முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

க.க: 4 - புள்ள புடிக்கலாம் வாங்கப்பு!


யாருங்க அங்க?! ஆரம்பிக்கும் போதே "யோவ்! என்னைய்யா தலைப்பு இது! கெரகசாரம்"னு கொரலு விடறது? இதென்ன அவ்வளவு ஈசியான சமாச்சாரம்னு நினைச்சிட்டீங்களா? இங்க மட்டும் ஏனோதானோன்னு இருந்து கோட்டை விட்டுட்டீங்கன்னா அப்பறம் வாழ்க்கை முழுக்க தமிழ்மணமும் தேன்கூடும்தான் கதி! ஏஞ்சொல்லறேன்னா புள்ளைங்க படிச்சு முன்னேற்ற வேகத்துக்கும், அவங்க வெவரமாகற லெவலுக்கும், இருக்கற மெதப்புக்கும் போற போக்கைப் பார்த்தா இந்த வடிவேலு சரளாக்காவை புடிச்சமாதிரி, மனசுக்குப் புடிச்ச பொண்ணு வீட்டு முக்குல மறைவா நின்னுக்கிட்டு வெளில வாரப்ப ஒரு கரூர் கமுக்காளத்தை போர்த்தி அப்பிடியே தூக்கிக்கிட்டு வந்து தாலி கட்டுனாத்தான் உண்டுபோல! அதுக்கப்பறம் வாங்கப்போற விழுப்புண்களை வைகைப்புயலே தாங்கும்போது நமக்கென்னங்க?!


சரிங்க! வீட்டுல சொல்லீட்டிங்க! அவங்களும் நாலாபக்கமும் தகவலை பரப்ப ஆரம்பிச்சிருப்பாங்க! நீங்க என்ன செய்யப்போறீங்க?! வேண்டிய மாற்றங்கள் எல்லாம் செஞ்சு பார்க்க பளிச்சுன்னு மாறுனீங்களே! அதற்கு ஆதாரம் வேண்டாமா? அதனால இப்போ செய்ய வேண்டியது மேலும் பளிச்சுன்னு இருக்கறமாதிரி ரெண்டு போட்டோ எடுக்கறது! நீங்க ஆரம்பக்காலத்துல இருந்து ஆர்னால்டு சிவனேசனுக்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் ரசிகரா இருக்கலாம்! அதுக்காக கட்பனியன் போட்டுக்கிட்டு இல்லாத ஆர்ம்ஸ்சை பிதுக்கிக்காட்டற மாதிரியோ, கால்மேல கால் போட்டுக்கிட்டு "நான் மலேடா!!!"ங்கற மாதிரி விட்டத்தை பார்த்துக்கிட்டோ இருக்க போட்டோவெல்லாம் வேளைக்காவாது! ரொம்ப ஃபார்மலாவும் இல்லாம ரொம்ப இயல்பாகவும் இல்லாம ஒரு மார்க்கமா "ஆமாங்க! நீங்க மாப்ளைய பார்க்கறதுக்கவே எடுத்த போட்டோ இது"ங்கற மாதிரி இருந்தா எதேஷ்டம்! தொப்பை தெரியக் கூடாதுங்கறதுக்காக உள்ள இழுத்துப் பிடிச்சுக்கிட்டும், மேல டாப்புல காலி ஏரியா வரக்கூடாதுங்கறதுக்காக மூஞ்சியை மேல தூக்கிட்டும் ஒரு மாதிரி அவஸ்தையோட இருக்கற மாதிரி நாமளே போட்டோ எடுத்துக்கறதை விட இதுக்குன்னே இருக்கற ஸ்டூடியோல போய் எடுத்துக்கிட்டா அவங்க இதெல்லாம் தெரியாத மாதிரி அழகான ஆங்கிள்ல நல்லா சிரிச்சா மாதிரி ஒரு ஃபுல் சைசும் ஒரு ஆஃப் சைசும் எடுத்துக் குடுப்பாங்க! சர்குலேசனுக்கு இதை விடுங்க! (நானெல்லாம் கோவை IABலதான் தான் எடுத்தேன்! இன்னைக்கும் எங்க வீட்டுல அப்பப்ப "இந்த IAB மட்டும் இல்லைன்னா நமக்கு கல்யாணமே நடந்திருக்காது"ங்கற அசரீரி கேட்கும்! :) )

இன்னொன்னும் ஞாபகம் வைச்சுக்கங்க! என்னதான் பொண்ணு பிக்ஸ் ஆகி அவங்களை அடிக்கடி பார்த்து பேசுனாலும் கல்யாணம் முடியற வரைக்கும் அவங்களுக்கு இந்த போட்டோல இருக்கற முகம் தான் ஞாபகம் இருக்கும்! ஏன்னா, அவங்க தெனம் நைட்டு தூங்கப்போறது இந்த போட்டோவை பார்த்துட்டுத்தான்! (உங்க முகராசிக்கு ஏற்றபடி, ஒரு செல்ல 'இச்'சோ இல்லைன்னா பொய்க்கோப கண்ணக்கிள்ளலோ கிடைக்கலாம்! ) அதனால பொகைப்படத்தை பார்த்து பக்குவமா எடுங்கப்பு!

வாழ்க்கைல கடைசி வரைக்கும் விடை தெரியாத ஒரு கேள்வி இருக்கும்னா அது "நமக்கு எந்த மாதிரி பொண்ணு சரியா வரும்?!"கற கேள்வியாத்தான் இருக்கும்! ஏன்னா நாம எந்த மாதிரி ஆளுங்கறதே நமக்கு முழுசா தெரியாது! இன்னைக்கு டிவில "விரும்புகிறேன்" போட்டா "அடடா! பொண்ணுன்னா இப்படி சினேகா மாதிரி பாவாடை தாவணில அம்சமா இருக்கனும்"னு தோணும்! அடுத்தநாளே SCVல கஜினி பாட்டுல "சுட்டும் விழி சுடரே"ல அசின் நெளிஞ்சு நடக்கறதை பார்த்தா "கட்டுனா இந்தமாதிரி அசத்தலான புள்ளையத்தான் கட்டனும்"னு தோணும்! என்னங்க செய்யறது? நம்ப புத்தி அப்படி! அதனால ஆண்டவன் அவங்களை மட்டும் அத்தன தினுசா படைச்சு வைச்சிருக்காப்புலன்னு மனசை ஒழப்பிக்காதிங்க! ஆண்டவன் நமக்கெல்லாம் அவங்களை அத்தனை தினுசா பார்க்கற கலைக்கண்ணை கொடுத்திருக்கான்னு மனசை தேத்திக்கங்க!


இந்த குழப்பத்தை எப்படிங்க தாண்டறதுன்னு கேக்கறீங்களா? அரசியல் கட்சிகளால பொதுமக்களுக்கு எந்த பயனும் இல்லைன்னு இதுநாள் வரைக்கும் பொலம்புன ஆளா இருந்தீங்கன்னா அந்த நெனைப்பை மாத்தவேண்டிய நேரம் வந்துருச்சு! அவங்ககிட்ட இருந்து நாம இப்போ கடன் வாங்கப்போற அறிவுதான் "குறைந்த பட்ச செயல் திட்டம்"! அதாவது நாம ஆசைப்படற அத்தனை அம்சங்களும் இருக்கற பொண்ணா வேணும்னு நினைக்காம, அவசியம்னு நினைக்கற எதிர்பார்ப்புகளின்படி பொண்ணு தேடறது! ஆசைங்க எதிர்பார்ப்புங்க ஆயிரம் இருக்கலாம்! ஆனா நம் இயல்புக்கும் நம் எதிர்காலத் திட்டத்துக்கும் நம் வீட்டாருக்கும் ஏற்றபடி வரப்போகிற பெண்ணுக்கு குறைந்தது இந்த அம்சங்கள் இருந்தா போதுங்கற முடிவு! நம்ப கலருக்கு மேட்சா மாநிறமா இருந்தா போதும், பொண்ணு வேலைக்கு போகவேண்டாம்னு நினைக்கறதால டிகிரி படிச்சிருந்தா போதும்! இப்படி நல்லா ரெண்டு நாளைக்கு யோசிச்சி ஆறேழு கண்டுபிடிச்சுட்டீங்கன்னா கொழப்பமில்லாம பொண்ணு தேடலாம்! "என்னப்பு ஓவர டகால்ட்டி காட்டற?! நான் எதிர்பார்க்கற அத்தனை அம்சங்களும் கொண்ட பொண்ணு இந்த ஒலகத்துலையே இருக்காதோ?!" அப்படின்னு கேட்டிங்கன்னா கண்டிப்பா இருப்பாங்க! ஆனா அவங்கெல்லாம் அவங்களோட எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற நம்மை விட தகுதி வாய்ந்த பயகளுக்கு அமையறதுக்குதான் வாய்ப்புகள் அதிகம்! அதனால சீக்கிரம் மேட்டரை முடிங்க!


தம்ரூல் என்னன்னா, எதிர்பார்ப்புகளின் எண்ணிக்கை is directly propotional to பொண்ணு தேடற காலம்!

சொந்தத்துல சொல்லி தேடறது, புரோக்கருங்க கிட்ட சொல்லறது, பேப்பருல குடுக்கறதுன்னு இதுல நாலஞ்சு வகை இருக்கு! ஒவ்வொன்னுலையும் +ம் இருக்கு -ம் இருக்கு! முதவகைல பொண்ணை செலக்ட் செய்தா போதும்! அவங்க வீட்டுவகையறா எல்லாம் விசாரிக்கவே வேணாம்! புரோக்கருன்னா வர்றப்ப எல்லாம் காசை வாங்கிகிட்டு கத்தையா ஜாதகத்தை அள்ளி வீசுவாரு! அட்டா இத்தனை பொண்ணுகளான்னு ஆச்சரியபட்டுடாதீங்க! இதெல்லாம் அவரு இதே மாதிரி இன்னும் 100 வீட்டுல குடுத்திருப்பாரு! நீங்க இதையெல்லாம் அலசி ஆராயறதுக்குள்ள இதே மாதிரி இன்னும் 10 டெலிவரி செய்வார். அதுலையும் எதையாவது ஒன்னை செலக்ட் செஞ்சு அவருக்கு சொன்னா "அடடா! அந்த பொண்ணுக்கு நேத்துதான் நிச்சமாச்சு"ம்பாரு. நெசத்துல அது கல்யாணம் கட்டி பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்கே வந்திருக்கும்!

இந்த பேப்பருல குடுக்கறதை இன்னும் நம்மாளுங்க கௌரவக் குறைச்சலாத்தான் நினைக்கறாங்க! சொந்தபந்த ஆளுங்களுக்கு தெரிஞ்சா "அடடா! பையனுக்கு யாரும் பொண்ணு குடுக்க மாட்டாங்கறப்பா! அதான் பேப்பருல குடுத்திருக்காக"ன்னு பேச ஆரம்பிச்சுடுவாங்கன்னு பயம்! ஆனா, என்னைக்கேட்டா இதுதான் இருக்கறதுலையே ஈசியான வழி. இதோட ரீச் மிக அதிகம். ஒரே ரிஸ்க் அந்த சைடு ஆளுங்களை விசாரிச்சு அறியறதுதான்! பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சி வரைக்கும் இதுக்கு உபயோகப்படுதுன்னா பார்த்துக்கங்க! இந்த காலத்துல படிச்ச பசங்க படிச்ச புள்ளைங்களை பார்க்கறதால இந்த வகைல சீக்கிரம் மேட்டரு முடிஞ்சுரும்! கொடுக்கற விளம்பரத்துல என்ன எழுதறதுன்னு யோசிக்கவே வேணாம்! ஒரு ஞாயித்துக்கிழமை பேப்பரு இருந்தா போதும்! அதுல நம்ப மக்கா விதவிதமா வகைவகையா கேட்டிருக்கறதை ஒரு தடவை பார்த்தா நமக்கு என்ன வேணும்கறதை ஈசியா கண்டுக்கலாம்! "காலையில் கோபால் பல்பொடியில் பல்துலக்க விரும்பும், வீட்டாரின் லைப்பாய் சோப்பையே உபயோக்க விரும்பும் பெண் தேவை!"கற ரேஞ்சுல வந்துக்கிட்டு இருக்கு!


ஆண்களிலும் சில நல்ல உள்ளங்கள் இருக்குங்க! "ஒரு பெண்ணை வீடுவரைக்கும் போய் பார்த்துவிட்டு வேண்டாம்னு சொல்லமாட்டேன்! அது பாவம்", "விதவைப் பெண்ணைத்தான் கட்டிக்குவேன்" இப்படி. தப்பில்லைங்க. முதலாவது சரிதான்! போட்டோ ஜாதகம் பார்த்து பிடிச்சுப்போய், வீட்டுல இல்லாம வெளில கோவில்லையோ இல்லை பொண்ணுபய மட்டும் 'காபிடே'லையோ பார்த்து ஒருத்தருக்கொருத்தர் பிடிச்சிருக்கான்னு தெரிஞ்சுக்கறது நல்லது. இதில்லாம சொந்தபந்தம் அத்தனைபேரையும் அனுசரிச்சு போறேன்னு 15 பேரோட வாரம் இருமுறை வீடுவீடா போய் இறங்கி செலக்ட் செய்யறது கட்டாயமாக தவிர்க்கப்பட வேண்டியது! இதையும் மீறி சில பல காரணங்களால் அமையலைன்னா இதுக்காக வருத்தப்பட வேண்டியதில்லை! இந்த அரேஞ்ச்டு மேரேஜ்ல இதெல்லாம் தவிர்க்க முடியாது. இரண்டாவது, ஒரு பெண்ணை பிடித்துப்போய் "இவள் என் வாழ்க்கைத் துணையாக வந்தால் மகிழ்வேன்! விதவை என்பது பிரச்சனையில்லை! மனதார ஏற்றுக்கொள்வேன்" என்று ஒரு திருமணம் செய்வது வேறு! "ஒரு விதவைக்கு வாழ்க்கை தருவதே என் லட்சியம்! அதனால் கட்டினால் கைம்பெண்தான்" என சொல்லிக்கொண்டு 10 விதவைகளை பார்த்து அதில் நல்ல விதவையாய் தேர்ந்தெடுத்து திருமணம் செய்வது வேறு! தேர்ந்தெடுக்கும்போதே அந்த நோக்கம் அடிபட்டுப் போகிறது. திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் செய்யும் தியாகமோ, போடப்படும் பிச்சையோ, கொள்கைப்பிடிப்பை நிறுவுவதற்கான காரணியோ அல்ல!


ஜாதகம் என்பதையும் உங்கள் வீட்டு பெருசுகளின் மனத்திருப்திக்காகவும் உங்களின் திருப்திக்காகவும் என்ற அளவில் மட்டுமே பாருங்கள்! பொண்ணு போட்டோ பிடிச்சிருக்கு, 10க்கு 7 பொருத்தம் இருக்கு! செய்யலாமா? சந்தோசம்! வீட்டு ஆளுங்களை பிடிச்சிருக்கா சந்தோசம்! பேசிப்பார்த்ததுல விசாரிச்சுப்பார்த்ததுல ஒத்து வரும்னு தோணுதா! சந்தோசம்! நிச்சயத்தை வைச்சுக்க வேண்டியது! நாள் குறிச்சு முகூர்த்தத்தை வைச்சுக்க வேண்டியது! அவ்வளவுதான்! இதில்லாம பொண்ணு பார்க்க போறது, தாலி வாங்கறது, புடவை என்ன கலர் ராசி, நிச்சியத்துக்கு அப்பறம் பொண்ணு வீட்டை விட்டு வெளில போலாமான்னு தொட்டது தொன்னூருக்கும் ஜோசியரை கேட்டுக்கிட்டு இருந்தம்னா நம்ப விருப்பத்துக்கு இல்லாம கல்யாணம் ஜோசியரு விருப்பத்துக்குதான் நடக்கும்!

போன பதிவுல நம்பகமா நெளிவுசுழிவோட பேசறதுக்கு ஒருத்தரு வேணும்னு சொன்னேன்ல! அது பொண்ணு இதுதான்னு கண்ணுபிடிச்சப்பறம் ரெண்டு சைடுலையும் நல்ல விதத்துல பேசி முடிக்கறதுக்கு! சிலதெல்லாம் நேருக்குநேரா கட்ரைட்டா பேசமுடியாது! அதுக்கெல்லாம் இவுகதான் கரெக்ட்டு! "கல்யாணத்தை கோவில்லதான் வைக்கனும்.இது எங்க பரம்பரை வழக்கம்"னு நாம சொல்ல, "முடியாது! எங்களுக்கு ஒரே பொண்ணு! சிறப்பா மண்டபத்துல தான் செய்யனும்"னு அவங்க சொல்ல, இந்த மாதிரி ஆளுக "சரிங்க! முகூர்த்தத்தை மட்டும் காலைல கோவில்ல வைச்சுக்கலாம், தாலி கட்டுன உடனே நேரா மண்டபம்தான்! மத்தியான விருந்துல இருந்து சாயந்தர ரிசப்சன் வரை கிராண்டா கொண்டாடிலாம்"னு ரெண்டு பக்கமும் காயப்படாம பேசி முடிக்கறதுக்கு இவங்க உதவி கட்டாயம் தேவை!

நானெல்லாம் வரதட்சணை வாங்க கூடாதுங்கற கட்சி! அதுக்காக உங்களையும் அப்படி செய்யறதுதான் கரெக்டுன்னு இங்கு வாதாட விரும்பலை! குடும்ப கவுரவம், எங்க பொண்ணுக்கு செய்யறோம்னு இதுல ஆயிரத்தெட்டு அரசியல் இருக்கு! அதனால எதிர்பார்ப்புகளை தெளிவா இதது இப்படித்தான்னு கேக்கறது எவ்வளவோ நல்லது! அவங்களும் முடிஞ்சா செய்யறோம், இல்லைன்னா வேற இடம்னு போயிருவாங்க! இதெல்லாம் இல்லாம "எங்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை! உங்க சக்திக்கு முடிஞ்சதை செய்யுங்க" அப்படிங்கறது நமக்கு வேணா நாகரீகமா சொல்லறதா இருக்கலாம்! ஆனா அந்த சைடு கொழ்ம்பிருவாங்க! எது செஞ்சாலும் குத்தமா போயிருமேன்னு படபடப்பாவே இருக்கும்! செஞ்சதுக்கப்பறம் "இது நொள்ளை! அது கம்மி"ன்னு சொல்லறதுக்கே நம்மாளுக நாலுபேரு கூட இருப்பாங்க! ஞாபகம் வைச்சுக்கங்க "சொம்பு சைசு சின்னது"ன்னு வீம்பு புடிச்ச ஆளுங்க எல்லாம் செயிலுக்கு போறவரைக்கும் எல்லாம் மேட்டரு போயிருக்கு!


போன பதிவுலையே கடைசியா சொல்லாம விட்ட மேட்டரு ஒன்னு! ஏதோ இப்போத்தான் மழைக்கு போதிமரத்துக்கு கீழ தெரியாம ஒதுங்கிட்ட மாதிரி ஒரு நல்லெண்ணம் மனசுல வந்து கல்யாணத்துக்கு முன்னாடி ஓடம்பைத் தேத்தனும், வெயிட்டை குறைக்கனும், தேகத்துல 'தெம்பு' கூட்டனும்னு ஒரு துடிப்பா இருக்கும்! அப்படின்னா இந்த ஜிம்முக்கு போறது, காலைல பால்காரனுக்கு இணையா ஓடறதுன்னு எதையாவது இப்போவே ஆரம்பிச்சுடுங்க! இதெல்லாம் இல்லாம கல்யாணத்துக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடிதான் இந்த ஐடியா வந்ததுன்னா ஒன்னுத்துக்கும் வேலைக்காவாது! இவ்வளவு நாள் ஊத்தி ஊத்தி ஊறப்போட்ட கல்லீரலையும், ஊதி ஊதி கறையாக்குன நுரையீரலையும் ஒரே மாசத்துல மீட்டு கொண்டுவந்துடலாம்னு கடைசி கட்டத்துல ஜிம்முக்கோ, ஏரோபிக்ஸ்சுக்கோ போய் அங்க இங்க புடிச்சிக்கிட்டு முகூர்த்தத்துல தாலியை தூக்கமுடியாம போனாக்கூட பரவாயில்லை... பின்னாடி நின்னு யாராவது சித்தி, அக்கான்னு உதவுவாங்க! ஆனா அதுக்கப்பறம்... ஆமா... சொல்லிட்டேன்!


உங்களைப் பற்றிய சுயமதிப்பீடுகளோடு இருங்கள்! உங்கள் எதிர்பார்ப்புகளை நியாயமானதாக வைத்துக்கொள்ளுங்கள்! ஒரு பெண்ணை உங்கள் மனைவியாக ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்வதன் மூலம் அவள் மட்டுமல்ல, அவள் குடும்பத்தாரும் நம் உறவாகப்போகிறார்கள் என்பதை நினைவில் வையுங்கள்!

இன்னைக்கு அவ்வளவுதாங்க மேட்டரு!

--------

கருத்துகள்

  1. இந்த எடத்துல மணல் கயிறு
    எஸ். வி சேகரூ மாதிரி லிஸ்டு போடும் பையன்களை விலாவாரியாய் சொல்லியிருக்கலாம் :-)))
    கடைசியில், முப்பது வயதை தாண்டியப்பிறகு, கல்யாணம் ஆனால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்படும் சோகத்தையும் சொல்லணும்.

    பதிலளிநீக்கு
  2. //மேல டாப்புல காலி ஏரியா வரக்கூடாதுங்கறதுக்காக மூஞ்சியை மேல தூக்கிட்டும் ஒரு மாதிரி அவஸ்தையோட இருக்கற மாதிரி நாமளே போட்டோ எடுத்துக்கறதை விட..//

    நான் வந்துட்டேனுள்ள, ஐயா எனக்கு இந்த விஷயத்தில் உதவுவீங்கன்னு தான் சிலேட்டை எடுத்துக்கிட்டு வந்து உட்கார்ந்துக்கிட்டிருக்கேன்.

    நல்லா போட்டோகிராபரா இருந்த அட்ரசை தனிமெயில் அனுப்பவும்.

    இப்படிக்கு
    ஒரு முசூம

    பதிலளிநீக்கு
  3. //எதிர்பார்ப்புகளின் எண்ணிக்கை is indirectly propotional to பொண்ணு தேடற காலம்!//
    ஏப்பு கொழப்புறீங்க? டைரக்ட்லிதானே?

    பதிலளிநீக்கு
  4. >திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் செய்யும் தியாகமோ, போடப்படும் பிச்சையோ, கொள்கைப்பிடிப்பை நிறுவுவதற்கான காரணியோ அல்ல!


    Super!

    (off to read the rest)

    பதிலளிநீக்கு
  5. இந்தப் பதிவுலே அந்த 'நாய்கள்' படம் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  6. //திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் செய்யும் தியாகமோ, போடப்படும் பிச்சையோ, கொள்கைப்பிடிப்பை நிறுவுவதற்கான காரணியோ அல்ல!//
    நச்!!

    //உங்களைப் பற்றிய சுயமதிப்பீடுகளோடு இருங்கள்! உங்கள் எதிர்பார்ப்புகளை நியாயமானதாக வைத்துக்கொள்ளுங்கள்! //
    எல்லாருக்கும் பொருந்தும் இளவஞ்சி. நியாயமாக எதிர்பார்த்தும் கிடைப்பது/நடப்பது வேறொன்றாக இருக்கும் பட்சத்தில் செய்யக்கூடியவைகள் என்ன என்பதையும் வரும் பதிவுகள்லே சொல்லுவீங்க என்று நம்புறேன்.

    பதிலளிநீக்கு
  7. //கட்பனியன் போட்டுக்கிட்டு இல்லாத ஆர்ம்ஸ்சை பிதுக்கிக்காட்டற மாதிரியோ, கால்மேல கால் போட்டுக்கிட்டு "நான் மலேடா!!!"ங்கற மாதிரி விட்டத்தை பார்த்துக்கிட்டோ //

    இது எங்கயோ நம்ம தமிழ் மணம் மக்கள கிண்டலடிக்கறா மாதிரி இருக்குதே?

    பதிலளிநீக்கு
  8. வாத்தியாரே,

    சில நடைமுறை விஷயங்கள நச்சுன்னு சொன்னீங்க. வரதட்சனை, சீரு, முறை etc. etc.

    indirectly படிச்சவுடனே அட வாத்தியே தவறிட்டாருப்பா, சொல்லாம்னு தோடர்ந்து படிச்சா, நமக்கு முன்னாடி கதிரு சொல்லிபுட்டாரு :(

    பதிலளிநீக்கு
  9. நீங்க பார்த்தா சரி'ன்னு ஒரு வார்த்தை வீட்டுல சொல்லிட்டு நான் பட்ட கஷடம் இருக்கே.. நான் கூட இந்த மாதிரி ஒரு தொடர் போடலாம் போல.. அனுபவங்கள் ஆரம்பம் :)

    //இது எங்கயோ நம்ம தமிழ் மணம் மக்கள கிண்டலடிக்கறா மாதிரி இருக்குதே?// நீங்க யாரை பத்தி பேசரீங்க அனுசியா??

    பதிலளிநீக்கு
  10. உஷா,

    //கல்யாணம் ஆனால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்படும் சோகத்தையும் சொல்லணும்//

    சொல்லலாம்தான்! இதுக்கே "மகனே! நீ பேச்சு ஓவரா பேசற"ன்னு கொரல் வருமோன்னு பயமா இருக்கு! :)

    அதனாலதான் //அவங்கெல்லாம் அவங்களோட எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற நம்மை விட தகுதி வாய்ந்த பயகளுக்கு அமையறதுக்குதான் வாய்ப்புகள் அதிகம்! // இதோட முடிச்சுட்டேன்! :)
    ****
    மோகன்தாஸ்,

    மத்த ஊர்களைப்பற்றி எனக்கு தெரியாது! ஆனா கோவைன்னா அது IAB தான்! இதெல்லாம் இப்போ ஒரு மேட்டரே இல்லைன்னேன்! மண்டைல ப்ளாட் வாங்கற வயசெல்லாம் 30க்கு வந்துருச்சு! பொண்ணுகளும் ஆரம்பத்துல சிலுப்புவாய்ங்க! அப்பறம் நம்ம + எல்லாம் பார்த்து டபுள் ஓகேதான்! எப்படி இப்படி உறுதியா சொல்லறேன்னா... எந்த +ம் இல்லாத எனக்கே முடிஞ்சிருக்குன்னா பாருங்க! :)

    ****
    கார்த்திக்ராமாஸ்,

    // ஏப்பு கொழப்புறீங்க? டை ரக்ட்லிதானே? //

    பொண்ணு பார்க்க ஆரம்பிக்கற காலத்துல நமக்கும் வீட்டுலையும் ஆயிரத்தெட்டு எதிர்பார்ப்பு இருக்கும்! நாளாக நாளாக, அலையற அலைச்சலும், அமையாத இடங்களும் அதற்கான காரணங்களும் சேரச்சேர எதிர்பார்ப்புகள் கொறைஞ்சுக்கிட்டே வந்து ஒரு பேலன்சாகி நிற்கும்!

    இப்போ சொல்லுங்க indirectly propotional கரெக்டான்னு! இதுவும் தப்புன்னா அப்பநான் எங்க +2 கணக்கு வாத்தியார் சட்டநாதன் அவர்களைத்தான் தேடி ஓடனும்! :)

    பதிலளிநீக்கு
  11. Premalatha,

    வரனும்! :)

    ****

    துளசியக்கா,

    //இந்தப் பதிவுலே அந்த 'நாய்கள்' படம் சூப்பர்.//

    அதானே! அதத்தவிர வேற ஒன்னுமே இல்லைங்கறீங்க! கொமட்டுல குத்துங்கன்னா... இப்படியா உங்க யானைய விட்டு மெதிக்கறது!? :)

    ****
    'மழை' ஷ்ரேயா,

    //என்ன என்பதையும் வரும் பதிவுகள்லே சொல்லுவீங்க என்று நம்புறேன்//

    அதுக்குள்ள இதைப்பத்தி சொல்லற அளவுக்கு எனக்கும் யோசிக்கமுடியும் என நம்புகிறேன்! :)

    பதிலளிநீக்கு
  12. அனுசுயா,

    //இது எங்கயோ நம்ம தமிழ் மணம் மக்கள கிண்டலடிக்கறா மாதிரி இருக்குதே? //

    இப்படிவேற ஒரு மேட்டரு இருக்கா?! இதெல்லாம் யாராருன்னு எனக்கு ஒரு தனிமெயில் போடுங்களேன்! (இந்த கிசுகிசு கேக்கற ஆர்வம் இருக்கே!? : )

    ****
    நந்தன்,

    //அட வாத்தியே தவறிட்டாருப்பா//

    இந்த உலத்துல இந்த மாதிரி அறுக்கறதுக்கு இந்த வாத்தியாரை விட்டா வேறாளு அடிச்சிக்கதுக்கு இல்லைங்கறதால நீங்க கொஞ்சம் பாதிக்கப்பட்டிருக்கலாம்! அதுக்கான "தவறிட்டாருங்கற"தெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லை!? :))))

    மேல கார்த்திக்கு சொல்லியிருக்கேன்! சரியான்னு பாருங்கப்பு!

    பதிலளிநீக்கு
  13. இப்பிடிப் போட்டு வார்றீங்களே.. வீட்டுக்காரம்மா இந்தப்பக்கம் வர்றதில்ல போல!!! :O)

    பதிலளிநீக்கு
  14. //அப்படின்னா இந்த ஜிம்முக்கு போறது, காலைல பால்காரனுக்கு இணையா ஓடறதுன்னு எதையாவது இப்போவே ஆரம்பிச்சுடுங்க! //

    கூடவே, ராத்திரியிலும் பல் தேய்க்கிற பழக்கத்த ஆரம்பிச்சுடலாம்... ;-)

    பதிலளிநீக்கு
  15. உங்களைப் பற்றிய சுயமதிப்பீடுகளோடு இருங்கள்! உங்கள் எதிர்பார்ப்புகளை நியாயமானதாக வைத்துக்கொள்ளுங்கள்! ஒரு பெண்ணை உங்கள் மனைவியாக ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்வதன் மூலம் அவள் மட்டுமல்ல, அவள் குடும்பத்தாரும் நம் உறவாகப்போகிறார்கள் என்பதை நினைவில் வையுங்கள்!

    அருமையான அறிவுரை.நன்றிங்ணா!!.
    இது கல்யாணமாகாத பொண்ணுகளும் படிக்க வேண்டிய பதிவுண்ணா!!!.

    அன்புடன்,
    துபாய் ராஜா.

    பதிலளிநீக்கு
  16. //தம்ரூல் என்னன்னா, எதிர்பார்ப்புகளின் எண்ணிக்கை is indirectly propotional to பொண்ணு தேடற காலம்!
    //

    எதிர்பார்ப்புகளின் எண்ணிக்கை அதிகம்ன்னா பொண்ணு தேடற காலம் அதிகம்... எனவே இது directly propotional தான்...

    பதிலளிநீக்கு
  17. இளவஞ்சி.. எல்லா படமுமே சூப்பருங்க.. நல்லா இருக்கு..:)

    துபாய் ராசா, உள்குத்தெல்லாம் வேண்டாம்.. எல்லாம் பொண்ணுங்களுக்கு புரிஞ்ச மேட்டர் தான் :)

    பதிலளிநீக்கு
  18. மழை ஸ்ரேயா,

    //வீட்டுக்காரம்மா இந்தப்பக்கம் வர்றதில்ல போல!!! // எப்படிங்க வருவாங்க?! நான் வடதுருவத்துல இருந்தா அவங்க டெந்துருவத்துல இருக்கறது தானே உலக இயல்பு?! :)))

    ****

    பெத்த ராயுடு,

    //ராத்திரியிலும் பல் தேய்க்கிற பழக்கத்த // புரியுதப்பு! :)

    ****

    துபாய்ராஜா,

    //இது கல்யாணமாகாத பொண்ணுகளும் படிக்க வேண்டிய பதிவுண்ணா!!!.//

    இதைப்பத்தி எனக்கு கருத்து எதுவும் இல்லங்னா! நான் அப்பாவி!

    பதிலளிநீக்கு
  19. உதய்குமார்,

    //எதிர்பார்ப்புகளின் எண்ணிக்கை அதிகம்ன்னா பொண்ணு தேடற காலம் அதிகம்... //

    அடடா இப்படியா மேட்டரு! இதுக்கு இதான் அர்த்தமா?! நன்றிங்க!

    இதை எழுதறப்ப நான் சொல்லலாம்னு நினைச்சது என்னன்னா... காலம் ஆக ஆக எதிர்பார்ப்புகள் குறைந்து கொண்டே வரும் என்பதுதான்! ஆனா பாருங்க இதோட நிறுத்தாம ரூல்னு ஜெனரலா சொல்லப்போக எனக்கே குழம்பிருச்சு!

    ஆகவே மக்களே! சற்றே பில்டப் கொடுக்கபோக இப்படி தவறாகிவிட்டது! எனவே.. மன்னிக்க... மன்னிக்க.. மன்னிக்க... இப்பவே மாத்திடறேன்!

    ****

    பொன்ஸ்,

    //பொண்ணுங்களுக்கு புரிஞ்ச மேட்டர் தான் :) //

    புரிஞ்சா பத்தாது.. செயல்ல இருக்கனும்கறார் துபாய்ராசா... என்பதில் என் கருத்து எதுவுமில்லை என்பதை குறிப்பிட்டுக்கறேன்! :)))

    ****
    ராசா,

    //நான் கூட இந்த மாதிரி ஒரு தொடர் போடலாம் போல.. //

    அடடா! கேக்கவே சந்தோசமா இருக்கு! :)))

    பதிலளிநீக்கு
  20. Attagaasam.. Wish I had thise kinda "sound" advice/advise during my bachelor days..What do do.. Kan Ketta Piragu Suriya Namaskaram..hehehe..

    BTW, I did a recent posting on my blog with a video that might be a bit connected to what you have been writing..Remix of a song from Azaghai Irukkirai Byamai Irukkiradhu (AIBI) with video clips from Shrek.. Yes! Its hard to believe some could come upw ith something so neat.. FYI, this video has been so popular off late, that's what I hear from my readers..So, if you get a chance check it out..
    Andy

    பதிலளிநீக்கு
  21. சார் நான் முன்னாடியே கிளாசுக்கு வந்துட்டேன்!

    பதிலளிநீக்கு
  22. சிங்.செ
    //சார் நான் முன்னாடியே கிளாசுக்கு வந்துட்டேன்! //

    என் அப்பன் குதிர்குள்ள இல்லை

    பதிலளிநீக்கு
  23. பெயரில்லாசனி, மே 20, 2006 1:08:00 AM

    துபாய் ராசா, உள்குத்தெல்லாம் வேண்டாம்.. எல்லாம் பொண்ணுங்களுக்கு புரிஞ்ச மேட்டர் தான் :)

    பொன்ஸ்!!அப்போ பசங்கல்லாம் ஒண்ணுந்தெரியாத அப்பாவிங்கண்ணு
    ஒத்துக்கறீங்களா??????!!!!!!!!!.
    (ஓ!!அதான் இளவஞ்சிணா எங்களுக்கு
    மட்டும் கிளாஸ் எடுக்கிறாரோ!!!!.)

    அன்புடன்,
    துபாய் ராஜா.

    பதிலளிநீக்கு
  24. //ஒரு கரூர் கமுக்காளத்தை போர்த்தி அப்பிடியே தூக்கிக்கிட்டு//

    ஓ.அது தான் மேட்டரா???

    //அதுக்காக கட்பனியன் போட்டுக்கிட்டு இல்லாத ஆர்ம்ஸ்சை பிதுக்கிக்காட்டற மாதிரியோ, கால்மேல கால் போட்டுக்கிட்டு "நான் மலேடா!!!"ங்கற மாதிரி விட்டத்தை பார்த்துக்கிட்டோ இருக்க போட்டோவெல்லாம் வேளைக்காவாது//

    ரைட்.ரைட்..நீங்க அவங்களைத் தான சொல்றீங்க???


    //இந்த மாதிரி ஆளுக "சரிங்க! முகூர்த்தத்தை மட்டும் காலைல கோவில்ல வைச்சுக்கலாம், தாலி கட்டுன உடனே நேரா மண்டபம்தான்! மத்தியான விருந்துல இருந்து சாயந்தர ரிசப்சன் வரை கிராண்டா கொண்டாடிலாம்"னு ரெண்டு பக்கமும் காயப்படாம பேசி முடிக்கறதுக்கு இவங்க உதவி கட்டாயம் தேவை!//

    ரெண்டு வீட்டாருக்கும் மீடியேட்டர் மாதிரி இருக்கிற இவங்க தங்களோட எல்லைகளை சரியாப் புரிஞ்சு அதுக்கு ஏத்த மாதிரி செயல்படணும்.தன்னோட பேச்சு இந்த இடத்தில நல்லா செல்லுபடியாகுதுன்னு ஓவரா ஆடிறவங்களை நேர்ல பார்த்ததினால சொல்றேன்.

    //பின்னாடி நின்னு யாராவது சித்தி, அக்கான்னு உதவுவாங்க! ஆனா அதுக்கப்பறம்... ஆமா... சொல்லிட்டேன்!//

    ஹி..ஹி...

    //உங்கள் எதிர்பார்ப்புகளை நியாயமானதாக வைத்துக்கொள்ளுங்கள்! ஒரு பெண்ணை உங்கள் மனைவியாக ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்வதன் மூலம் அவள் மட்டுமல்ல, அவள் குடும்பத்தாரும் நம் உறவாகப்போகிறார்கள் என்பதை நினைவில் வையுங்கள்!//

    Bulls Eye!!!

    வாத்யாரே,கொஞ்ச வேலை கூட இருந்தது.அதனால மொத மூணு கிளாசுக்கு வந்து அட்டணன்ஸ் கொடுக்க முடியலை.

    பதிலளிநீக்கு
  25. //திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் செய்யும் தியாகமோ, போடப்படும் பிச்சையோ, கொள்கைப்பிடிப்பை நிறுவுவதற்கான காரணியோ அல்ல!//

    சத்தியமான வார்த்தைகள். நிச்சயம் கடைபிடிப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்.

    நம்ம கொள்கைக்கேத்த பொண்ணா தேடுறது எந்த அளவுகோல்ல வரும்??

    இல்லை அது சாத்தியமற்றதா???

    வாத்தியாரே கடைசி வகுப்புக்கு தாமதமா வந்ததுக்கு மன்னிச்சுக்குங்க....

    பதிலளிநீக்கு
  26. Me too joined the class..

    Namalum ready appadinu eppadi solrathu ...inda madir class'le ukkanda thane teriyum :):)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு