முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிம்போமேனியாக் ( Nymphomaniac )



நிம்போமேனியாக்குனு ( http://www.imdb.com/title/tt1937390 ) இரு பாகங்கள் கொண்ட ஐந்துமணிநேர ஒரு மெச்சூர்ட்ட் ஆடியன்ஸ் படம். காமத்தை வாழ்வாக கொண்ட ஒரு பெண்ணின் கதையை வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் சொல்வதாக செல்லும் கதை. சிறுவயது சுய இன்பம், பதின்ம அதீத காமவேட்கை, அடங்காக்காமம், வலியின்பம், பலதார உறவுன்னு கட்டுக்கடங்காத வாழ்க்கையை கட்டுக்கோப்பாக சொல்லும் கதையோட்டம். ஆரம்பத்தில் சீனுக்காக பார்க்க ஆரம்பித்து பின்பு ஒவ்வொரு கட்டத்திலும் அதை பிரித்து ஆராய்ந்து உண்மையை பட்டவர்த்தனமாக உணரவைக்கையில் அதிர்ச்சிமதிப்பீடுகள் எல்லாம் பின்னால் போய் முகத்தில் அறையும் உணர்வுகளின் நிஜங்களில் அடிபட்டு படம் முடியமுடிய வெறுமையுள் இழுபட்டு தேமேன்னு பார்க்கவைக்கும் கதை.



ஒரு கட்டத்தில் சுய கருக்கலைப்பு அதிகுரூரமாக காட்டப்படுகிறது.அதாவது மக்கள்பேறு என்பதை அதி உன்னதமான உணர்வாகவும் வாழ்வின் கொடையாகவும் உணர்ந்துவாழும் வாழ்க்கையில் அதை வெறும் கருஅழிப்பாக சொல்லும் காட்சி. நானே செய்துகொண்டதால்தானே இத்தனை அதிர்ச்சி.. இதுவே மருத்துவர் எப்படி எப்படி செய்வார் தெரியுமா சிசுவின் தலையைப்பிடித்து இழுக்கும் கருவிக்கு பெயர்தெரியுமா என வசனங்கள் வருகையில் அதிர்வுக்காட்சியில் கிடைத்த உலுக்கல் வெறும் மிகைமதிப்பாக பார்க்கவும் வாய்ப்புண்டு என போகும் படம். சுருங்கச்சொன்னால் சிறுபத்திரிக்கை எழுத்துமொழியில் நம் விமர்சகர்கள் பக்கம்பக்கமாக ஆயிரத்தெட்டு நேம்டிராபிக்கோடு பிரித்துமேய வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கும் திரைக்காவியம். எனனசெய்ய... எல்லா அறிவாளி விமர்சகர்களுக்கும் மசாலாபடங்களை பிச்செரியத்தான் சமீபத்தில் ஆர்வம். பின்ன சுபா ராஜேஷ்குமாரெல்லாம் தொடர்ந்து திரைவாய்ப்பு பெறுகையில் எவ்வளவு காலம்தான் அம்பதுபேர்களுக்கு ஆராய்ச்சிகட்டுரைகளை படைத்துக்கொண்டிருப்பது?


சொல்லவந்த மேட்டரு அதுவல்ல. முதல் பாகத்தில் Mrs. H என்றொரு பகுதி வருகிறது. பலகாதலர்களோடு... சரிசரி.. பல கள்ளக்காதலர்களோடு வாழும் காலத்தில் ஒரு காதலன் காமத்தை தாண்டி உணர்வுவயப்பட்ட காதலில் இப்பெண்ணோடு விழுகிறான். திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கு தகப்பன். பதின்மத்தில் எட்டாக்காதல் நாற்பதில் கிட்டியதில் தடம் புரளும் கட்டம். அவளோ உன்னோடு முழுக்க வாழமுடியாது. உன் குடும்பம் இருக்குன்னு துரத்தி விடுகிறாள். காதலை குடும்ப அமைப்பில் தொலைத்து மீட்டெடுக்க வழியில்லாமல் மூச்சுத்திணறலில் இருக்கும் அந்த அம்மாஞ்சி குடும்பத்தை பிரிந்து இவளோடு வாழலாம் என பெட்டியோடு கிளம்பி வருகிறான். அடுத்துவரும் பதினைந்து நிமிடங்கள் அதகளம். மெத்தர்ட் ஆக்டிங்னா இதுவான்னு தெரியலை. ஆனா உமா தர்மன் திறமையில் பேயாட்டம் ஆடியிருக்கும் காட்சி.




அந்த ஆளின் மனைவியான உமாதர்மன் அவனை இவளது வீட்டில் விட்டுவிட்டு போக குழந்தைகளோடு வருகிறாள். மாடிப்படிக்கட்டின் சைடில் ஒளிந்துகொண்டு குசுகுசுப்பாய் உங்கப்பா உள்ளபோயிட்டாரா பாருன்னு ஆரம்பிக்கும் காட்சி. குழந்தைகளின் குரல்கேட்டு இவள் அவர்களை வீட்டினுள் அழைக்க அவள் வாழ்வில் ஏமாற்றப்பட்ட கணவனால் இல்வாழ்க்கையில் வஞ்சிக்கப்பட்ட எல்லா உணர்வுகளையும் உள்ளடக்கி வீட்டினுள் வந்து அமர்கிறாள். அறிமுகம் செய்துகொள்கிறாள். வீட்டினை பார்க்க விரும்புகிறாள். அவர்கள் வீட்டில் தோற்றுப்போன படுக்கையறையை இந்த வீட்டில் வெற்றிபெற்ற படுக்கையறையோடு ஒப்பிட்டுப்பார்க்கிறாள். இந்த அறையில் தான் உங்க அப்பாவை நாம் இழந்தோம்னு குழந்தைகளுக்கு சொல்கிறாள். இனிமே அப்பாவை பார்க்க முடியாது அப்பாவிடம் எதையும் எதிர்பார்க்காதீங்கன்னு தேற்றுகிறாள். அந்த நேரம் பார்த்து இவளின் இன்னொரு காதலன் பூங்கொத்தோடு வர நிலமை சூடுபிடிக்கிறது. எனக்கும் இதுமாதிரி தகுதியான ஆளை தேர்ந்தெடுக்கும் அறிவில்லாம போயொருச்சேன்னு குத்துகிறாள். அப்பான்னு அழுதுகொண்டு ஓடும் பையனை அடித்து பிரித்திழுக்கிறாள். கணவனை அறைந்துவிட்டு கார்சாவியை வீசிவிட்டு குழந்தைகளை இழுத்துக்கொண்டு ஆற்றாமையின் வலியின் அனைத்துக்குமாக சேர்ந்து வீட்டிவிட்டு பெரிய அகவலோடு போகிறாள்.


எனக்கு இதைக்கண்டு முடிக்கையில் ஈரக்குலையெல்லாம் அறுந்துவிட்டது. அவள் செய்யும் ஒவ்வொரு செயலும் சொல்லும் குடும்ப அரசியலை அல்லது குடும்ப அமைப்புக்கு தேவைப்படும் காய்நகர்த்தல்களை முன்னிருத்தும் செய்கைகள் தான். வஞ்சிக்கப்பட்ட பெண்ணாக குழந்தைகளுக்காக வாழ்வை அம்மா ஸ்தானத்தில் மட்டுமே வாழ்ந்து மனைவியின் ரோலை கைதவறவிட்ட பேதையாகத்தான் தன்னை காட்சிப்படுதுகிறாள். ஆனால் நடக்கும் இந்த நிகழ்வுகள் எதிலுமே சம்பந்தமில்லாமல் மலங்க மலங்க பாசமான அப்பாவை பிரிய இயலாமல் கதறும் குழந்தைகளைப்பார்க்கையில் வாழ்வில் ஒருகட்டத்தில் ஆண்கள் சுயத்தை முன்னிருத்தாமல் மனைவி அம்மாவானதைப்போல கணவனும் அப்பாவாக வாழ்வை அர்ப்பணித்து வாழ்ந்துவிடுதல் மிகநலம் என்று தோன்றியது. மிடில்க்ளாஸ் மோரானாக இருப்பதுதானே தவறு. மிடில்க்ளாஸ் மாதவனாக வாழ்ந்து தீர்வதில் நம்மைத்தவிர நம்மை நம்பிச்சாரும் எத்தனை உயிர்களுக்கு எத்தனை நன்மை?


பிரட்சனை அள்ள அள்ளத்தீராத குறையாத ஆண்களின் கடும்புனல் காமம்தானே? ஊரெல்லாம் சுற்றிவந்தாலும் தீர்ந்து தேய்ந்து அழிந்து தொலையாத அறுத்தெறிய இயலாத அந்த காமக்காதல் உடலுக்குள்ளேயே அப்பாவேடத்தின்கீழ் அமுங்கி நாறி சீப்பிடித்து மனமுள் வாழ்ந்து களித்துதீரும் வக்கிரம் ( உண்மையில் உக்கிரம் ) வாழ்வின் பகுதியாக மாறித்தொலையட்டுமே. குழந்தைகள் பாதிப்பின்றி வாழ்ந்து மலரட்டும்.


ஆகவே நாற்பதில் இல்லறத்திலும் பொருளாதாரத்திலும் "செட்டிலா"கிவிட்டதாய் வரும் நினைப்பில் கிடைக்கும் அதிகாரத்தில் மீண்டும் பதின்மத்தில் ஏமாந்த இழந்த காதல்களை செய்துபார்க்க வரும் துளிர்ப்பினை அறுத்தெறிந்து தன்கையே தனக்குதவின்னு மனதினுள் வாழ்ந்து கடத்தல் உத்தமம் என்கிற தெளிவினைக்கொடுத்த உமா தர்மனுக்கு நன்றி :)



கீதப்ப்ரியனின் அருமையான பதிவு -


கருத்துகள்

  1. //அந்த ஆளின் மனைவியான உமாதர்மன் அவனை இவளது வீட்டில் விட்டுவிட்டு போக குழந்தைகளோடு வருகிறாள்.//

    அதான ... எப்பவோ இந்த வரிகளை ஏற்கெனவே வாசித்திருக்கிறோமென ஒரு மணி அடித்ததே....

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

டக்கரு டக்கரு மக்கள்ஸ்...

வருத்தம் தான் எனக்கு. போன நாடுகளில் எல்லாம் தமிழன் கூட்டாக மூனுநாள் ஒரு செயலை சேர்ந்து செய்யமுடியுமான்னு கேட்ட மத்த மொழிகாரனுக முன்னாடி தலைகுனிஞ்சவந்தான். ஊருக்கு நாலு தமிழ்சங்கம் வைத்து போட்டிபோட்டு இயல் இசை நாடகம் வளர்க்கும் மக்கள்னு அவங்க சிரிக்கறப்ப செம கடுப்ஸ் ஆனவந்தான். அவங்களை ஜெயிக்கறதுக்கு ”முலாயம் எல்லாம் மேட்டராய்யா? எங்க முதல்வரையே 73 நாள் யார் கண்ணுலயும் காட்டாம வைச்ச தமிழ்மக்கள்டே”ன்னு தமாசுக்கு சவடாலடிச்சந்தான். இருந்தாலும் பொங்கலின் போது அவனுங்க முன்னாடி நிஜமாகவே பெருமையாக நெஞ்சம் நிமிர்த்தி சொல்ல இந்த சல்லிக்கட்டு போராட்டம் நடந்த விதம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. தினந்தினம் கூடும் கூட்டத்தையும் அதன் ஒழுங்கமைவையும் சுயகட்டுப்பாடுகளையும் அவர்கள் பார்த்துப்பார்த்து வாயைப்பிளந்து மாய்ந்து போனார்கள். இப்படியும் ஒரு போராட்டம் இந்தியாவில் சாத்தியமா அதுவும் கல்வியகங்கள் மோல்டு செய்து பிதுக்கித்தள்ளும் இளையோர்கொண்டு என்று. மூன்றாம் நாளில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் வெளிவர நிஜமாகவே இந்த மக்கா ஆச்சரியத்தில் வாயடைச்சு நின்னானுக. சரி விடுங்க. எல்லாம் ஏழுநாளைக்குதானே. அதான் ...

நினைவுகளைத் தொடுதல்...

இ ந்தப் பயணம் அவசரகதியாய் ஒரு மாதம் முன்பாக மட்டுமே திட்டமிட்டது தான். என்றாலும் கிளம்புவதற்கு ஒரு வாரமாகவே என் முகத்தில் படர்ந்து பூத்துக்குலுங்கிய தேஜசை.. சரி... தம்பாக்குல சிரிக்கும் வழியலை வீட்டார் கண்டுகொண்டு நமட்டுச் சிரிப்போடுதான் என்னை கையாண்டு கொண்டிருந்தனர். பசங்களுக்கே என் வழியல் பின்பான பம்மலை பார்த்து கொள்ளச்சிரிப்பு. வீட்டம்மா தான் விமான நிலையத்துக்கும் கொண்டு வந்து விட்டார். அறிவுரை வேற... ”அந்த லூசு ராமாட்டம் இருக்காம அப்படியே சிங்கப்பூரு ப்ளைட்டு புடிச்சு போயிருய்யா.. பழைய நெனப்புல இங்கன ரிடர்ன் ஆகிறாதிங்க..”றதென்ன... மகள் "யம்மோவ்.. அப்பா மட்டும் அப்படியே போயிட்டாருன்னா எனக்கு ஐபேடு வாங்கித்தரனும் ஆமா..”ங்கறதென்ன... அதைக்கேட்டுட்டு மவன் அப்பங்காரனை பார்சல் கட்டி அனுப்பப் பாக்கறாளுங்கறதைக் கூட புரிஞ்சுக்காம ”அப்படின்னா எனக்கு ஏர்பாடு...”ன்னு அடம் புடிக்கறதென்ன... ங்கொப்புரான... குடும்பமா ஓட்டுறாய்ங்களாம்! அண்ட்ராயர் பேமிலி என்னிக்கும் ஆய்போனுகளை தொடாதுங்கறது தெரிஞ்சிருந்தாலும் பிட்டைப் போட்டு பாக்கறாங்களாம். நானும் ஒரு வீராப்புல ”அப்படித்தான் மக்கழே ஆவப்போவுது...

சமூகநீதி

நம்மில் ஒரு எலைட் குரூப்பு உண்டு. அவர்க்கென ஒரு வழமை உண்டு. எங்க தாத்தா ஒன்னாப்பு கூடப் படிக்காதவருன்னா அவருகாலத்துக்கு முன்னயே 1920லயே ஓஹோன்னு படிச்ச ஊரு இது புழுகாதம்பாங்க. எங்கப்பாருதான் மொதமொத பேண்ட் சட்டை எங்க குடும்பத்துல போட்டவருன்னா உங்கூரு ராஜம் டைலர்ஸ் 4 தலைமுறையா 100 வருசமா துணிதைக்கறாப்ல போவியாம்பாங்க. அரிசிச்சோறு சாப்புடத்தான் எங்கப்பாரு பள்ளிக்கோடம் தவறாம போனாருன்னா யானைகட்டி போரடித்த நாடுய்யா இது அசிங்கப்படுத்தாதம்பாங்க... அடேய் படிச்ச பஃபல்லோக்களா.. நாங்க எந்த நெலமையில இருந்து வந்தம்னு நாங்கதாண்டா சொல்லனும்? இதைச் சொல்லறது உங்க இரக்கத்தைச் சம்பாதிக்கவோ எங்க கழிவிரக்கத்தைக் காட்டிக்கவோ இல்லை. இப்படி இருந்தவங்கதான் இன்னைக்குப் படிச்சு வேலைக்குப் போய் நின்னுட்டம்னு அர்த்தம். அப்படி நின்னதுல கிடைக்கற கெத்துலயும் தைரியத்துலயும்தான் ( ஏன் திமிருன்னே சொல்லிக்கங்களேன்... ) இதை வெளிப்படையா மறைக்காம சொல்லிக்கற தெளிவு கிடைச்சிருக்குன்னு அர்த்தம். இன்னமும் சோத்துக்கில்லாம அடுத்தவரை கிஞ்சுக்கிட்டு அண்டி வாழும் வாழ்வில் இருந்து வெளிவராம உள்ளுக்குள் குமைஞ்சுக்கிட்டு இருப்பவர்க...