முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அடுத்தது புடிச்ச பதிவொன்னும் போடனுமாமில்ல?!


பதிவுலக நண்பர்களுக்கு எப்படித்தான் நன்றி சொல்லறதுன்னு தெரியலை! என்னத்த எழுதறதுன்னு தெரியாம கோட்டி புடிச்சபடி நம்ம மக்கா எல்லாம் பேரரசு கிட்ட மாட்டுன பரத் குத்துப்பாட்டுக்கு ஆடுற கணக்கா கணக்கு வழக்கில்லாம வகைதொகையில்லாம அடிச்சாடுறதை காதுகளில் பொகையோடு படிச்சபடி இருக்கற என்னைய கூப்புட்டு புடிச்ச படம் போடுங்க.. புடிச்ச பதிவு ஒன்னு சொல்லுங்கன்னு சொல்லி என் வயத்துல பாலை வார்க்கறாக. அதை சாக்கா வைச்சே இந்த வருசம் ரெண்டு பதிவு தேத்திட்டேன்! :) இருந்தாலும் இந்த தொடர் வெளாட்டுக்குன்னு எழுதறது நெசமாவே தாவு தீருது!

அழைப்பு வைத்த தருமிசாருக்கு நன்றிகள்! போனவருசம் நான் எழுதுனதுல எனக்குப்பிடிச்சது எதுன்னு சொல்லனுமாம்.

எனது மூன்றாண்டு கால பதிவுலக வாழ்க்கையை திரும்பிப்பார்த்தால் என் எழுத்துப் பணிக்கான (ஹிஹி.. ) கடின உழைப்பு என்பது கழுத தேஞ்சு கட்டெரும்பு ஆன... வேணாம் ரொம்ப பழசு... புரட்சித் திருமா தேய்ஞ்சு நடிகர் திருமா ஆன... வேணாம் வெவகார மேட்டரு... என்னாத்துக்கு எதுக மொகன? நேராவே சொல்லிடறேன்... 2005ல 50 பதிவுக... 2006ல 32 பதிவுக.. 2007ல 21 பதிவுக.. என்னா ஒரு வேகம்.. முன்னேத்தம் பாருங்க... இதுல இந்த வெளங்காத பதிவையும் ஞாபகம் வைச்சுக்கூப்பிட்ட வலைஞர்களுக்கு நன்றி!

எழுதுனதே 21! அதுல பாதி புகைப்பட பதிவுகள். இதுல எது எனக்குப்புடிச்ச பதிவுங்கறதெல்லாம் கொஞ்சம் ஓவரான கேள்விதான். இருந்தாலும் சுயபீத்தலுக்கு ஒரு வாய்ப்பு கெடச்சதை விட்டுட முடியுமா?

போன வருசம் மே மாசம் எழுதுன ரிசர்வேஷன் கதைதான் எனக்கு ரொம்ப பிடிச்சது. ஏன்னு சொல்லத் தெரியலை. ஆரம்பத்துல இருந்து கடைசி வரை அதை ஒரே ஃப்ளோல ஒரே சிட்டிங்கல மத்த எல்லாப் பதிவுக மாதிரிதான் அதையும் எழுதுனேன். இருந்தாலும் சொல்ல வந்த விசயத்தை குழப்பமில்லாம தெளிவா சொல்லமுடிஞ்சதுதான் அதில் எனக்கு கிடைச்ச சந்தோசம்னு நினைக்கறேன். :)

இக்குளியூண்டு பதிவு போடறதுக்கு எனக்கே ஒரு மாதிரி இருக்கு! அதனால எயித சரக்கில்லாத நேரத்தில் கைகொடுக்கும் புகைப்படத்தில் ஒன்றையும் மேல போட்டுகிறேன். இவிங்கெல்லாம் என்னோட மணப்பாறை சகாக்கள். ஜிம்மி உட்பட... "ஐஸ்பாய் வெள்ளாடலாம் வாங்கண்ணே"ன்னு கூப்டுகினு போயி முதுக பலுக்கிட்டானுவ...


அடுத்து கூப்பிட விரும்பும் 5 பேரு:

1. சுதர்சன் கோபால் - தம்பி இப்போல்லாம் இங்கிலீசு பிளாகு மட்டுந்தேன் எயிதுவேன்னு விடற பன்னாட்டு தாங்கலை! விட்டுருவமா?

2. ஜீரா - ஆளு ஸ்விஸ் போயி கொளுக்மொளுக்னு அம்சமா ஆயிட்டாப்புல.. சும்மாவே இந்தாளோட ஆட்டம் பெங்களூரூ தாங்காது!

3. ராமச்சந்திரன் உஷா - யக்கோவ்.... இப்ப நீங்க இருக்கறது துபையா.. மஸ்கிட்டா? அபிதாபியா?

4. துளசியக்கா - நீங்க எழுதறது எல்லாமே புடிச்ச பதிவுதான்.. இருந்தாலும் இதச்சொல்லி ஜகா வாங்காதீங்க...

5. இகொ - இன்னேரத்துக்கு இவரை பலபேரு கூப்பிட்டிருப்பாய்ங்க.. இருந்தாலும் என் சார்புல நானும்...


அவ்ளவ்தான் மேட்டரு!

கருத்துகள்

  1. ஆனாலும் வலைப்பதிவில் ரொம்ப ஆக்டிவா இல்லைன்னு காமிக்க எம்புட்டு கஷ்டப்படறீருய்யா!!

    //2. ஜீரா - ஆளு ஸ்விஸ் போயி கொளுக்மொளுக்னு அம்சமா ஆயிட்டாப்புல..//

    அவரு என் கிட்ட நெதர்லாந்துன்னு இல்ல சொன்னாரு! :)

    //ராமச்சந்திரன் உஷா - யக்கோவ்.... இப்ப நீங்க இருக்கறது துபையா.. மஸ்கிட்டா? அபிதாபியா?//

    அவங்க இருக்கிறது மோடியகம் அப்படின்னு இல்ல சொன்னாங்க.

    //துளசியக்கா - நீங்க எழுதறது எல்லாமே புடிச்ச பதிவுதான்.. இருந்தாலும் இதச்சொல்லி ஜகா வாங்காதீங்க...//

    நான் இவங்களை புடிச்ச படம் பதிவுக்கு கூப்பிட்டேன். அதே இன்னும் வரலை.

    //5. இகொ - இன்னேரத்துக்கு இவரை பலபேரு கூப்பிட்டிருப்பாய்ங்க.. இருந்தாலும் என் சார்புல நானும்...//

    கடைசியில் இ.வா. நாந்தேன் மாட்டுனேனாக்கும். சரி போடறேன். விரைவில். ஆனா அப்பவாவது வந்து 'படிச்சுட்டு' பின்னூட்டம் போடணும் சொல்லிட்டேன். :))

    பதிலளிநீக்கு
  2. தங்கள் உத்தரவின் படி என் 2007 பதிவுகளைப் பற்றிப் போடத் தொடங்கியாயிற்று . (ஆமாம் தொடங்கத்தான் செஞ்சிருக்கேன், இன்னும் முடியலை!)

    பதிலளிநீக்கு
  3. இளா,

    நன்றின்னேன்!

    இகொ,

    நான் வலைப்பதிவில் நெம்ப ஆக்டிவ்வா இருக்கேன்னு காட்டறதுக்காக இப்படி எழுதுனா நீங்க இல்லைன்னு காமிக்கறதுக்குன்னு சொல்லறீங்க! :) என்ன ஒலகமப்பா இது?!

    கூப்பிட்டவுக பத்தின மேலதிக தகவல்களுக்கு நன்றி. உங்க சைடு வர்றேன்...

    பதிலளிநீக்கு
  4. \\இருந்தாலும் சொல்ல வந்த விசயத்தை குழப்பமில்லாம தெளிவா சொல்லமுடிஞ்சதுதான் அதில் எனக்கு கிடைச்ச சந்தோசம்னு நினைக்கறேன். :)\\

    ரைட்டு தல ;))

    பதிலளிநீக்கு
  5. தல நம்ம இளா அண்ணே சொன்ன பதிவையும் படிச்சேன்.

    ஆனா பாருங்க எனக்கு பிடித்த பதிவு அந்த ஒரு புள்ளி பதிவு தான். அதிலும் உங்களின் தனித்துவம் இருக்கும் தல.:)

    பதிலளிநீக்கு
  6. வஞ்சியாரே போட்டாச்சு.
    மோடியின் ராஜ்ஜியத்தில் இருந்து,
    உஷா

    பதிலளிநீக்கு
  7. நான் விரும்பிப் படித்தது பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்தான்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பதிவுகளாராய்ச்சி மையத்தில் சுப்பனும் குப்பனும்...

"இந்த முறைதான் மழை பெய்ஞ்சும் கெடுத்து, பெய்யாமலும் கெடுத்து பொழப்பு நாறிடுச்சே! அடுத்தமுறையாவது ஏதாவது வீரிய விதைகளா வாங்கி நவீன முறையில நாத்து பதிஞ்ச்சா நல்ல வெளைச்சல் பார்க்கலாமே"ங்கற நப்பாசையில குப்பன், ஊருக்குள்ள பார்க்க படிச்சவரு மாதிரி இருக்கற, எப்பப்பாரு டைப்படிக்கற மிசினு மாதிரியே இருக்கற டீவி பொட்டில தமிழ்ல தட்டிக்கிட்டு இருக்கற ஓராளை போய் பார்த்தாப்புல! விசயம் தெரிஞ்சவரா இருப்பாரு போலன்னு நம்பி கோக்கு மாக்கா இருந்த அந்த ஆளுகிட்ட போயி கேட்டதுல அவரு நாத்து 'பதிய'றதை 'பதிவு' பதியறதுனு புரிஞ்சுக்கிட்டு "பதிவுகளாராய்ச்சி மையத்"தோட அட்ரசை குடுத்து அங்க நம்மூரு ஆளு சுப்பன்னு ஒருத்தரு இருக்காப்புலன்னும் சொல்லி அனுப்பிச்சிட்டாரு! நம்மாளுக்கு படிக்கத் தெரியாதுன்னாலும் அங்க இங்க கேட்டு ஒரு வழியா கண்டுபுடிச்சி போய்டாப்புல.. **** சுப்பன்: அடடே குப்பா! வாப்பா வா! எப்படி இருக்க? குப்பன்: எனக்கென்ன கேடு?! நல்லாத்தான் இருக்கேன்! இந்த நாத்து பதியற விசயமா.. சுப்பன்: அடப்பாவி! யாருப்பா உனக்கு இந்த அட்ரசை கொடுத்தது? எனக்குத்தான் விதி.. இங்க ...

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல...

இருத்தலியம் (அ) சுயபீத்தல்கள்

வா ங்கப்பு... வருசம் ஒருக்கா தீவாளிக்கு எங்கூட்டுல இட்லிக்கு போட்டிருக்கோம்கற மாதிரி நீயும் வருசத்துக்கு ஒருக்கா ஒரே ஒரு ”உள்ளேன் அய்யா”பதிவெழுதறயே... உனக்கு வெக்கமா இல்லே இளவஞ்சின்னு தானே கேக்கறீங்க? எழுதுனா என்னங்க.. பதிவுகளைப் படிச்சா என்னங்க.. வலைப்பதிவரு பதிவரு தான். பதிவுலகமும் ஒன்னும் மாறிடலை. அப்படியே தானே இருக்கு! என்னதான் இருந்தாலும் பதிவு போடலாம்னு தோணினா எழுத மேட்டரு வேணாமா? அதான் நானே என்னை மேட்டராகி வழக்கம்போல... கொசுவத்தி.... ஹிஹி... ***** போனவருசம் புத்தக கண்காட்சிக்குப் போய் 6 மணிநேரம் சுத்திசுத்தி வந்தேன். பெரியார் ஒரு பார்வைல இருந்து சாருவோட 10 புத்தகக்கட்டைத் தொட்டு சூனியம் வைச்சுக்காம ஜாக்கிரதைய தள்ளி நடந்து, நம்ப அய்யனார் புஸ்தகம் அட்டையை நின்னு ரசிச்சது வரைக்கும் செஞ்சு ஏறக்குறைய எல்லா பதிப்பகத்துலையும் பெரண்டு வந்தேன். துளசியக்கா பூனைக்குட்டி புத்தகத்தைக்கூட அங்கனயே நின்னு கால்வாசி படிச்சேன். கடைசியா என்ன வாங்குனேன்னா கேக்கறீங்க? வெளில கேண்டீன்ல சூடா மசால்தோசையும் காப்பியும்! ஆனா ஏன் ஒரு புத்தகம்கூட வாங்கத் தோணலைன்னு பயங்கற ஃபீலிங்கப் போச்சுங...