மார்க்கமான கூழ்ம நிலைக்கு வந்ததும் சின்னச்சின்னதா பிச்சிவைச்சிருக்கற பரோட்டா துண்டுகளை உள்ள கொட்டி அடுப்பில் தீயை கூட்டிவைச்சு நல்லா கெளருங்க.
எடுத்துவைச்சிருக்கற சிக்கன் சால்னாவை (நியாயமா பார்த்தா மட்டன் சால்னா போடனும்! அதோட டேஸ்டே தனிங்கப்பு! )ஊத்தி பரவலா கிளருங்க
முட்டை கெட்டியாகி வந்ததும் இறக்கி கொஞ்சமா ஆறவைச்சு தட்டுல பரப்பி... அடடா! இன்னும் சொல்லியே முடிக்கலை! அதுக்குள்ள தின்னே தீர்த்துட்டீங்களா?
முட்டை கொத்து பரோட்டாவுக்கு தொட்டுக்க ஐதீகப்படி மட்டன் சால்னா தான் No 1! ஆனால் என்னோட முதல் சாய்சு தேங்காய் சட்னி!
இளவஞ்சி ,
பதிலளிநீக்குநீர் என்ன நீண்ட கால ஆழ் உறக்கம் அல்லது கோமாவில் இருந்தீரா ஆதி காலத்திலேயே இலவசகொத்தனாரல் கொத்தப்பட்ட கொத்ஸ்சு பரோட்டாவை மீண்டும் கொத்த கிளம்பிட்டீர்.அதுக்கு தான் பேர மாத்தி புத்தம் புதியபதிவ பிச்சு பரோட்டானு போட்டீரா?
எனக்கென்னமோ இது சரியாப்படலை இலவசகொத்தனார் "இன்டெலெக்சுவல் பிராப்பர்டி ரைட்ஸ் ஆக்ட்" படி வக்கீல் நோட்டீஸ் விடுவார்னு தான் தோணுதுது எதுக்கும் ஒரு முன் ஜாமீன் வாங்கி வையும்!
கொத்து பரோட்டாவிற்கு என்றே பிறந்த வெங்காயப்பச்சடியை விட்டுடிங்களே!
'தனி'க்குடித்தன எஃபெக்ட்டு நல்லாத் தெரியுது:-)))))
பதிலளிநீக்குபோனவருஷம் நம்ம 'கொத்ஸ்' போட்ட கொத்தைப் பார்க்கலையா?
சமையல் குறிப்பை விட முன் குறிப்பு சூப்பர்
பதிலளிநீக்குஆகா பார்க்க பார்க்கவே சாப்பிட தோனுது ஆனா என்ன மொத வாரம் சொன்ன சிக்கன் சால்னாவே செஞ்சு முடியல அதுக்கபுறம் புரோட்டா வாங்கி இதெல்லாம் ஆவறதுல்ல பேசாமா முக்கு கடைல பரோட்டா மாஸ்டர்கிட்ட வாங்கி சாப்பிட்டுட்டு அப்புறமா யோசிக்கனும் செய்யறத பத்தி :)
பதிலளிநீக்குஆசானே சிஷ்யபுள்ளை இந்த விஷயத்தை ரொம்ப வருஷம் முன்னாடியே போட்டாச்சு
பதிலளிநீக்குஅது எல்லாம் இருக்கட்டும்.
பதிலளிநீக்குஎங்க தலைக்கு வாழ்த்து சொன்னீங்களா?
ஹி..ஹி...என்னோட வழக்கமான பின்னூட்டம் என்னாவாயிருக்கும்னு உங்களுக்குத் தெரியுமில்லையா???
பதிலளிநீக்குஎ.க.இ.வா??
வவ்வால்,
பதிலளிநீக்குவலைல கொத்துபரோட்டாவுக்கு ஓனரு நம்ப இகொ தான்! அந்த வரலாற்று உண்மைய மறுக்க முடியுமா? இதெல்லாம் ஒரு கடைல வேல பார்த்துட்டு சன்னமா அடுத்த தெருல கடை தொடங்கற உத்தி! தொழில் கத்துக்குடுத்த குரு இதுக்கெல்லாம் கோச்சுக்க மாட்டாரு! வாழ்த்தற மனமுடைய இகோ வைப்போய் வக்கீல் நோட்டீஸ் அது அது இதுன்னு புரளி கெளப்பு அவருக்கு அவப்பெயர் உண்டாக்காதீரும்! )
// கொத்து பரோட்டாவிற்கு என்றே பிறந்த வெங்காயப்பச்சடியை // இது எந்த ஊரு ஸ்டைலுய்யா?
துளசியக்கா,
// 'தனி'க்குடித்தன எஃபெக்ட்டு நல்லாத் தெரியுது // விடுங்க! எங்கஸ்டம் எனக்கு ! :)
vathilai murali,
// சமையல் குறிப்பை விட முன் குறிப்பு சூப்பர் // இதெல்லாமும் கூட தொழில் ரகசியந்தான்! பின்னது எடுபடாதுன்னு தெரிஞ்சுதான் முன்னதை சூப்பரா எழுதறது! :)
delphine,
// ஹெல்லோ! இதுமாதிரி சப்பாத்தியில்லும் செய்யலாம்...// தகவலுக்கு நன்றி! செஞ்சிருவோம்! :)
இருந்தாலும் சுடச்சுட 4 சப்பாத்திய ஒரு தட்டிலும் முட்டை பொரியலை இன்னொரு தட்டிலும் வைச்சு சாப்பிடறதும் ஒரு சுகம்! இதுக்கு எந்த குருமாவும் தேவையில்லை.
// (இளவஞ்சிக்கு கல்யாணமாகிடுச்சா?) // ஆமாங்க! வேறவழியில்லாம கொஞ்ச நாளைக்கு இங்க பேச்சிலரா இருக்கேன்!
// குடுத்துவச்சவங்கத்தேன் // நெஜமாத்தான்! என் இம்சையில்லாம அவங்க அங்க நிம்மதியா இருக்காய்ங்க! :)))
அனுசுயா,
பதிலளிநீக்கு// பேசாமா முக்கு கடைல பரோட்டா மாஸ்டர்கிட்ட வாங்கி சாப்பிட்டுட்டு //
நாங்க மட்டும் என்ன வீம்புக்கா இதையெல்லாம் செய்யறோம்? முக்குகடைல ஈசியா கிடைக்குங்கற தகவலெல்லாம் சொல்லி பொகையக்கெளப்பாதீங்கம்மா! :)
இளா,
கலக்கிட்டய்யா! கலக்கிட்ட!! இதுக்குத்தான் சீனியருங்க பேச்சை கேக்கனுங்கறது! நாம்பாருங்க! சக்கரத்தை இன்னொருவாட்டி கண்டுபுடிச்சிருக்கேன்! :)
அ.ர.ம,
நம்ப அய்யனாருக்கு இல்லாத வாழ்த்தா? சொல்லியாச்சப்பேய்! :)
சுட்.ஜி,
// எ.க.இ.வா?? // என்னய்யா இது? நீர் வழக்கமா ஃபிகருங்களுக்கு சொல்லற கோட்வேர்டெல்லாம் எங்கிட்ட சொன்னா எப்படி புரியும்னேன்?!
//ரெண்டு முட்டைய ஒடைச்சு ஊத்தி கெளரி அதுமேல பரோட்டாவை பிச்சுப்போட்டு ..//
பதிலளிநீக்குஇந்த அம்மா gowri எங்க இங்க வந்தாங்க...?
தருமி, அது கௌரி இல்லை, கிளறி
பதிலளிநீக்குஇளவஞ்சி,
சுவையான சமையல் குறிப்புக்கு நன்றி
எழில்
// வாணலிய அடுப்புல வைச்சி நல்லெண்ணை ரெண்டு கரண்டி ஊத்தி காய்ந்ததும் //
பதிலளிநீக்குநல்லெண்ணை காயவே மாட்டேங்குது
;-)
மதுரக்காரரே!
பதிலளிநீக்கு// இந்த அம்மா gowri எங்க இங்க வந்தாங்க...? //
இந்த குசும்புதானே வாணாங்கறது? ம்ம்ம்.. எல்லாம் சாப்பாட்டுக்கடைக்கு பேர்போன மதுரைல இருக்கற தெம்பு! நடத்துங்க! :)
எழில், வாங்க! பாராட்டுகளுக்கு நன்றி.
பாலராஜன்கீதா,
அசத்திட்டீங்க! என்னோட சமையற்குறிப்புகளை இப்படி அழுத்தந்திருத்தமா ஃபாலோ பண்ணறதை நினைச்சா ஆனந்தக்கண்ணீர் வருது!
அடுத்தமுறை அடுப்பு பத்தவைக்கறதை மறக்காம சொல்லிடறேன்! :)
நான் காலைலயே இந்தப் பதிவைப் பாத்தேன். ஆனா ஆப்பீசுல கட்டங்கட்டமா வரும். அதுனால காத்திருந்து வீட்டுக்கு வந்து படிச்சிட்டேன். :)
பதிலளிநீக்குகொத்து புரோட்டாவைப் போல சுவையான உணவு இல்லை. இல்லை. இல்லவேயில்லை. இங்கு உண்ணும் பருகரும் ஸ்டெக்கும் என்னதான் இருந்தாலும் கொத்துக்கு முன்னால் வருமா!
அந்தப் பழைய புலவரு கருஎள்ளுவரு அல்ல. தெருவள்ளுவரு. அவரு மதுரை, தூத்துக்குடி, கோவை, திருச்சீன்னு பல ஊர்கள்ள தெருவுல தள்ளுவண்டி வெச்சு கொத்து பொரோட்டா பொரட்டுனவரு. அதுனாலதான் அவருக்கு மதுரை பரோட்டா வணிக தள்ளுவண்டி கொத்தனார்னும் இன்னொரு பேரு உண்டு. ஹி ஹி
// முருகனுக்கு எழுபடை வீடுதான்( ஏழாவது வீடு இப்போதைக்கு Amsterdam! ).//
ஆகா! அப்படிப் போடுங்க.
// ஆனா அழகிரிநாட்டுக்கு (அதாங்க... தெந்தமிழகம்) வந்துட்டீங்கன்னா கொத்துபரோட்டாவுக்கு தலவரலாறு ஊருக்கு ஊர் உண்டு! //
பின்னே....கொத்துப் புரோட்டாவை என்னோட வங்காள நண்பர்களுக்குத் தெரியாம அறிமுகப் படுத்தீட்டேன். அவங்க கடைல உக்காந்து சிக்கன் கொத்து, எக் கொத்து, மட்டன் கொத்துன்னு கொத்திக் கொத்தி எடுத்தத மறக்க முடியுமா?
சாத்தூர்ல வண்டி இருக்கங்குடிக்குத் திரும்புற திருப்பத்துக்கு முன்னாடி ஒரு ஓட்டல் இருக்கு. அப்படியே கொடகொடகொடன்னு கொத்தி அதுல சால்னாவை ஊத்தி கொளகொளன்னு தட்டுல எல மேல போட்டுத் தருவாங்களே...ஆகா...ம்ம்ம்..இங்க அதெல்லாம் எங்க. ஒங்க ரெசிப்பிதான் திங்க. நன்றிங்க.
வவ்வால் சொன்னது சரிதான் கொத்து பரோட்டாவுடன் ரைத்தா - வெங்காயச்சட்டினி பிரமாதமாக இருக்கும் .
பதிலளிநீக்குஇங்க பெண்களூர்ல நம்மூர்காரங்க கடையிலயும் போடுறாங்க.. 'கொத்த' வழி இல்லாததால இங்கயும் பிச்சு பரோட்டா தான்..
பதிலளிநீக்குபோட்டியில் கலந்து கொள்ளும்படித் தங்களை அன்போடு அழைக்கிறேன்
பதிலளிநீக்குhttp://selventhiran.blogspot.com/2007/07/blog-post_24.html
/*மீறி கொத்துனீங்கன்னா, அந்த சத்தம் பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஒரு மார்க்கமா கேட்டு "My neighbor is secretly doing smithing to make his personal homemade Pistol!"னு போலீஸ்ல கம்ளெய்ண்டு குடுக்கறதுல போய் முடியக்கூடும்! சாக்கிரதை! ( ஏற்கனவே, நம்மாளுங்களுக்கு நேரம் சரியில்லாம சொந்த செலவுல சூனியம் வைச்சுக்கிட்டு அப்பறம் பத்தவைச்சுக்கிட்ட தீயையும் லோக்கல் போலீஸு அணைச்சு உயிரைக் காப்பாத்தற நிலைமைல இருக்கு! )*/
பதிலளிநீக்குஇங்கன பினாங்க்ல.. ரொட்டி சானாய்,ரொட்டி சானாய்..அப்படின்னு கன்னு முன்னாடி காட்டிட்டு..கொத்துப் பரொட்டா கேட்டா, இல்லையின் சொல்லிட்டானுங்க.. அப்புறம் ஒரு வழியா, நம்ம ஊர்காரவங்க ஹொட்டல்.. இல்ல, இல்ல.. ரெஸ்டாரென்டுல ... கிடைக்குதுனு கண்டு படிச்சு, இப்போ எல்லாம், வீக் என்டுனா, கொத்துப்ப்ரொட்டா தான்... நீங்க சொன்னத, பெங்களுருல தான் கொத்துப்ப்ரொட்டா கிடைக்காமா நாக்க தொங்க போட்டு, ஒரு வழியா வீட்டுலெ செய்ய ஆர்ம்பிச்சேன்..தங்கமணிக்கு, இதில அப்படி என்ன இருக்குதோ..அப்படினு அலுத்துக்குவா.. அவங்களுக்கு என்ன தெரியும் கொத்துப்ப்ரொட்டா டெஸ்ட்
ஐயா,எங்க ஊரை விட்டுபுட்டீங்களே...
பதிலளிநீக்குராகவன்....விருது நகர் புரோட்டாவிற்கு
நேர் நேர் நிரை நேர்....
தேங்காய் சட்னியா???????
பதிலளிநீக்குசெய்முறைக்கு நன்றி
இதைத்தான் பசங்க சொன்னாங்களா? நல்லா இருடே.
பதிலளிநீக்குவக்கீல் நோட்டீஸ் எல்லாம் அனுப்ப மாட்டோம். நீர் சொன்னா மாதிரி யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்தான். நடத்தும்.