பூவையர்க்கோர் விண்ணப்பம்...
அன்பாய் அணைத்து முத்தம் கொடுத்து
இதமாய் தட்டி எழுப்பிவிடவும்
எண்ணை தேய்த்து உடம்பு பிடித்து
தலையை அலசி குளித்துவிடவும்
துணிகளை துவைத்து உலர்த்தி மடித்து
காலையில் அனைத்தும் செட்டாய் வைத்தும்
வெண்ணிற சோறு கோழி வருவலை
நாக்குக்கு ருசியாய் பொங்கிப்போடவும்
குறுக்கிடாமல் நான் பேசக்கேட்டும்
கேட்கும்போது மட்டும் பேசியும்
வாரஇறுதி தம்மு தண்ணியை
புலம்பல் இன்றி மகிழ்வாய் ஏற்றும்
அம்மா அப்பாவை கண்போல் பார்த்தும்
மாமா மாமியை அண்டவிடாமலும்
எனக்கு மட்டும் அழகாய் தெரிந்தும்
இரவின் ஆட்டத்தை சொல்லி மகிழ்ந்தும்
தினப்படி செலவை சொல்லாமல் மறைத்தும்
கூடி வாழவோர் அனுக்கி தேவை...
அகவை ஒரு இருபதுக்குள்...
ஒரு கூடுதல் தகவல்...!
மேற்தகுதிகள் இருப்போர் சமமாய் வாழ
அனுக்கன் தேட எண்ணம் இருக்கும்
அப்படியொருவன் உலகில் இல்லை..
தேடுதல் அலைச்சல்... கால விரையம்...
அரிய வாய்ப்பு... மகிழ்வுடன் ஏற்பீர்...!
காருக்கு விளம்பரம் கொடுக்கலாமா வேண்டாமான்னு தயங்கி தயங்கி கொடுத்துட்டு இங்க பாத்தா....
பதிலளிநீக்குஉண்மையிலேயே உலகம் ரம்ப பெர்சு மாமே :-)
மூக்கன் சார்...
பதிலளிநீக்குகாரு வாங்கத்தான் குழம்பனும்... இதுக்கெல்லாம் ஒரு கொழப்பமும் வராது... :)
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி...
இளவஞ்சி!
பதிலளிநீக்குஉங்க பேர் நல்லா இருக்குங்க!. கவிதையும் நல்லாத்தான் இருக்கு..., நீங்க கேட்ட எல்லாம் கிடைக்கும், உகாண்டாவில போய் நம்ம மொழியே தெரியாத பொண்ண எடுத்திங்கன்னா., அதுவும் கூட,
அம்மா அப்பாவை கண்போல் பார்த்தும்
மாமா மாமியை அண்டவிடாமலும்
இந்த 2 வரிக்கு ஒத்து வராது... ஏன்னா எந்த நாட்டிலயும் பெத்தவங்கள அண்ட விடாத பெண்கள் கிடைக்கமாட்டாங்க!... பெத்தவங்களையே அண்ட விடாதது... நம்ம தலையில அண்டாவத்தான் போடும்! எனவே உங்க வரிகளைத்தான் இதுக்கு பதிலாத்தரணும்.
அப்படியொருத்தி உலகில் இல்லை..
தேடுதல் அலைச்சல்... கால விரையம்...!