முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2005 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாகரீகம் எனப்படுவது யாதெனில்...

என் தோழி ஒருத்தியிடம் இருந்து சில நாள்முன்பு வந்த மின்-அஞ்சல் இது. படிச்சிட்டு அப்படியே உள்ள இருந்து பொங்கிடுச்சி. அவளது அனுமதியுடன் இது உங்கள் பார்வைக்கு... என் மொழிபெயர்ப்பின் விளைவுகளை அறிவேனென்பதால் தமிழ்ப்'படுத்த'வில்லை... மன்னிக்கவும். " Hi, Evalo seekirama naan anupina mailukku reply panni irukeenga!! Romba nalladhu!! I have a lot to talk to u but what I thought was Let this not be a vetti pechu mail. Let there be something useful in this. I will share with a very nice experience of mine that happened some Six or seven months ago!! My mother, myself and my aunt, we happened to go to Nangannalur one day for a pooja!! We had to go to Mambalam station and from there we need to catch a train to reach the place. Well, while returning from the pooja sat at about 9.00 PM to the railway station, this incident happened. We were waiting in front of the ladies compartment (Means the place where the ladies compartment in the train comes). U have a three-seater there .my mother ...

கொசுக்கடியில் இருந்து தப்புவது எப்படி?

என்னடா இது.. இவன் ஒரு அல்பமான மேட்டரோட இன்னைக்கு கெளம்பி இருக்கானேனு நீங்க முனுமுனுக்கறது காதுல விழுது. ஆன இது அவ்வளவு லேசான சமாசாரமில்லைங்க... கொஞ்சம் வெவரமா இருந்தா இத படிச்சி தப்பிச்சிக்கங்க.. இல்லையா, உங்க பாடு... கொசுவண்ணார் பாடு.. 1. மொதல்ல ஒரு கொசு கடிக்க ஆரம்பிச்சதும் அதை அடிக்காம அப்படியே அமைதியா சிரிச்ச மொகத்தோட ஒக்கார்ந்திருங்க. என்னது? பக்கத்துல பொண்டாட்டி படித்துகிட்டு இருக்கறப்ப சிரிக்க முடியாதா?! Try பன்னுங்க சார்... நம்பநாள முடியாதது எதுவுமே இல்லை.(பொண்டாட்டி தூங்கும் போது..ஹிஹி..) கடிக்கற கொசு லைட்டா கொளம்பிபோயி வேற எடத்துல ஒக்கார்ந்து கடிக்க ஆரம்பிக்கும்.. அப்பவும் உடாம புன்(ண்)சிரிப்போட இருங்க.. இங்கதான் இருக்கு நம்ப ராஜரகசியம். கொசு ரொம்ப நெகிழ்ச்சி ஆகி மத்த கொசுங்க கிட்ட போய் வடிவேலு ஸ்டைல்ல "எவ்வளவு கடிச்சாலும் தாங்கறாண்டி.. இவன் ரொம்ப நல்லவன்ன்ன்ன்ன்ன்னு.." சொல்லி ஓன்னு அழும்... கடிக்கறது எல்லாமே பொம்பள கொசுங்க சார்... அவிங்க அழுது முடிக்கறதுக்குள்ள விடிஞ்சிரும். இந்த சென்டிமென்டல் கேப்புல டபார்னு கவுந்துடுங்க... 2. சங்கீத பேமிலியா நீங்...

அனுக்கி தேவை

பூவையர்க்கோர் விண்ணப்பம்... அன்பாய் அணைத்து முத்தம் கொடுத்து இதமாய் தட்டி எழுப்பிவிடவும் எண்ணை தேய்த்து உடம்பு பிடித்து தலையை அலசி குளித்துவிடவும் துணிகளை துவைத்து உலர்த்தி மடித்து காலையில் அனைத்தும் செட்டாய் வைத்தும் வெண்ணிற சோறு கோழி வருவலை நாக்குக்கு ருசியாய் பொங்கிப்போடவும் குறுக்கிடாமல் நான் பேசக்கேட்டும் கேட்கும்போது மட்டும் பேசியும் வாரஇறுதி தம்மு தண்ணியை புலம்பல் இன்றி மகிழ்வாய் ஏற்றும் அம்மா அப்பாவை கண்போல் பார்த்தும் மாமா மாமியை அண்டவிடாமலும் எனக்கு மட்டும் அழகாய் தெரிந்தும் இரவின் ஆட்டத்தை சொல்லி மகிழ்ந்தும் தினப்படி செலவை சொல்லாமல் மறைத்தும் கூடி வாழவோர் அனுக்கி தேவை... அகவை ஒரு இருபதுக்குள்... ஒரு கூடுதல் தகவல்...! மேற்தகுதிகள் இருப்போர் சமமாய் வாழ அனுக்கன் தேட எண்ணம் இருக்கும் அப்படியொருவன் உலகில் இல்லை.. தேடுதல் அலைச்சல்... கால விரையம்... அரிய வாய்ப்பு... மகிழ்வுடன் ஏற்பீர்...!

சொல்லைப்பற்றி சில சொற்கள்

நீயும் நானும் எழுதியதாலேயே அவைகள் மீது உரிமையில்லை உன்னாலும் என்னாலும் அறியப்படாததாலேயே அவைகள் ஒன்றும் அந்நியமில்லை புதிதாய் ஒன்று புலப்படும்பொழுது கிடைக்கும் ஒரு விட்டுப்போன உறவு திடும்மெனத்தான் ஆகிறது அவைகளுடன் அறிமுகங்களும் காராபூந்தியும் வறுகடலையுமாய் ஆறாம் ரவுண்டில் வாயிலெடுதாற்போல சில அருவருப்பாய்... நல்ல கலவியின் நடுவில் கைக்கெட்டாத முதுகின்பரப்பில் உணரும் கொசுக்கடியாய் சிலது எரிச்சலாக... நண்டூருது நரியூருதின் போது குழந்தையின் உடம்பில் பொங்கும் தொற்றுக்களிப்பின் இனிமையை போல சிலது... எதுவாய் இருப்பினும் ஞாபகதிரட்டில் அவைகள் சிலநாள் முன்வரிசையில் முன்னாள் காதலிகளின் பெயர்களைப்போல... கபாலத்தை கசக்கி இதயத்தை ஊடுருவி அகத்தில் ஆழ்ந்தும் கிடைக்காத ஒன்று எங்கோ எதற்க்கோ அலைந்த சோர்வின் வெறுமையின் போதில் பளீரென கண்முன்... கொடுப்பினைதான் இது... அல்பமாய் இருப்பினும் நம்பாப்பாவை கொஞ்ச கிடைத்தது நேற்றொன்று நன்றாக இருக்கிறதா சொல்... "ஜிஞ்ஜிக்குஜிக்கா ஜீ..."

ஜிம்மியும் சில நிகழ்வுகளும்...

ஒவ்வொருமுறை உதைபட்டாலும் ஜிம்மிதான் கழற்றுமென் காலுறையை அதில் எனக்கொரு வரம்புமீறலும் அதற்கொரு ஆத்மதிருப்தியும் தளைகலற்ற அன்பின் சிறந்த சான்றை தெரியாதவைகளாகவே இருக்கின்றன நாயில்லா வீடுகள் ஞாயிறு வாங்கும் ஒருகிலோ கறியும் ரெண்டுரூபாய் எலும்பும் சரிசம குதூகலம் எங்களுக்கும் அதற்கும் உணவிற்கே அது உண்மையாய் நடப்பினும் நேர்மையுண்டு அதில் நாம் அப்படியா என்ன? சாதம் பற்றாத கடைசி கல்யாணபந்திபோல ஒரு குறையாகத்தான் இருக்கிறது ஜிம்மிக்கொரு நிழற்படம் இல்லாததும் அன்பு மறுதலிக்கப்பட எப்பொழுதும் வாய்ப்பில்லை அம்மாவிடமும் ஜிம்மியிடமும் டேக் இட் பார் கிரான்டடுகள் அனைவருக்கும் பார்த்துச்செய்ய வீட்டுக்கொரு அம்மா அம்மா மட்டும் பார்த்துக்கொள்ள வீட்டுக்கொரு ஜிம்மி அம்மாவும் ஜிம்மியும் ஒரேவகையில் இருக்கும் வரை உதாசீனப்பட்டும் போனபிறகு அங்கலாய்ப்பாய் பேசப்பட்டும் வண்டியில் மாட்டிய ஜிம்மி கூழாய் போனபோது கதறித்தீர்த்தார்... அக்கா ஓடிப்போனபோது "ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்" என்றதோடு நின்ற அப்பா இப்பொழுதும் போகிறது வாழ்க்கை ஆளுக்கொரு அறையிலும் அதில் டிவியும் ஃபோனுமாய் வெட்கமாகத்தான் இருக்கிறது ஜிம்மியைபற்ற...

ஊடலும் பிறகு ஊடலும்...

அறை முழுவதும் இரைந்து கிடக்கின்றன வெறுப்பில் தோய்ந்த வார்த்தைகளும் அர்த்தமற்ற வசவுகளும் முழுதாய் விலக்கமுடியா பிணைப்பில் எங்களுக்குள் விலகியிருக்க எப்போதும் போர்பரணி ஒவ்வொரு முறையும் கேவலப்படுகின்றன பழையகாதலும் அதன் சாட்சிகளும் கூடவே சுற்றாரும் இன்றும் அதேபோல் எங்கள் குழந்தை புரியா மிரட்சியும் பொங்கும் அழுகையும் உடலில் நடுக்கமும் இம்முறையும் தவறாமல் சிரிக்கின்றன கிப்ரானும் தம்மபதமும் நொறுக்கப்பட்ட சுயங்களும் மாண்புகளும் காட்சிப்பொருளாய் ஒருவரையொருவர் ஈர்த்துக்கொள்ள தவமாய் தவமிருந்தோம் இப்போது புரிந்துகொள்ள மட்டும் நேரம் இருப்பதேயில்லை படுக்கைகள் பிரியும் ஒவ்வொரு இரவும் அவளுக்கு எப்படியோ கரமைதுனத்தில் கரையுமென் காமம் எவளையோ நினைத்தபடி