முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொசுக்கடியில் இருந்து தப்புவது எப்படி?



என்னடா இது.. இவன் ஒரு அல்பமான மேட்டரோட இன்னைக்கு கெளம்பி இருக்கானேனு நீங்க முனுமுனுக்கறது காதுல விழுது. ஆன இது அவ்வளவு லேசான சமாசாரமில்லைங்க... கொஞ்சம் வெவரமா இருந்தா இத படிச்சி தப்பிச்சிக்கங்க.. இல்லையா, உங்க பாடு... கொசுவண்ணார் பாடு..

1. மொதல்ல ஒரு கொசு கடிக்க ஆரம்பிச்சதும் அதை அடிக்காம அப்படியே அமைதியா சிரிச்ச மொகத்தோட ஒக்கார்ந்திருங்க. என்னது? பக்கத்துல பொண்டாட்டி படித்துகிட்டு இருக்கறப்ப சிரிக்க முடியாதா?! Try பன்னுங்க சார்... நம்பநாள முடியாதது எதுவுமே இல்லை.(பொண்டாட்டி தூங்கும் போது..ஹிஹி..) கடிக்கற கொசு லைட்டா கொளம்பிபோயி வேற எடத்துல ஒக்கார்ந்து கடிக்க ஆரம்பிக்கும்.. அப்பவும் உடாம புன்(ண்)சிரிப்போட இருங்க.. இங்கதான் இருக்கு நம்ப ராஜரகசியம். கொசு ரொம்ப நெகிழ்ச்சி ஆகி மத்த கொசுங்க கிட்ட போய் வடிவேலு ஸ்டைல்ல "எவ்வளவு கடிச்சாலும் தாங்கறாண்டி.. இவன் ரொம்ப நல்லவன்ன்ன்ன்ன்ன்னு.." சொல்லி ஓன்னு அழும்... கடிக்கறது எல்லாமே பொம்பள கொசுங்க சார்... அவிங்க அழுது முடிக்கறதுக்குள்ள விடிஞ்சிரும். இந்த சென்டிமென்டல் கேப்புல டபார்னு கவுந்துடுங்க...

2. சங்கீத பேமிலியா நீங்க? அப்போ இன்னொரு வழி இருக்கு... லைட்டையெல்லாம் அணைச்சுட்டு புள்ளகுட்டிங்களோட கமுக்கமா படுத்திருங்க.. மொதல்ல ஒரு கொசு "நொய்ங்ங்ங்..." னு ராகம் இழுத்துகிட்டே உள்ள வரும்... ஒடனே பாய்ஞ்சுபோய் லைட்ட போட்டு பொண்டாட்டி கைல மிருதங்கத்தையும் புள்ளைங்க கைல வயலினையும் ஜால்ராவையும் கொடுத்துட்டு நீங்க தம்புராவ தூக்கிக்கிட்டு படக்குனு ஒரு மைக்க(அதாங்க ஒலிபெருக்கி..) எடுத்து கொசு மூஞ்சிக்கு முன்னால நீட்டுங்க... திடீர்னு கெடச்ச லைம்லைட்டுல(அதான் லைட்ட போட்டீங்க இல்ல..?) கொசு அப்பிடியே கிர்ர்ராகி "ஈ" னு இளிக்கும்(அப்போ ஈ கொசு மாதிரி இளிக்குமானு கேக்காதிங்க..!). சும்மா டொய்ங்டொய்ங்... லொட்டுலொட்டு.. ரெண்டு தட்டு தட்டுங்க... அவ்வளவு தான். கவுந்துக்கலாம்.. சான்சு குடுத்த சபாகாரங்கள எந்த சங்கீத வித்வானாவது கடிச்சிருக்கானா என்ன?!

3. இது கிராபிக்ஸ், மார்பிங்னு கொஞ்சம் டெக்னிகல் வழி... ஒரே ஒரு கொசுவ எப்படியாவது பச்சக்குனு செவத்தோட அடிச்சி அத டைட்குளாசப்ல ஒரு போட்டோ புடிச்சிக்கங்க... உங்க தாத்தா, கொள்ளு தாத்தா, அதுக்கு முன்னாடி தாத்தானு ஒரு ஏழு பேர செட்டப் செஞ்சி அவங்க எல்லாம் செத்துப்போன கொசுமேல கம்பீரமா கைய வச்சுகிட்டு இருக்கற மாதிரி போட்டோ எடுத்து அதை முன்னாடி எடுத்த கொசு போட்டோவோட மார்பிங் செஞ்சி 5x5 ல ப்ரிண்டு போட்டு பெட்ரூம் புல்லா மாட்டிவிடுங்க... நம்ப வீரசரித்திரத்த பார்த்து கொசுங்க அப்படியே பயந்துபோயி பேக்கடிச்சுடும். ஏழு தலைமுறையா பழனில சொப்பனஸ்கலிதத்துக்கு வைத்தியம் இருக்குனு நாம நம்பறபோது, கொசு நம்ப பரம்பரை ஏழு தலைமுறையா அதுக்கு எதிரின்னு நம்பாதா என்ன?

4. சில கொசுங்க புத்தக அலமாரிலயே ஒளிஞ்சிகிட்டு இருக்கும். இதுங்கெல்லாம் இலக்கியவாதி கொசுங்கன்னு இதுல இருந்தே கண்டுபுடிச்சிடலாம். இந்த கொசு கெளம்பி கடிக்க வரும்போது கவனமா ஒரு குண்டு புக்கா எடுத்து கைல வச்சிகிட்டு படிக்கர மாதிரி பாவ்லா பண்ணுங்க... கொசு கடிக்க ஒக்கார்ந்த உடனே அதுகிட்ட ஒரு அஞ்சு நிமிசம் கருத்துக்கள பரிமாறிக்கறதுக்கு டைம் கேளுங்க... இலக்கியவாதி கொசுங்கறதால கண்டிப்பா இதுக்குன்னா உடனே ஒத்துக்கும். அப்பறம் எடுத்து விடுங்க சரக்க... சாரு ஆபிதீனை திருடியதையும், கருணாநிதிக்கு இலக்கியம் தெரியாதுன்றதயும், சுந்தரராமசாமி ஒரு அரைவேக்காடுங்கறதையும், ஜெயமோகன் ஒரு எழுத்துமெசினுங்கறதையும், மனுஸ்யபுத்திரன் ஒரு புத்தகவியாபாரிங்கறதையும், புதுமைபித்தன் ஜாதியத்த மீறி ஒன்னும் எழுதலைங்கறதையும், பொம்பள கவிஞருங்க ஏன் பச்சயா எழுதகூடாதுங்கறதயும், கெட்டவார்த்தை இல்லைனா அது இலக்கியமே இல்லைங்கறதையும் கலந்து கட்டி எடுத்துவுட்டம்னா, கொசு இப்பெல்லாம் இதுதான் இலக்கியமான்னு வெறுத்துப்போயி எங்கயாவது தூக்குல தொங்கிரும்... நாமளும் அடுத்து யார நோண்டலாங்கர நெனப்புலயே சொகமா தூங்கிறலாம்...

இவனுக்கு என்ன ஆச்சுங்கறிங்கலா? மேட்டு, லிக்விடுன்னு எதுக்குமே மடங்காத கொசுக்களோட இம்சை தாங்க முடியாம நடுராத்திரில எழுந்திரிச்சு உக்கார்ந்தா சிந்தனை இப்படிதான் போகுது... கொஞ்சம் பொறுத்துக்கங்க.. காலைல சரியாயிரும்ம்ம்...

கருத்துகள்

  1. கட்டுரை மிக அருமையாக வந்திருக்கிறது.
    கொசு அப்படி கடிச்சும் உங்க அருமை
    மனைவி தூங்கியிருக்காங்க போலிருக்கே?!
    :-) ரொம்ப சுதந்தரமா வார்த்தைகள் வந்து
    விழுந்திருக்கே!

    பாராட்டுகள்.

    அப்புறம், இந்த மூட்டைப் பூச்சி கடி இன்னும் சூப்பரா இருக்கும். ராத்திரி எல்லாம் முழிச்சி நான் எழுதி அனுப்பின கதை பரிசு கூட வாங்கியிருக்கு!

    மூட்டைப் பூச்சிகளை எல்லாம் ஒரு நாள் கொன்று போட்டோம். அப்போதிருந்து நான் கதைகள் எழுதுவதில் ஒரு தேக்கம் வந்திருப்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும். :-)

    அன்புடன்,
    'சுபமூகா'

    பதிலளிநீக்கு
  2. உங்கள் ஊக்கங்களுக்கு நன்றி... பொதுவா கொசுங்க கடிக்கறதுல ஆம்பளைங்களுக்கே முன்னுரிமை கொடுக்குதுங்க... அதுனால தான் என் மனைவி தூங்கிட்டாங்கன்னு நெனைக்கறேன்.. இல்லைனா அவங்க என் துன்பத்துல பங்கெடுத்துக்காமயா இருப்பாங்க...? :)

    உங்க கதையோட url இருந்தா குடுங்க... அத படிச்சி உங்க சோகத்தையும் பகிர்ந்துக்கறேன்....

    பதிலளிநீக்கு
  3. யப்பா, சிர்ச்சி சிர்ச்சி வகுரு புன்னாகிப் போச்சி!!

    பதிலளிநீக்கு
  4. யப்பா, சிர்ச்சி சிர்ச்சி வகுரு புன்னாகிப் போச்சி!!

    பதிலளிநீக்கு
  5. அய்யா இளவஞ்சி, இப்போ தான் படிச்சேன். விழுந்து விழுந்து சிரிக்கிறேன். எல்லாரும் ஒரு மாதிரியா பக்குறாங்க. நகைச்சுவை உங்க பதிவில் வெகு இயல்பாக ஓடுகிறது. எதை எழுதினாலும் இந்த நகைச்சுவை உணர்ச்சியை இழந்துவிடாதீர்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. உங்கள் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
  7. வாங்க அப்பூ வாங்க. இம்புட்டு நாளு எங்க போயிருந்தீங்க?

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல...

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு...