முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஸ்காட்ச்சுலாந்து "பெர்த்" ம் என் புகைப்படப் பொட்டியும்

போனவாரம் வீக்கெண்டுக்கு இங்க பக்கத்துல இருக்கற பெர்த் அப்படிங்கற ஊருக்கு சுற்றுப்பயணம்.

சுற்றுப்பயணம்னு தோள்ல ஒரு மஞ்சப்பைய மாட்டிக்கிட்டு கெளம்பறம்னா அங்க போய்ச் சேர்ற எடத்துல ஆட்டையப் போட்டு அனுபவிக்க ஒரு ஆளு மாட்ட வேணாமா?! அப்படி மாட்டுனவருதான் நம்ப ஓமப்பொடி சுதர்சன்.கோபால்! ரெண்டுநாளுக்கு சோத்தப்போட்டு, தூங்க எடங்கொடுத்து, குளிக்க சோப்பையும் கொடுத்து (பல்லு கையிலயே வெளக்கிட்டனுங்... ), ஸ்பீக்கரு ட்ரம்மு கிழிஞ்ச டீக்கடை சிலோன் ரேடியோ மாதிரி நான்ஸ்டாப்பா வாயால ராவுனதையெல்லாம் காதுல ரத்தம் வடிய கேட்டு, தூக்கத்துல விட்ட கொறட்டைய சகித்து (என்ன ஆச்சரியம்! எனக்கு கேக்கவே இல்லை!! ), கடைசியா பஸ் ஏத்திவிடற வரைக்கும் கூடவே இருந்து விருந்தோம்பல் தான் தங்கத் தமிழனின் உயர்ந்த குணம்னு நிரூபிச்ச அன்புத்தம்பிக்கு என் வணக்கங்கள்! ஆனால், என் பஸ் கெளம்புனது தெரிஞ்சதும் ஒரு துள்ளலா சந்தோசக் குதியலா அவரு வீட்டைப் பார்த்து ஓடுனதுதான் ஏன்னு புரியல...

ரெண்டு நாளா பேசுனோம்! பேசுனோம்!! அப்படி பேசுனோம்!!! இங்கன தனியா பேசக்கூட ஆளில்லாம தனிமையின் அமைதியில் குண்டலினி யோகம் பயின்று கொண்டிருக்கும் எனக்கு (நம்பீட்டிங்களா? ஸ்ஸப்பா.... எப்படியெல்லாம் இமேஜை ஏத்தவேண்டியிருக்கு! ) ரெண்டு நாள் முழுசா தமிழ் பேச ஓராளு கெடைச்சதே சந்தோசமான மேட்டரு! அப்ப மத்த நாளெல்லாம் துரைமாருங்க கூட எப்படி சமாளிக்கறேன்னு கேக்கறீங்களா?! எல்லாம் சைகை மொழிதான். சோதிகாவையே மிஞ்சிட்டம்ல?! :) (கவனிக்க! சோ. ஜோ அல்ல! இதிலிருந்து தெரியும் வரலாற்று உண்மை என்ன? )

காடு மலை மேடுன்னு இலக்கற்று திரிஞ்சதுல எடுத்த சில படங்கள் இங்கே.

இது என் 100வது பதிவு! ஸ்ஸப்பா.... முடியல!
















கருத்துகள்

  1. நூறுக்கு வாழ்த்துக்கள். அனைத்தும் நூத்துக்கு நூறு.

    பி.கு: உங்க காமெரா என்ன மாடல் தலைவா ?

    பதிலளிநீக்கு
  2. எல்லா படங்களும் கொள்ளை அழகு!!!
    அசத்துங்க!!
    வாழ்த்துக்கள்!! :-)

    படங்களில் எல்லாம் கொஞ்சம் ஓவராவே sharp-ஆ இருக்கு!! :-)

    பதிலளிநீக்கு
  3. எல்லா போட்டோவுமே அசத்தலா இருக்கு.

    பதிலளிநீக்கு
  4. படங்கள் எல்லாம் கொள்ளை அழகு.
    (அப்படியே வெள்ளக்கார அம்மணிக படம் ஒன்னு,ரெண்டு போட்டா பதிவு தீ பிடிக்கும்ல)

    பதிலளிநீக்கு
  5. இப்போதானா நூறு? ஆசானே, எப்படி இப்படி? நல்லா இருந்தா சரிதானுங்க.

    பதிலளிநீக்கு
  6. இளவஞ்சி

    நூறுக்கு வாழ்த்துக்கள்!
    அட்டகாசமான படங்கள்!
    அதுவும் அந்த முதல் படம்...மொட்டாகி, வெட்டாகி, பூத்து, காய்த்து எல்லாம் ஒரே போட்டோவில் பார்ப்பது போல் உள்ளது!

    மேலே குவிந்தும் கீழே விரிந்தும்...
    பின் புறம் எல்லாம் Blur செய்து, அழகாச் செஞ்சிருக்கீங்க!

    பதிலளிநீக்கு
  7. 100வது பதிவுக்கு வாழ்த்துகள். படங்கள் ரொம்ப அருமை. என்ன புகைப்பட பொட்டி வச்சிருக்கீங்க?

    பதிலளிநீக்கு
  8. இப்பத்தான் 100ஆ? ஆஹா... Anyway, வாழ்த்துக்கள். படமெல்லாம் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  9. படங்கள் ஓமப்பொடி எடுத்ததா ;)

    அருமை

    பதிலளிநீக்கு
  10. படங்கள் சூப்பர் தல!

    நூறுக்கு வாழ்த்துக்கள் :)

    பதிலளிநீக்கு
  11. சிபியாரே,

    // ntha varushathukkana(2007) 100 thana idhu? // மூனுவருசத்துல 100 எழுதனுக்கே நுரைதள்ளுது! இதுல வருசத்துக்கு 100ஆ?! :)

    அனானி,

    நன்றி! என்னிடமிருப்பது Sony DSC-H1

    இகொ,

    வாழ்த்துக்களுக்கு நன்றி :)

    CVR,

    படங்களை சின்ன லேப்டாப் மானிட்டர்ல பார்த்து post processing செய்யும்போது நல்லா இருக்கறமாதிரி தெரியுது. அப்பறமா பெரிய மானிட்டர்ல பார்த்தாதான் சார்ப்னெஸ் அதிகமா இருக்கறது தெரியுது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி! மாத்திக்கறேன்.

    ராசா, தம்பி,இளா, sowmya,

    வாழ்த்துக்களுக்கு நன்றி! :)

    பதிலளிநீக்கு
  12. ஜாலிஜம்பர்,

    // அப்படியே வெள்ளக்கார அம்மணிக படம் ஒன்னு,ரெண்டு போட்டா பதிவு தீ பிடிக்கும்ல//

    அதுசரி! போஸ் கொடுக்க எந்த புள்ளைங்களும் கிடைக்காததனால தானே இன்னமும் பூவையும் பில்டிங்கையும் புடிச்சுக்கிட்டு அலையறேன்! :))

    கண்ணபிரான்,

    இயற்கையின் விநோதங்கள் (அ) மனிதனுக்கு விநோதமாய் தெரியும் இயற்கை! :)

    பாராட்டுகளுக்கு நன்றி!

    சுட்.ஜீ, லஷ்மி, கப்பிபய,

    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    ஜெசிலா, அது Sony DSC-H1.

    பாபா,

    // படங்கள் ஓமப்பொடி எடுத்ததா ;) // அந்தாளுக்கு அதுக்கெல்லாம் எங்க நேரம்?! பெர்த் புள்ளைங்க நண்பிகளுடன் மேய(ய்க்க)றதுக்கே அவருக்கு டைம் பத்தறதில்லை! :)

    பதிலளிநீக்கு
  13. அய்யா நீர் கலைஞன்...

    பட்டையை கிளப்புகிறீர்...!!!!

    பதிலளிநீக்கு
  14. கொஞ்சம் முதுகைக் காமிங்க.. ஒரு "தட்டு" தட்டிக்கிறேன்.

    ப்ப்ப்ப்ரம்ம்ம்ம்மாதம்..........

    பதிலளிநீக்கு
  15. செந்தழல், ராம், பத்மா அரவிந்த்,

    வாழ்த்துக்களுக்கு நன்றி!

    தருமிசார், நன்றி!

    உங்க Single clicks திறமைகளை நீங்க ஏன் இப்பவெல்லாம் வெளிக்காட்டுவதில்லை?

    பதிலளிநீக்கு
  16. இளவஞ்சி 100 அடித்து வாழ்வாரே வாழ்வார்
    மற்றோர் எல்லாம் பீரு அடிச்சு வாந்தி எடுப்பர்!

    வாழ்த்துக்கள்!
    பொகைப்பட பொட்டி சொல்றிங்களே பொட்டி வாங்கும் போதே உள்ள இந்த படம் எல்லாம் வச்சு தருவாங்களா! நல்லா இருக்குங்க படம்லாம்!ஓசி சோறுனு சொல்றிங்க வெறும் 2 நாளில் கூடாரத்த காலிபண்ணிடிங்களே, கழுத்து மேல அன்பா கை வச்சு போயிட்டு வா ராசானு சொல்ற வரைக்கும் டேராப்போட வேணாமா?(தமிழர் பண்பாடு ஆச்சே) :-))

    பதிலளிநீக்கு
  17. யோகன்-பாரிஸ், சதியா, வவ்வால்,

    பாராட்டுகளுக்கு என் நன்றிகள்.

    // கழுத்து மேல அன்பா கை வச்சு போயிட்டு வா ராசானு சொல்ற வரைக்கும் டேராப்போட வேணாமா?// உண்மையில அதாங்க நடந்தது. சபை நாகரீகம் கருதி மரியாதை நிமித்தமான சந்திப்பு என்ற அளவில் ஒரு பில்டப்பில் வச்சிருந்தேன்! ஹிஹி...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு