"புதினா சாதம் செய்யப்போற! சரி... அதென்ன கூட கமகம? எப்படி செஞ்சன்னு மட்டும் சொல்லுடா என் வென்று... கமகமக்குதா இல்லையான்னு நாங்க சொல்லறோம்!"னு மக்கா நீங்க கொரலு விடறது எனக்கு கேக்குது. இருந்தாலும், ஒரு வெளம்பரம்... வேணாமா? சரி OK! வெறும் புதினா சாதம் செய்யலாம் வாங்க!
தேவையான பொருட்கள்:
போனவாரம் சொன்னதெல்லாம் தான்! ஆனா நல்லா கழுவி எடுத்துக்கங்க. கூடவே குக்கரும் வெயிட் வால்வும்!
புதினா - ஒரு கட்டு
கொத்தமல்லி தழை - ஒரு கட்டு
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பூண்டு - 5 பற்கள்
இஞ்சி - ஒரு துண்டு
பச்சை மிளகாய் - 2 (அரைக்கனுமப்பேய்! அதனால 2 போதும்! அதுக்குமேல உங்க பாடு!)
பட்டை லவங்கம்
பிரியாணி இலை
நல்லெண்ணை - 2 குழிக்கரண்டி
வெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி
பாசுமதி அரிசி - 2 பேருக்கு போதுமான அளவு. (என்னாது? நீங்க கொழ்ம்புக்கே 4 போகம் பாத்தி கட்டறவரா? எதுக்கு வம்பு? நாஞ்சொல்லறது 2 டம்ளரு அளவு! )
உப்பு - போதுமான அளவு
செய்முறை:
மொதல்ல அரிசியை ஒரு முறைக்கு மூணுமுறை நல்லா அலசிக்கழுவி 10 நிமிடம் ஓரமா வைச்சிருங்க.
சம அளவு ஆய்ந்து எடுத்த புதினா கொத்தமல்லி தழைகளுடன் பூண்டு இஞ்சி பச்சைமிளகாய் சேர்த்து மிச்சில கொஞ்சமா தண்ணி விட்டு மைய்ய அரைச்சுக்கங்க.
அடுப்பை பததவைச்சு குக்கரை மேல வையுங்க. (என்னது? போன வாரம் கடைசில அடுப்பை அணைக்கச் சொல்லாததால இன்னமும் எரிஞ்சுக்கிட்டு இருக்கா?! )
குக்கர்ல கொஞ்சம் நல்லெண்ணை விட்டு காய்ந்தவுடன் நசுக்கிய பட்டை, இலவங்கம், பிரியாணி இலை எல்லாம் சேர்த்து அதனுடம் சிறுதுண்டுகளாக நறுக்கிவைத்திருக்கும் வெங்காயம் தக்காளியை சேர்த்து பொன்னிறமாகற வரைக்கும் வதக்குங்க.
அரைச்சு வைச்சிருக்கற ஐட்டத்தை எடுத்து குக்கருல ஊத்தி கலக்கி பச்சை வாசம் போகும்வரை கிளருங்க. நல்லா கவனிங்க. பச்சை வாசம்! கலரல்ல! என்னதான் வதக்குனாலும் பொதினாவின் பச்சைகலரு போகாது! ஹிஹி...
ஓரமாய் எடுத்து வைத்துள்ள அரிசியில் இருந்து தண்ணீரை வடித்து விட்டு அரிசியை குக்கரில் இட்டு கிளருங்க.
அரிசி ஏற்கனவே ஊறியிருக்கறதுனால ஒன்ணரை மடங்கு தண்ணி விட்டா போதும். நான் வைத்த ரெண்டு டம்ளரு அரிசிக்கு மூணு டம்ளரு தண்ணி ஊத்துனேன்! சாதம் கொஞ்சம் ரிச்சா வரணும்னா கொஞ்சம் முத்திரிப்பருப்பை சேர்த்துக்கங்க. கூடவே மறக்காம உப்பு சேர்த்துக்கங்க.
அரிசியை நல்லா கிளரிவிட்டு குக்கரை மூடி சரியா ஒரு விசிலு.. ஒரே ஒரு விசிலுக்கு மட்டும் விடுங்க. அப்பறமா அடுப்பை அணைச்சு குக்கரை எடுத்து ஓரமா வைச்சிருங்க.
10 நிமிசம் கழிச்சு ஆவியெல்லாம் வடிஞ்ச பிறகு குக்கரை திறந்து மேலாக்க ஒரு ஸ்பூன் வெண்ணெய் விட்டு சாதம் ஒடையாம பக்குவமா வயசுப்புள்ளைக்கு வளையல் போட்டுவிடற லாவகத்தோட கிளருங்க!
அம்புட்டுத்தேன்! பக்குவமா அடுக்கி எவிடெண்சுக்கு ஒரு போட்டோ எடுத்துக்கிட்டு வெட்ட ஆரம்பிங்க. இதுக்கு தொட்டுக்க தயிர் வெங்காய பச்சடி அருமையா இருக்கும் என்பது ஐதீகம்!
தட்டுல உள்ளது எனக்கு. கண்ணாடி குண்டானில் உள்ளது அண்ணன் "ஏழையில் சிரிப்பில்" அவர்களுக்கு. தொட்டுக்க தயிர்வெங்காயம், பேக்டு சிப்ஸ். அப்பறம் ஆளுக்கு ஒரு ஓஞ்ச வாழைப்பழம். மேட்டர் ஓவர்!
(வாசம் புடிச்சு வழக்கம்போல லிண்டா வருவான்னு பார்த்து கதவை திறந்தா கிருஸ்துமஸ் தாத்தா நிக்கறாக! வந்தவரு சும்மாவா வந்தாரு? போன கிருஸ்துமஸ்சுக்கு விநியோகம் செஞ்ச ஸ்வீட்டு பாத்திரங்களையெல்லாம் முதுகுல மூட்டை கட்டிக்கிட்டு! அதனையும் நாந்தேன் கழுவுனேன்! )
I am definitely going to try this recipe tomorrow.This item looks so good. Keep posting more recipes.
பதிலளிநீக்குThanks.
Rumya
செய்து பார்க்கிறேன்!! கமகம மணம் வராட்டி உங்களை வந்து கேட்பேன்!!
பதிலளிநீக்குவணக்கம்,
பதிலளிநீக்குஎன்னை தமிழ்மணம் நட்சத்திர பதிவராக தேர்வு செய்திருக்கிறது என நான் உங்களுக்கு தெரியப்படுத்தினால், நான் சுயதம்பட்டம் அடிப்பதாகவா நீங்க எடுத்துக்கொள்வது...?!
ரைட்டு!!.. ரைட்டுன்னேன்..!!
பதிலளிநீக்குரிட்டர்ன் வந்ததும் வூட்ல அண்ணிக்கு ஒரு வேலை மிச்சம் :)
அடடா,நல்ல வேளை அடுப்பை நிறுத்தச் சொன்னீங்க.. இல்லாட்டா அடுத்த பதிவு வரை அப்படியே எரிஞ்சுகிட்டு இருந்திருக்கும்...
பதிலளிநீக்குபுதினா பச்சையாத்தான் இருக்கும், ஏன் புதினா சாதம் மட்டும் ப்ரௌனா இருக்கு??:))
அங்கன உக்காந்திருக்கிற பொம்மை எப்படி செய்றதுன்னு எப்போ சொல்லுவீங்க..?
பதிலளிநீக்குபடம் சூப்பர்...!!! ரைஸ் கொஞ்சம் வேவலியோ ??
பதிலளிநீக்கு//வணக்கம்,
பதிலளிநீக்குஎன்னை தமிழ்மணம் நட்சத்திர பதிவராக தேர்வு செய்திருக்கிறது என நான் உங்களுக்கு தெரியப்படுத்தினால், நான் சுயதம்பட்டம் அடிப்பதாகவா நீங்க எடுத்துக்கொள்வது...?! //
???
இந்த முறை மறக்காம எனக்கும் எடுத்து வெச்சிருக்குற உம்ம பெருந்தன்மையா நினைச்சா...
பதிலளிநீக்குசாதத்தை சாப்பிடாமயே தொண்டை அடைக்குது!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....!
//(என்னது? போன வாரம் கடைசில அடுப்பை அணைக்கச் சொல்லாததால இன்னமும் எரிஞ்சுக்கிட்டு இருக்கா?! )
பதிலளிநீக்கு//
அடப் பாவி! ஒரே வாரத்துல மூணு சிலிண்டர் காலியாகிப் போச்சுய்யா!
//10 நிமிசம் கழிச்சு ஆவியெல்லாம் வடிஞ்ச பிறகு //
பதிலளிநீக்குஏன் நாங்க இருக்கும்போதே குக்கரைத் திறந்தாத்தான் என்னவாம்?
வாசம் பாத்துட்டு இங்கயே இருந்துடுவோம்னுதானே!
:(
புதினாவுக்கு இயற்கையிலேயே கமகமக்கும் மணம் உண்டு என்று
பதிலளிநீக்குகுட்டிப்பிசாசுக்கு சொல்லிக்கொள்கிறேன்.
அடடா! ஆகா..படத்தப் பாக்கைலயே பகபகன்னு பசிக்கே...இளவஞ்சி வீட்டுக்குப் போனா....அடடா! பிரமாதங்க..இப்பிடி கலக்குறீங்க. சூப்பரு.
பதிலளிநீக்கு//Anonymous said...
பதிலளிநீக்குI am definitely going to try this recipe tomorrow.//
Rumya//
எதற்கும் இந்த நண்பர் நலமோடு வந்து சுவை பற்றி உறுதிபடக்கூறினால் செய்து பார்க்கலாம் என இருக்கிறேன்.:)
புதினா வேறு கொத்தமல்லித்தழை வேறா ?இரண்டும் ஒன்று என்றல்லவா நினைத்தக்கொண்டிருந்தேன்.
வூட்டுக்கு வந்தன்னைக்கு இப்படியெல்லாம் செஞ்சு போட்டிருந்தா,எங்க பெர்மனெண்டா டேரா போட்டுடுவாங்கன்னு தானே தயிர் சாதம் போட்டு அனுப்பிச்சீரு...
பதிலளிநீக்குஹூம்...நல்லா இருமைய்யா...
இளா ,
பதிலளிநீக்குகம கமக்கிறது இருக்கட்டும் சாதம் கசக்காம இருக்கா அத சொல்லுங்க ... நீங்க சொன்ன போல செஞ்சா கசக்குமே சாதம்!
ரம்யா,
பதிலளிநீக்குசீரியசாத்தான் சொல்லுதீகளா? :) வருகைக்கு நன்றி!
குட்டிபிசாசு,
// கமகம மணம் வராட்டி உங்களை வந்து கேட்பேன்!! // கண்டிப்பா வருமைய்யா! சமைக்காமலே கூட வரும்! ஏன்னா இது புதினா! :)
செல்வு,
ஏன்யா கொழப்புதீரு! நீர் எப்போ தெரியபடுத்தி நான் எப்போ அப்படி எடுத்துக்கிட்டேன்?! இதுபோக சுயதம்பட்டம் அடிக்க தெரிலன்னா அப்பறம் பதிவுகுல என்னத்த பொழக்கறது? :)
ராசா,
// ரிட்டர்ன் வந்ததும் வூட்ல அண்ணிக்கு ஒரு வேலை மிச்சம் // அதுசரி! எல்லாம் அங்கன பழகுன வேலைதான். அதனால பிரச்சனையில்லை! :)
வல்லியம்மா,
// ஏன் புதினா சாதம் மட்டும் ப்ரௌனா இருக்கு??:)) //
இது ஒரு நல்ல கேள்வி! :)
சாதம் பார்க்க பச்சையாத்தான் இருந்தது. ஆனால் போட்டோல அப்படி தெரியுது! என்னோட போட்டோகிராபி திறமையத்தான் நீங்க பாராட்டனும்! :)
தருமிசார்,
பதிலளிநீக்கு// அங்கன உக்காந்திருக்கிற பொம்மை // அது பாப்பாவோடதுங்க... மறந்துட்டு போயிட்டாளாம்! மறக்காம எடுத்துக்கிட்டு வர சொல்லியிருக்கா! எதுக்கும் நீங்க அவகிட்ட கேளுங்க :)
செந்தழல்,
// ரைஸ் கொஞ்சம் வேவலியோ ?? //
உதிரிஉதிரியா இருக்கறதுனால உங்களுக்கு அப்படி தெரியுதுபோல! ஒரு விசிலுக்கு மேலவிட்டாலும் கொழைஞ்சுரும்.
அனானி,
நம்ப ஸ்டாரு சும்மா தமாசி செய்யாறாப்புல! :) அவரு பதிவுல போயி என்னா சேதின்னு கொடைஞ்செடுங்க! :)
delphine,
// this is really good!// ஹிஹி...
ஏழையின் சிரிப்பில்,
// சாதத்தை சாப்பிடாமயே தொண்டை அடைக்குது! // சாப்பிட்டுப்பாரும்வே! மூச்சே நின்னுரும்! :)
நன்றி சொல்பவன்,
// அடப் பாவி! ஒரே வாரத்துல மூணு சிலிண்டர் காலியாகிப் போச்சுய்யா! // அதானே! இதுக்குமேல நன்றி சொல்லுவீங்க?! :)
ஆவி அம்மணி,
// ஏன் நாங்க இருக்கும்போதே குக்கரைத் திறந்தாத்தான் என்னவாம்? // பேஷா செய்யலாமே!ஆனா அப்பறம் உங்ககூடத்தான் நாங்களும் ஆவியா திரியனும்! :)
நானானி, சரியாச்சொன்னீரு!
பதிலளிநீக்குஜீரா,
// இளவஞ்சி வீட்டுக்குப் போனா....அடடா! // Always Welcome! :)
தீவு,
// புதினா வேறு கொத்தமல்லித்தழை வேறா ?இரண்டும் ஒன்று என்றல்லவா நினைத்தக்கொண்டிருந்தேன். // அது சரி! நீங்க எதுக்கும் ரம்யா வந்து சொல்லறவரைக்கும் வெயிட் பண்ணுங்க! :)
சுதர்சன்.கோபால்,
// தயிர் சாதம் போட்டு அனுப்பிச்சீரு...// அதானே! உங்க ஞாபகசக்திடாம் புகழ்பெற்றதாச்சே! இல்ல.. 'சுயநினைவோட' இருக்கறப்ப சாப்பிட்டதைமட்டும் சொல்லறீரா?! :)))
வவ்வால்,
// நீங்க சொன்ன போல செஞ்சா கசக்குமே சாதம்! // அதுக்குத்தான் அரைச்சுவிட்டதை நல்லா பச்சைவாசம் போகறவரைக்கும் வதக்கனுங்கறது. இதுபோக கொத்தமல்லி தழையும் சேர்க்கறதால புதினாவோட அதீத வாசமும் கசப்பும் இருக்காது.
வேற ஏதாச்சும் வழிமுறையிருந்தாலும் சொல்லுங்க...
அண்ணாச்சி கள கட்டுது போங்க..என்னடா அஙக்ன வந்தா சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவோம்ன்னு இருந்தேன்...தோ ஓடிப் போயி டிக்கெட் எடுத்துடறேன் :)
பதிலளிநீக்குடுபுக்ஸ்,
பதிலளிநீக்குஉமக்கு இல்லாததா?! சீக்கிரம் வாங்க! வீட்டு பக்கத்துலயே டெஸ்கோவும் இருக்கு! :)))
Hey!
பதிலளிநீக்குI Learned To Write in Tamil Through You Site. HaHaHa!
கமகமன்னு பெதினா சாத வாசம் ஆளைத் தூக்குதே!
நான் தேடிகிட்டிருக்குற என் வருங்காலக் கணவருக்கான அத்தனை தகுதிகளும் உங்ககிட்ட இருக்குன்னு நினைக்கிறேன்!
யம்மா தாயே லிண்டா,
பதிலளிநீக்கு// நான் தேடிகிட்டிருக்குற என் வருங்காலக் கணவருக்கான //
ஒரு புள்ள குட்டிக்காரன் கிட்ட பேசற பேச்சா இது?! அப்ப்ப்பிடியே வேற பக்கமா போயி தேடு தாயே!!!
போற போக்கைப்பார்த்தா அடுத்தது ஜெயில் களி கிண்டுவது எப்படின்னுதான் பதியனும் போல! :)
//
பதிலளிநீக்குபோற போக்கைப்பார்த்தா அடுத்தது ஜெயில் களி கிண்டுவது எப்படின்னுதான் பதியனும் போல//
You are always Welcome!
We Are eagerly waiting To Learn To Cook many Food Items Including Kali!
maapu vaikaporangaya aapu!
பதிலளிநீக்குetho pona poguthey nu samayal solli thantha, jail kali kinda aal illa nu jailor koopidararu
etho oru sathi valai unga valai pathivai suthi irukku nu theriuthu
saakrathai ila ..vanchika poranga :)
பொறவு என்ன வெத்தல பாக்க வச்சா ஒங்கள அழைக்கிறது பதிவ படிக்க வாங்கன்னு.. அதான் அப்படிச் சொன்னேன். உம்ம பேச்ச கேட்டு புதினா சாதம் செஞ்சேன். கசக்குது
பதிலளிநீக்குசெல்வு,
பதிலளிநீக்கு// உம்ம பேச்ச கேட்டு புதினா சாதம் செஞ்சேன். கசக்குது //
நெசமாவா சொல்லுதீக?! பச்சைவாசம் போக வதக்கச்சொன்னேனே! செஞ்சீரா? இல்லை அரிசிக்கு சரிசமமா புதினாவை அள்ளி விட்டுட்டீரா? சமைச்சு சாப்பிட்ட நான் இன்னும் குத்துக்கல்லாட்டம்தான் இருக்கேன்! அதுவரைக்கும் சந்தோசப்பட்டுக்கறேன்! :)
I tried this mint rice. We all loved it. Thank you again for this post.
பதிலளிநீக்குRumya
Rumya,
பதிலளிநீக்குஎன் வயித்துல பாலை வார்த்தீங்க! மக்கா கசக்குதுன்னு சொன்னபோது நாம சொல்லறது நமக்கு மட்டும்தான் நல்லா வருமான்னு கொழம்பிட்டேன்.
உங்க ஒருத்தரோட ஸ்டேட்மெண்ட் போதும். இத வைச்சே டெல்லி வரைக்கும் பேசுவேன்! :)))
நன்றி!